Wednesday, January 14, 2015

நான் நானாக நடிக்கிறேன்



நான் இன்றி நான் இல்லை
நான் இன்றி நான் இல்லை என்னை மட்டுமே
நம்பி நான் இல்லை

நான் இரசிக்க அரிதாரம்
பூசுகிறேன்
நான் சிரிக்க நகைசுவை
செய்கிறேன்
நான் வெறுக்க நயவஞ்சகம்
செய்கிறேன்
நான் சிறக்க பாடல்
படிக்கிறேன்


நாணுகிறேன் நாணலை போல்
ஞானம் பெறுகிறேன் துறவியை போல்
அருள் புரிகிறேன் கடவுளை போல்

மெய்யான போலியை மெய்மறந்து இரசிக்க
நான் என்னை முழுவதும் தாரை வார்க்கிறேன்

நாடகம் அரங்கேற்றுகிறேன்
அனுதினமும் அதில்
நான் நானாக நடிக்கிறேன்.