அவள் திமிரும்
என் திமிரும்
முற்றிகொண்டது
மோதலால்
வெறுமை
பற்றிக்கொண்டது
இறுமாப்பு
இதயங்கள்
இணைய மறுத்துகொண்டது
விட்டு கொடுக்க
மனமில்லாமல்
அன்பு
முரண் பட்டுகொண்டது
காதல்
சாதலாகவில்லை
மோதலானாது
பிரிதலில்
உறவை
முறித்துகொண்டது
உடலால்கள்
பிரிந்தாலும்
மனம் அகலவில்லை
நினைவில் அவள்