அவளுக்கும் எனக்கும்
ஒத்து போகாது என தெரிந்தும்
மீண்டும் மீண்டும்
அவளிடமே ஒத்துபோகிறது
மனம்
----------------
அவனுக்காக நான் காத்து
நிற்கிறேன்
அவன் எனக்காக
காத்திராத போதும்
--------------
இருவரும் காதலிக்கிறோம்
இருவரில் ஒருவர்
அறியாதபோதும்.
--------------