Friday, February 26, 2016

மாலையில் தோள்சாயும்

மாலையில் தோள் சாயும்
நிலவே உன் மேல் கோபம்
தனிமை நீ தந்ததாலே ................
ஏங்கி நான் நோகிறேனே

காதலால் நான் பட்ட காயம்
நிலவே உன் மேல் கோபம்

(அய்யய்யோ நான் ரம்போ பாவம்
காதலால் நான் பட்ட காயம்)




Friday, February 19, 2016

விழி சிறையில் நுழைந்தாய்

விழி சிறையில் நுழைந்தாய்
சிறகுகள் போல் பறந்தாய்

நீயோ ரம்போ பாவம்
நீ என்ன செய்ய கூடும்

எல்லாம் தெரிந்திருந்தும் உன்னை
காக்க செய்வதில் இல்லை
நியாயம்

நம் பிழைகளை எண்ணி
வருந்துவது அபத்தம்
மாறாக
நாம் மஞ்சம் சேர்வதே
பொருத்தம்

வருகிறேன்
தருகிறேன்
என்னை


ஏன் தயக்கம்

என்னை கடந்து என்னை கற்றுகொள்ள
என்னிடம் உன்னை தந்து என்னை பெற்றுகொள்ள

ஏன் உன்னிடம் தயக்கம் ?





கனவுகளின் நாயகன்

நான் கனவுகளின் நாயகன்
நீ அதில் மிதந்து வரும் தேவதை

மின்னும் மலர் மழை பொழியும்
 வண்ண நட்சத்திரங்கள் மிளிரும்

பருவ காலங்கள் நம் எண்ணம் போல் நிகழும்
நேரமும் நாளும் நகராமல் திணறும் (நிற்கும்)


to be continued


அன்பின் அவமானம்

அன்பின் நிமித்தம்
இவ்வளவு தூரம் இறங்கி வந்து
விட்டுகொடுத்த பிறகும்
என்னை  மதிக்கவில்லை என்னும் போது
அசிங்கத்தை விட
அவமானம் தான் அதிகமா இருக்கு

ஏதோ ஏமாந்த உணர்வு
மனமெல்லாம் படர்ந்து
கண்ணீராய்  வெளியேறுகிறது