Monday, February 9, 2015

என்னை தெரிந்துகொள்



கடிகார முள் நகர
வேண்டியதில்லை
நான் நாழிகையில்
நாட்கள் கடத்த  (கடக்க)

பையில் பணம் இருக்க
வேண்டியதில்லை
என் தேவைகளுக்காக
செலவுகள் செய்ய

சண்டையிட்டு கொள்ள
தேவையுமில்லை
என் உரிமைகளை
விட்டுவிடாமல் இருக்க

கடவுள் அருள் புரிய
அவசியமுமில்லை
என் கனவுகள்
என்முன் நிகழ

இதயம் என்னுள்
இருந்ததே இல்லை
இவுலக இன்பங்களுக்கு
இசைந்து செல்ல

----------------------------------------------
[ உரை ] [நிறையக பொருந்தாது]

நேரம் பார்த்து செயல் படுபவன் இல்லை

நல்லது செய்ய கடவுள் அருளுக்காக காத்து இருக்க அவசியமில்லை