யார் அவள் ?
என்னோடு வருகிறாள்
என்னுடன் இருக்கிறாள்
என்னுடனே புசிக்கிறாள்
என்னை அனுதினமும் ரசிக்கிறாள்.
என்னை மெழுகேற்றுகிறாள்
முகமலர செய்கிறாள்
மதிமயங்க செய்கிறாள்
வழி காட்டுகிறாள் , வழி நடத்துகிறாள்.
வசை வீசுகிறாள் , வாழ்க்கை தருகிறாள்
ஆருடம் சொல்கிறாள்
என்னை ஆளுமை செய்கிறாள்.