Saturday, June 18, 2016

தேவதையாக

ஒரு தேவதையிடம்
என் மனதை கொடுத்தேன்
அதை எடுத்து கொண்டு
வேற் ஒருவனுடன்
பறந்துவிட்டாள்

தேவுடியாள் என்றும்
திருட்டு முண்டம் என்றும்
அவளை திட்டி தீர்த்தேன்

என்னிடமிருந்து இட்டு சென்றவன்
அவள் சிறகினை உடைத்து
நடு வீதியில்
விட்டு சென்றான்

அதை  கேள்விப்பட்டு
துடி துடித்து போனேன்

ஐயோ பவம்
என்று பரிதவித்து போனேன்

இரக்கத்தை
அள்ளி விசினேன்
அன்போடு அரவணைத்தேன்

என் நிழல் கூட
அவள்மேல் விழாமல்
உடைந்த சிறகினை தைத்து
நம்பிக்கை யூட்டி
பறக்க செய்தேன்
மீண்டும்
தேவதையாக