Monday, October 28, 2013

சித்திரம் பொழிகிறாள்



சித்திரம் ஒன்று வரைகிறேன்
அவளுக்கு நிழல் முகம் தருகிறேன்

கனவில் வருகிறாள்
கவிதை மொழிகிறாள்

பேசும் பேச்சில்
இசை மழை பொழிகிறாள்

தொடுகிறாள் தோழியாய்
தேற்றுகிறாள் காதலியாய்

கண்விழிக்கும் பொழுது
கனவோடு காணாமல் போகிறாள்.

Friday, October 18, 2013

சொல்லில் அல்லா உணர்வு

முதன் முதலில்
உன் பார்வையும் என் பார்வையும் சேர்ந்த பொழுது
ஒரு உணர்வு
அது
சொல்லில் அல்லா உணர்வு

பெண்ணே
உன் பெயர் சொன்னால்  போதும்
 அது                                                            (என் நாவிற்கு இனிமை சேர்க்கும்)
என் வானத்தில் விண்மீன் தூறல் போல்
இதயத்தை வருடி செல்லும் .

நேரம்
 என்பது
உன் நினைவினால் கரைந்து ஓடும் .

உன்னை பார்த்தாலே
என் தலை மேகம் முட்டும்
உற்ச்சாகம் உயிரை தட்டும்

உன்னை காதலிக்க
காத்து காத்து
காற்றாய் திரிகிறேன் .



Monday, October 14, 2013

வலிகளின் விருட்ச்சம்



மனதின்
வலிகளை புதைத்துவிடதே
விருட்ச்சமாய் வளர்ந்து
வேர்ருன்றி நின்றுவிடும்.

(மாற்று)

மனதின்
வலிகளை புதைத்துவிடதே
வேர்ருன்றி நின்று
விருட்ச்சமாய் வளர்ந்து விடும்.

Tuesday, October 8, 2013

நினைவே போதும் நிஜமாகும்


கனவே மெய்
கனவே மெய்

நினைவுகளே நினைவுகளே
மெய் மெய்

நிஜம் நிஜம் என்பதே இல்லை

நினைத்தபடி நடக்காது
நிஜம் நிஜம்

நினைக்கும் மாத்திரத்தில்
நிழலாடும் நினைவுகள்
மாறாது மாறாது

நினைவே நிஜம்
கனவே நிஜம்


Saturday, October 5, 2013

பெண்ணே மனசு

பெண்ணே உன் மனசு
பூவை  போல் ஒரு தினுசு


பாவை

பாவை உன் பார்வை பட்டால்
என் கல் மனதும் கரையுதடி

நீ  தலை சாய்த்து வருடும் கூந்தலில் 
விண்மீனும்  சீக்குதடி
உன் வில்லம்பு புருவத்தில்
என் நாடி துடிப்பே அடங்குதடி 

நாவி கமலம் மணக்குதடி,அதில்
என் மனம் நாதி தெரியாமல் போகுதடி



Tuesday, October 1, 2013

வெட்கம் மீள்கிறேன்




குறு குறு கருமேகம் மழையால்
என் தேகம் தொட்டு செல்லும்

சில்லென்று வீசும் காற்று
என் பெண்மையை சீண்டி போகும்

காளையர் பார்வையில் சிக்கிக்கொள்ளும்
என் கருங்கூந்தலும்   கருவிழி மையும்
மாதம் தீண்டும் திங்களும் பௌர்ணமியும்
என் மனதை களவு கொள்ளும்

வெட்கம் முறிக்க நெட்டி பறிக்கிறேன்
ஊமை சொல்லால் காதல் மீள்கிறேன்.

(காதலன் நினைவுகள்)
மெல்ல செல்லும் மடிந்து செல்லும் ஒடிந்து செல்லும்
அவன் மட்டும் என்னை கண்டு செல்வதே இல்லை