Friday, July 29, 2016

அன்பிலே

ஓடம்  அது  ஓடும்
நதியின் போக்கினிலே
துடுப்பின்  தொடுப்பிலே  திசை  மாறும்
அன்பிலே
உனதன்பிலே


நம் குப்பைகள்

நாம் நமக்குள் இருக்கும் குப்பையை  தூக்கி போட்ட  பிறகு
அதை  யார் மீண்டும் எடுக்கிறார்கள் (எடுப்பார்கள்)  என்று  கவலை  படக்கூடாது
கண்காணிக்க  தொடங்கினால்
கவலை  எனும் குப்பை
நமக்குள் குடி ஏறும்
கடந்து செல்வோம்

முழு நிறையாக இருந்தாலும்
சிறு குறை காண ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.
நம் நிம்மதி பெருமூச்சை நிறுத்த பார்க்கிறது
அதை (அதன்மேல்) நீந்தி கடந்து செல்வோம்


Thursday, July 28, 2016

வான்மம் உடைத்தேன்

நான் நிறைவானவன் இல்லை என்பது எனக்கு தெரியும்
ஆனால்
உன்னைவிட குறைவானவன் இல்லை என்பதை
உனக்கு முதலில் புரிய வைத்து விடுவேன்.
நியாயம் என்றால் மன்னிப்பு கேட்கவும் தயங்க மாட்டேன்.
இல்லை என்றால்
நான் அடக்கி வைத்துள்ள வன்மத்தை கட்டவிழ்த்துவிட்டு
அடிக்கிற அடியில்
உன்
முத்திர பை உடைந்துவிடும்..


Wednesday, July 27, 2016

பாராட்டிகொள்கிறேன்

பலரின் பாராட்டுகள்தான்
நம்மை  திசை  மாற்றி விடுகிறது

அருகிலுள்ள
கரை சேர விடாமல்
பாரட்டுகளிலே தத்தளிக்கவும்
செய்து விடுகிறது


அறிஞனாகிறேன்

எனக்கு அறிவுரை சொல்லும் முன்பு
முதலில்
உங்களை நீங்களே அறிந்துகொள்ளுங்கள்
பின்பு
என்னை தெரிந்துகொள்வீர்கள்
அறிஞன் யார் என்று


எண்ண வீச்சு

நாம்
நாம் மட்டுமே
இந்த மண்ணிற்கு சொந்தம்மாக போகிறோம்
நம் எண்ணங்கள் அல்ல

முன்பே
மனதில் தேங்கி கிடக்கும்
எண்ணங்களை எடுத்து வெளியே வீசுங்கள்.

பிழைத்து போகட்டும்

Krishna Kumar G


எட்டா எதிரொலி

அறியாத புரியத ஜனங்ககிட்ட
தேவையில்லாமல் என் எண்ணக்கூப்பாட்டை
பேசிக்கிட்டு இருக்கோம்னு நினைப்பேன்.
இல்லை
எல்லாம் தெரிந்தவர்களிடம்
அறியாதவனாய் புரியாதவனாய்
பொலம்பிக்கிட்டு இருக்கோம்ன்னு
மறு கணம் நினைக்க தோன்றுகிறது

உங்கள் எதிரொலி ஏதும்
எனை எட்டாத போது


அறியாமலே

எனக்கு நன்றாக தெரியும்
உன்னால் என்னை ஏற்றுகொள்ள இயலாது என்று

ஏற்று கொண்டிருந்தால்
உனக்கு
என்னை நன்றாக தெரிந்திருக்கும்
நான் யார் என்றுமற்றவர் ருசியை தின்னாதே

மாட்டை தின்பவன் மாட்டை தின்னட்டும்
ஆட்டை தின்பவன் ஆட்டை தின்னட்டும்
பன்றியை தின்பவன் பன்றியை தின்னட்டும்
பிசாவை தின்பவன் பிசாவை தின்னட்டும்
நொறுக்கு தீனி தின்பவன் நொறுக்கு தீனியை தின்னட்டும்

அடுத்தவன் எதை தின்ன வேண்டும் என்று நியாயம் தீர்க்க நீ யார்..?

