Thursday, February 28, 2013

மனசு மாட்டிகிச்சி

ஆதவன் எட்டி பார்க்கிறான்
உன் முந்தானையில் குடை பிடிப்போம் .

வங்க கடல் வலை விரிக்கிறாள்
கரையோரம் பாதம்  பதிப்போம்

மணல் வீடு கட்டி
வாசல் முன் குடி இருப்போம்

அலை நுரை அள்ளி
முகம் துடைப்போம்

மேகத்தின் நிழலில்
மென்முத்தம் பதிப்போம்

மாலை பொழுதில்
காதல் வேதம் படிப்போம்

காம கடலில் மூழ்கி
கரை ஏறுவோம்

-------------------------------------------------------------------------------

காதல் கடல் கரை
ஆதவன் எட்டி பார்க்கிறான்
உன் முந்தானையில் குடை பிடிப்போம் .

வங்க கடல் வலை விரிக்கிறாள்
கரையோரம் பாதம்  பதிப்போம்

மணல் வீடு கட்டி
 வாசல் முன் பள்ளிகொள்வோம்

நிலவு ஒளியில் சங்கமித்து
ஓர் உடலாய் புரிந்து (இசைந்து) கொள்வோம்





பாரு பாரு

புன்னகையை தொடுத்து பாரு
மனதை கொடுத்து பாரு

காதல் வரவில்லை என்றால்
விட்டுவிட்டு வேலைய பாரு



கண்மணியே பொன்மணியே




கண்மணியே பொன்மணியே வெண்ணிலவாய் நீ சிரிப்பாய்
  அமுதே மணி முத்தே நட்சத்திரமாய்  நீ ஜொலிப்பாய்

தேனே தென் தென்றலே கரும்பாய் நீ இனிப்பாய்
கோவிலே குலவிளக்கே தெய்வமகனாய் நீ இருப்பாய்

to be continued..........

காதல் வலி கொடுத்தேன்

உன் மனதை வண்ணங்களாய்  நான் நிறைத்தேன்
என் எண்ணங்களை நான் பதித்தேன்

கண்கள் வழி காதல் தொடுத்தேன்
காதல் வலி கொடுத்தேன்


Wednesday, February 13, 2013

அடிமை செய்கிறான்



யாரோ இவன்

கடந்து போகையில்

என் நாடி துடிப்பை களவு செய்கிறான்.


மீண்டும் எனை

அவன் பிடியிலிருந்து 

மீளாதவாறு

கனவுகளால் கட்டி இழுக்கிறான்


தூரம் செல்கிறான்

துறத்தி வருகிறான்

துங்க விடாமல்

என்னை தூக்கிலிடுகிறான்.


வருவானோ அடைக்கலம் தருவானோ

என்று அனுதினமும் ஏங்க வைக்கிறான்

பார்வையால்

மந்திரம் செய்கிறான்

ஆசையால்

என்னை தந்திரம்

செய்ய செய்கிறான்

என் மனதை தைக்கிறான்

பூவாய் கொய்கிறான் .

கருணை பாராமல்

காதலால் என்னை

அடிமை செய்கிறான் .