Sunday, May 1, 2016

வாசித்தவன்

அவள் ஒன்றும் புரியாத புதிர் அல்ல
என் முன்னே திறந்த புத்தகமாய் விரிந்து கிடக்கிறாள்
எத்தனையோ முறை வாசித்து விட்டேன்
சற்றும் சுவாரசியம் இல்லா
எழுத்துக்கள் உடையவள்

மீண்டும் வாசி என தொந்தரவு செய்கிறாள்
போதும்
அவளை வாசித்து வாசித்து அலுத்து விட்டேன்