காதலி காது கடிக்கும் வார்த்தையை
கேட்டதில்லை இந்த கன்னி மனம் ....
காற்று போன போக்கிலே போகுது இந்த பாவி குணம்
காலம் கரைய கரைய கரையுமோ
யான் கொண்ட காதலின் வீரியம்
தருணம் வரும் வரும் என்றால் வருமோ
தடைகளை உடைதால்ளல்லவோ தரிசனம் .ஆணி ஆடல், ஆடி மாதம் தேடல், மார்கழி கூடல்,
மஞ்சத்தில் மணிமாடத்தில் (ல) ஊடல்.
தன்னுள் எனை கொள்வாள்
சூசகம் (காதில்) மெல்ல மென் மொழிவாள்
என் காது கடிப்பாள் வெட்கத்(தால்)தில் சூளுரைப்பாள்