வராத நிலவை வா வா
என்பான்
(கவிஞன்)
கரையாத கதிரவனை
கரைய சொல்லி கேட்பான்
(காதலன்)
கதை கதை
கதைகள்
சொல்வான்
நேரம் தப்பி வந்து நிர்ப்பான்
கெஞ்சி பார்ப்பான்
கொஞ்சி பார்ப்பான்
கொஞ்ச விட்டால்
மிஞ்சி பார்ப்பான்
கல கலவென
சிரிக்க வைப்பான்
கவலைகளை
மறக்க வைப்பான்
பொய்யாலே போதனை செய்வான்
பாவம் போல் முகத்தை வைப்பான்
பொறுமை இழந்தால் பொருத்தனை செய்வான்
பேதையாய் என் முந்தியில் குடை பிடிப்பான்
சில பல
நிலை
காதலுக்காக கடப்பான் (கடந்து நிர்ப்பான்)
சிலைபோல்
காலடியில் காத்துகிடப்பான்
மனம் கோணாமல் நடப்பான்
மாலையிடுவான்
மாங்கள்யம் சூட்டுவான்
மதி மயங்க செய்வான்.
காதலன்