Tuesday, March 14, 2017

ஊரும் சாதியும்

ஒரு ஊருக்குள்ளே
வடக்கு தெரு தெற்கு தெரு
மேல் (ஊர்) பாக்கம் கீழ் (ஊர்) பாக்கம்
பெரிய ஊர் சின்ன(சிறிய) ஊர்

கழனி உடையவன் மேல தெரு
காலணி இல்லாதவன் காலனி

(ஊர்) மதிப்பு செறிவுடையவன் சொந்தம் செல்வந்தன்
பொது இடத்தில் சேர்க்கை இல்லாதவன் சேரி

இரட்டை குவளை ஒழியலாம்
ஊரும் பெயரும் அதன் இரட்டை அடையாளமும் ஒழியுமா ?

சவம் கடக்க பாதை மறுப்பு என்கிற அநீதிகளை
இன்றைய சந்ததிகளுக்கு சொன்னால் புரியுமா ?
-----------------


சொல்பவனை பார்த்து
உன்னை நீ அடையாளப்படுத்துகிறாய் என்றால்
வேறு வழி ?

அரசு ஆவணமாக தட்டினோம் திறக்கவில்லை
அதிகார சாவியால் திறந்தோம்
ஈயம் பூசிய களிமண் சாவி தான் உடைந்தது
ஆத்திரத்தில் அனைவருக்கும் சமநிலை என்று எட்டி உதைக்க போகிறோம்
(அருகாலுடன்) கதவு நிலையுடன் பெயர்ந்து உடையப் போகிறது