உன் மத கோட்பாடுகளை உன்னோட உன் நாவோடு ருசித்துகொள்.
மற்றவர் நாவின் ருசியை புசிக்க எண்ணாதே .


புசிக்க - அழிக்க 

Sunday, July 24, 2016

தேடல் தேவை

நம் தேவை
நம் தேடலுக்காக காத்து கிடக்கிறது
இறுதியில்
தேவையை கண்டவுடன் தேடல் முடிகிறது
முடிந்த மாத்திரத்தில்
இன்னொரு தேவை நம் புது தேடலை எதிர்நோக்க தொடங்குகிறது


திருந்தி திருத்தி

உலகை யாராலும் திருத்த முடியாது
உன்னை நீயே முதலில் திருத்திக்கொள்
உன் செயலில் உலகம் தானே திருத்திக்கொள்ளும் (திருந்திக்கொள்ளும்)


உருவமற்ற நிழல்

அவ்வப்போது              
அவள் நிழல் என்மேல் விழுகிறது
அந்த நிழலின் மொத்த உருவமும்
எங்கே இருக்கிறது என்பது மட்டும் இன்னும் புலப்பாடவில்லை.
அவள் யார்  என்பதை மட்டும் அறிய
உருவமற்ற நிழலை  பின்தொடர்கிறேன்.....


(மாற்று)
ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும்
அவள் நிழல் என்மேல் விழுகிறது
அந்த நிழலின் மொத்த உருவம்
எங்கே இருக்கிறது என்பது மட்டும் இன்னும் புலப்பாடவில்லை.
உருவமற்ற நிழலை மட்டும் பின்தொடர்கிறேன்.....

Saturday, July 23, 2016

எழுந்து முன்னே வா

எழுந்து முன்னே வா
உண்மை உறங்காது
உடைந்திடும் உள்ளம்
எளிதில் உறங்காது

உன் மூச்சின் தீ
உன் எதிரியை பொசுக்கும்
நீ வீர நடை போடு
உன் சொல்லுக்கே
உலகம் கட்டுப்படும்
கயவர் கூட்டம்
உன் நிழலை கூட கண்டு அஞ்சும்
எழுந்து முன்னே வா

வாழ்க்கை  வாழ்வதற்கே
நீ பலி ஆடு  அல்ல
பயந்து  ஒதுங்காதே..

வானம் வரை உனதே
விடியல்  வரும்  என்று காத்து  நிற்காதே

வாள்கள் உறைக்கு சொந்தமில்லை
எழுந்து எடுத்து வீசு
உரைக்கும் வரை வீசுThursday, July 21, 2016

பிடித்தது

அவளுக்கு பிடித்தது எல்லாம்
எனக்கும் பிடிக்கும்
என பழகி பார்த்தேன்
பிடித்தது அவளுக்கு பிடித்தது
எனக்கும் பிடித்தது
அவளுக்கும் பிடித்தது
எனக்கும் பிடித்தது


Wednesday, July 20, 2016

வர்ணச்சாரம்

நேற்று  தேவுடியளிடம்  வந்தது

பார்ப்பனன்
பிள்ளையன்
முதலியான்
ரெட்டியன்
செட்டியன்
கவுண்டன்
வன்னியன்
பறையன்

இன்று
தேவுடியாள்  இறந்து விட்டாள்

அவள்  இறுதி சடங்குக்கு  யாரும் வரவில்லை

அதை  எந்த  சாதி  முறைப்படி  செய்வது
என்ற  குழப்பத்தில்

வெட்டியான்.
Tuesday, July 19, 2016

காலை பாடல்

காலையில் எழுந்த உடன் ஏதோ ஒரு பாடல் உள்நெஞ்சில் தொற்றிகொள்ளும்....
 நாள்முழுவதும் செவிகளில் வசித்து கொள்ளாமல் கொல்லும்.
சும்மாவிடமாட்டேன் உன்னை என்று என் எண்ணங்கள் முழுமையும்
அந்த பாடல்  திருடி செல்லும்


