Tuesday, June 21, 2016

எல்லாம் கவிதைதான்

குழந்தையின்  மழலையும் கவிதைதான்
தாயின்  தாலாட்டும் கவிதைதான்

நிலவை  காட்டி நிலா சோறு ஊட்டிய கைகளும் கவிதைதான்
ஓடியதும் விளையாடியதும் அடியாதும் பாடியதும்  கவிதைதான்

காதல் தேடியதும்
காதல் கூடியதும்
காமம் நாடியது கவிதைதான்

ஏக்கமும்
தாக்கமும்
ஊக்கமும் கவிதைதான்

எய்தலும்
கொய்தாலும்
பொய்களும் கவிதைதான்

ஆக்கலும்
தாக்கலும்
அழித்தலும் கவிதைதான்

காகம் கரைத்தலும்
நாய் குறைத்தலும்
ஓநாய் ஊளையும் கவிதைதான்

அண்டம் பண்டம் திண்டம்
சர்வலோகமும் சர்வகாரணீயும்
  கவிதைதான்