Monday, January 28, 2013

மௌன மொழியானாள்



விழியோடு விழி வைத்து 
இமைகள் மூடி
இதழோடு இதழ் பதித்துவிட்டாள் 

வேட்கம் தாங்காமலே 
தள்ளி நின்று கைகளால் கண் மூடி கொண்டாள் 

கண்மூடிய கைகளை விலக்கி பார்த்தேன் 
முகம் மலர்ந்து நின்றாள் 

கேள்வி கேளாமலே புன்னகையில் பதில் தந்தாள் 
சொல்லை மொழியாமலே மௌன மொழியானாள் 

ஏனோ என்னை மீண்டும்  கட்டியணைத்தாள்
வாய்பேச வாய்ப்பு தாராமலே வாய்யோடு வாய் வைத்து விட்டாள்.

சொக்கிய கண்களை திறந்து பார்த்தப்போது 
திரும்பி பாராமலே ஓடி விட்டாள்.

Sunday, January 27, 2013

சுமை தாங்கி





கவிதையின் சுமை காதல் 
காதலின் சுமை பிரிவு 


பிரிவின் சுமை கண்ணிர் 
கண்ணீரின் சுமை
ஆறுதல் 

ஆறுதலின் சுமை உறவு 
உறவின் சுமை  பொய்

பொய்யின் சுமை உண்மை 
உண்மையின் சுமை மௌனம்

மௌனத்தின் சுமை சப்த்தம்


நிழல்
நிழலின் சுமை நான் .

Saturday, January 26, 2013

காதலி காது கடிக்கும் வார்த்தை



காதலி காது கடிக்கும் வார்த்தையை
கேட்டதில்லை இந்த கன்னி மனம் ....
காற்று போன போக்கிலே போகுது இந்த பாவி குணம் 


காலம் கரைய கரைய கரையுமோ 
யான் கொண்ட காதலின் வீரியம் 

தருணம் வரும் வரும் என்றால் வருமோ 
தடைகளை உடைதால்ளல்லவோ தரிசனம் .


ஆணி ஆடல், ஆடி மாதம் தேடல், மார்கழி கூடல்,
மஞ்சத்தில் மணிமாடத்தில்  (ல) ஊடல்.

தன்னுள் எனை கொள்வாள்
சூசகம் (காதில்) மெல்ல  மென் மொழிவாள்  
என் காது கடிப்பாள் வெட்கத்(தால்)தில்  சூளுரைப்பாள் 




Saturday, January 12, 2013

வினைவி (மனைவி)




பசியோடு வந்தால்  தலை சாய்க்க மடி தருவாள் 
விடை தேடி வந்தால் முத்தத்தால் பதில் தருவாள் 


தோள் கொடுப்பாள் 
தேன் கொடுப்பாள் 
திமிர்கொண்டு தினறடிப்பாள்

நெருக்கத்தில் இருக்கத்தில் 
சுவாச காற்றின் சூட்டில் 
தலை முடி உலர வைப்பாள்.

பெரும் நிலையா ? தரும் நிலையா ?
இல்லை இடை நிலையா ?
சந்தேக மடை திறப்பாள் 


ஆசை தவிர்ப்பாள் 
ஆணவம் அழிப்பாள்
-----------------------------------------------------END----------------------------------------------------------------
அடங்கிட மறுப்பாள் 

வெறுப்பாள் துடிப்பாள் நடிப்பாள்  
வினை புறிவாள் உயிர் எடுப்பாள் 
உடன் கட்டை ஏறுவாள்        
லீலையின் விலை பகிர்ந்தளிப்பாள் . 




Friday, January 11, 2013

அடியே அடியே !



எத்தனை முறை எத்தனை ஆண்டுகளாய் 
என் காதலை சொல்வது 
அடியே இன்னுமா உனக்கு என் மென்மொழிகள் புரியவில்லை 
உன்னை புத்திசாலி என்றெண்ணி நான் முட்டாளாகிறேன்.


.................to be continued.

Wednesday, January 9, 2013

குழைந்த சோறு [உவமை]



பழைய வீட்டில் பழைய சோறு பாரம்பரியம் 
பழைய வீட்டில் புதிய  சோறு எகத்தாளம் 

புதிய வீட்டில் பழைய சோறு கலாச்சாரம் 
புதிய வீட்டில் புதிய சோறு விடியல்    

Tuesday, January 8, 2013

காதல் பாதாளம்

உன் கண்கள் போல் 
இதுவரை நான் விழுந்த படுகுழி ஏதுமில்லை
காதல் எனும் அகால பாதாளத்துக்குள் சிக்கி தவிக்கிறேன் 
உன் நினைவில் வருடங்கள் போவதே தெரியவில்லை 


Monday, January 7, 2013

கடலம்மா




கடலம்மா கடலம்மா 
கரையோரம் நுரையம்மா 
வங்ககரையொரம் விடியலம்மா 
வலையெல்லாம் இறையம்மா 
வழிகாட்டும் கலங்கரை விளக்கம்மா 
எங்கம்மா கடலம்மா 



உப்பு பவளம் முத்து 
கடல் சுமக்கும்  சொத்து 
பிரித்தெடுப்பதோ மனிதனின் சித்து           [எலே அம்மா கடலம்மா ]

இவ் வளத்தின் ஆசையில் பிடிக்கும் பித்து 
அசந்துவிட்டால் வீடு திரும்புவாய் செத்து 


வீதியுமில்லை எல்லையுமில்லை 
அச்சாணி காற்று 
அசைவதே அலைகளின்  கூற்று                 [எலே அம்மா கடலம்மா ]

துடுப்பின் நெருடல் 
அலைகளின் வருடல் 
படகு முன்  நழுவுதல் 
பின் நீர் விலகுதல்                                          

கடலம்மா கடலம்மா 
கரை வருவாய் துணையம்மா                     [எலே அம்மா கடலம்மா ]

பயணம் எது வரை 
பேரலை பெரும்காற்று விழுங்கும் வரை 


................................to be continued

Sunday, January 6, 2013

பொய் சொல்லி கொன்னவளே




பொய் சொல்லி கொன்னவளே
 நெத்தி பொட்டில் சாய்த்தவளே

உச்சி தல சுத்துதே
உள்ளங்காலு பறக்குதே


உள்முச்சி வாங்குதே இரத்தம் சுடேருதே
நி இல்லாமல் மனம் தாளாமல் உருகுதே

நி வரும் வாசல் வழி பார்கிறேன்
வாடிய மலராய் காய்கிறேன்



...........................................to be continued

Friday, January 4, 2013

கவிவதை



நீ  நான் நீ   நான் நீ நான் 
வா நீ  வா  நீ வா நீ 

விட்டு போ விட்டு போ                      [ (விட்டு விட்டு போ மொட்டு மொட்டு பூ)]
மொட்டு பூ மொட்டு பூ

ஊற்று தேன்  ஊற்று தேன்                [(தேன் தேன்  ஊற்று தெவிட்டாத பாட்டு)]
காற்று வாடை வாடை காற்று

கள் விழிகள் மொழிகள் கள்              [(விழிகள் கள் கள்  மொழிகள்)]
ஊடல் கள் காதல் கள்

இன்ப வதை பேரின்ப வதை 
தை கவிதை வதை கவிதை          [(வதை தை கவிவதை கவிதை )]