Monday, July 18, 2016

முழு முகம்

(Aurovile Beacheil vellaikaarikaluudan..
Ippadi oru ninaippil )

 ஒரு (சில) நுற்றண்டுகளுக்கு முன்பு  மார்பில் ஏறியதுதான் மாராப்பு
அது விலகியதுன்னு கவலை  எதற்கு
அப்படிப்பட்ட வருந்த வைக்கும் கலாச்சாரம் நமக்கெதற்கு
மேனி துறந்து முழு முகம் காண்போம்...Friday, July 15, 2016

காதல் நிலை

சொல்லாத காதல் சொர்க்கம்
இன்ப நிலை  (துன்ப நிலை)
சொல்லிவிட்ட காதல் நரகம்
துன்ப நிலை  (இன்ப நிலை)

நேரடி காமம் பிறகு காதல்
பரவச நிலை

காதலேயன்றி காமம் மட்டும் கொள்வது
கல்லுரிமஅங்கண் நிலை

காதலுமின்றி காமமுமின்றி தனியாக காய்வது
தியான நிலை

வாழ்வதும் சாவது காதல் காமத்துக்காக தான்
புரிதல் நிலைசீதன சொத்து

அம்மா வீட்டு சீதனம்
அதை பெண் வழி வழியாய் எடுத்து செல்லும் சாதனம் .

அப்பாவின் சொத்து
அதை ஆண் வழி வழியாய்  வாரிசாக சுமக்கும்  முத்து.

வரதட்சணை வாங்குவதும் கொடுப்பதும் குற்றம்
அதேபோல்
தன் வீட்டில் தனக்கு ஏதும்  முறையாக சரியாக செய்யவில்லை
என பெண் வருந்துவதும் வருத்தம்
(இப்பொழுது ஆண்கள் வரதட்சணை கேட்பதைவிட பெண்கள் தங்கள் வீட்டில் சண்டையீட்டு அதிகம் பிடுங்கி வருவதுதான் அதிகம் )

மாமியார் இன்னொரு தாய் போல்
மருமகள் இனி தன் மகள் போல்
என எண்ணம் வரும் முன்னே
தனி குடித்தனம் தேட வைக்கும் முதல் இரவுகள்

திருமணம் முன்னே
தாய்யீன் பிடியில் கிடந்த
செல்ல பிள்ளை
திருமணத்துக்கு பின்னே
தூரம் செல்கிறான்
துணைவியின் பின்னே

சொத்தை பத்தை போட்டு
வாரி செல்கிறான்
வரவிருக்கும் வாரிசுக்காக

தன் வாழ்வே பிள்ளை என
வாழ்ந்தவர்கள்
வாழ்க்கை மாற்றத்தால்
வாழவழியுமின்றி
வயோதிக காலத்தில்
வாசலை பாத்து காத்து கிடக்கிறார்கள்
வாரிசு வீட்டுக்கு மீண்டும்  வருமென்றுகளவின் அளவு

கைக்கு எட்டும் தூரத்தில் களவு
அதை பறித்து விட தோணவில்லை மனதின் அளவு
                                       (தோன்றுகிறது மனதின் அளவு)


Monday, July 11, 2016

காதல் சிரிப்பு

காதலுக்கு தடைபோட்டாள்
பெருக்கெடுத்த கோபத்தை
கட்டுபடுத்தி பார்த்தேன்
கண்களில் கண்ணிர் முட்டி கொண்டது
அணை உடையும் தருணத்தில்
அவள் கண்களில் காதல் தட்டுபட்டது
சில்லென சிரித்தேன்
சிறகுகள் விரித்து பறந்து வந்து
என்னை வாரியணைத்து கொண்டாள்
அவள் கண்களில் காதல் கண்ணீராய் வழிந்தது சிரிப்புடன்.....!நான் போகிறேன்

