Monday, March 28, 2005

சத்தத்தில் துங்குகிறேன்

அன்று தாயின் தாலாட்டில் தூங்கினேன்
இன்று சிலிங் பேன் சத்தத்தில் துங்குகிறேன்

Thursday, March 24, 2005

பஞ்சுமிட்டாய்



ஒரு ரூபாய்க்கு கொஞ்சம் பஞ்சுமிட்டாய் வாங்கினேன்
அதை நாலு பேர் பங்கு கேட்டு 'பஞ்ச' மிட்டாய்யாக்கிட்டிங்களே  !

Wednesday, March 23, 2005

ஏய் மீன்காரி




மனசெல்லாம் அசை
கண்கள் பார்க்க துடிக்கும்;
விலகி நிற்கும் உன் மாராப்பு சீலை அது !

இரு கால்கள் இடையில்
புடவையை மடித்து வைத்து
புதையலை தேட செய்தாய்
மனதை வாட்டி எடுத்தாய்

கவர்ச்சி பார்வையால்
காளையர் மனதை
சுண்டி இழுதாய்
பொன் முறுவல்
புன்னகையால்  முகம் மலர்ந்தாய்

 எண்ணையை அறியாத செம்பட்டை
தலை முடிகள் தொளில் மிதந்தன ,

இமைகள் அலையின்
இடையில் துடிக்கும்
வண்ண  பொட்டுகள் .

உடம்பை சுற்றி விசும்
துர்நாற்றத்தை மறைக்கும்
உன் கட்டழகு ,

இளைஞர்கள்   சுற்றி பார்க்க
அதிகாரமாய் சத்தமிடும்
கருங்குயில்

ஏய் மீனே ...,
ஏய் மீனே.... !
என்று ஓலமிட்டாள்
கவர்ந்திழுத்தல் கவர்ச்சி
மீன்காரி
 



Thursday, March 10, 2005

கொடுக்காத காதல் கடிதம்



சிந்தித்து சிந்தித்து
சிதறிய பேனா மை

அழகாக ஆராதனை செய்ய பிறந்த காகிதங்கள்
என் சொல்லை வடிவமாய் திரித்து எழுதினேன்

என் இதயத்தின் நிழலை அதில் பதித்தேன்
இரத்தத்தால் கையோப்பமிட்டேன்

அஞ்சலில் அனுப்ப அஞ்சினேன்
அஞ்சாமல் சந்திக்க வந்தேன்
கண்முன் உன்னை கண்டேன்
காணாதவன் போல் நின்றேன்

அன்போடு அரவனைத்தாய்
சகோதரத்துவத்தை கற்பித்தாய்

வருத்தப்பட்டேன் அவமானப்பட்டேன்

கிறுக்கல்கள் தெரிவதற்கு முன்
தெரியாமல் கிழித்தெரிந்தேன்

கொடுக்க வந்த காதல் கடிதத்தை