கனவு வந்ததால் இரவு வாங்க
நிலவுக்கு போகிறேன்

துருவங்களில் தோன்றும் அரோராவை
பிடித்து  பயணங்களின் இனிமையை
உணர போகிறேன்

நெடுந்தூரம் போகிறேன்
எல்லைகள் கடந்து போகிறேன்
அல்லல்கள் இல்லா வாசல் தேடி போகிறேன்
பின்னல்கள் இல்லா உறவை தேடி போகிறேன்
கள்ளம் இல்லா உள்ளம் தேடி போகிறேன்
வேஷமில்லா  நேசம் தேடி போகிறேன்

நான் போகிறேன்.
நான் போகிறேன்.
அவளது கோவம்

வா என்றாலும் வருவதில்லை
போ என்றாலும் போவதில்லை
மன்னிப்பு கேட்டு மன்றாடினாலும் மன்னிப்பதில்லை
வேறு என்னதான் வேண்டும் என்றாலும் சொல்வதில்லை
மறுபுறம் முகத்தை திருப்பி தூக்கி வைத்து கொண்டு
பார்த்தும் பார்க்காதது போலே
பேசியும் பேசாதது போலே
பிடிவாதம் பிடித்து
என்னை அவவப்போது கொள்கிறாள்
இப்படி என்றுமே புரியாத புதிரே
அவளது கோவம்


Friday, July 8, 2016

அமைதி பூக்கள் பூக்கட்டும்

கத்தி முனையில் பூத்த பூக்கள் நாங்கள்
தெறிக்கும் தோட்டாவை விழுங்கும் மழலைகள் நாங்கள்
அணுக்கதிர் வீச்சை சுமக்கும் ஈய குவளைகள் நாங்கள்


அமைதி பூக்கள் பூக்கட்டும்


Wednesday, July 6, 2016

பேதைகள்

இங்கே கத்திகளுக்கா பஞ்சம்
புத்தி இல்லா பேதைகள்
துடுப்பில்லா பேழைகளை தொடுக்கும்
கலங்கரை நோக்கா மாந்தர்கள்
வாழும் ஈடுகாட்டில்


Tuesday, July 5, 2016

நிலவே கோபம் செல்லாதே

ஏன்  வானுடன் கோபம்
நிலவே என்னிடம் சொல்லாயோ

விண்மீன்கள் சிதறல்கள் நடுவே
வழி பார்த்து செல்வாயோ

மலைமுகடுகளின் ஓரமாய்
விழி ஒளி வீச நில்லாயோ

கடலில் மூழ்கி கரைந்து
கரை நாடி ஓடல்/தேடல் கொண்டாயோ

பூமி நிழலில் ஒளிந்து கொண்டு
 ஓர் நாள் மட்டும் இவ்விடம் இல்லாய்யோ / மறைந்தாயோ

வளர் பிறை என தோன்றி
புது விடியலை கொண்டு மீண்டும் வருவாயோMonday, July 4, 2016

கோமாளி

நான் யார் என்று தெரிந்து கொண்டேன்
இப்போதுதான் என்னையே  நான் புரிந்துகொண்டேன்
கோமாளி என்று
-----------------------------------------------------------------------------
சொல்லையும் செயலையும் பொய்யாக செய்து
செல்வமாக மாற்ற தெரியாதவனும்
என்னைப்போல்
கோமாளியே
---------------------------------------------------------------------------------------------------
ஆனால் ஏமாளி இல்லை இந்த கோமாளி
சந்தர்பங்களை பயன்படுத்தி கொள்ளும் திறமைசாலி
விட்டுகொடுத்து  வெல்லும் இவன் புத்திசாலி
---------------------------------------------------------------------------------------------------


சந்தேகம் தேடும்

கண்ணிப்பெண் தேடும்
கயவர்கர்கள்
காதலித்த  பெண்ணை
மனம் முடிப்பதில்லை

முடித்தாலும்
முழு மனதுடன் 
இணைந்து  இயங்குவதுமில்லை

சந்தேக  புற்று கொண்டு
செல்லரிப்பார்கள்