Wednesday, September 30, 2015

நீ வருவாய் என

நீ வருவாய் என
துயில் கலைத்தேன்

துங்கா வனம் என
காத்து கிடந்தேன்


Sunday, September 27, 2015

புலி வேஷம்

யாரும் கண்டுகொள்ளாத காலம்
ஒன்று வந்தால்
மனம் சோர்வுற்று போகும்
உடல் தளர்ந்து போகும்
ஏக்கம் ஆளை கொல்லும்

உள்ளம் வலி மீள வழி தேடும்
விழி பிதுங்கி ஆற்றல் பதுங்கி கொள்ளும்

வேண்டாம் இன் நிலை
மாறட்டும் இன் நிலை


அனுபவத்தை தொகுத்துகொள்
மனதுக்கு ஒப்பனை இட்டுகொள்

பதுங்கிய நிலையில் மெல்ல நகரு
இலக்கில் கண் வைத்துகொள்
காலம் கைகூடும் நேரம்
இரையை பாய்ந்து கவ்விக்கொள்

கொள் புலி வேஷம்

ஒன்றும் தெரியாதவள்

நினைவுகள்  அவளை  நாடுது
சிந்திக்க தெரியதவளிடம்

மனம் மன்னிப்பை தேடுது
மன்னிக்க தெரியதவளிடம்

உடல் ஏக்கத்தில் வாடுது
அணைக்க தெரியதவளிடம்




Thursday, September 24, 2015

உளறுகின்றேன்

தமிழ் போதை
தலைக்கேறிய நிலையில்

கனவுகள்
விட்டுசென்ற நினைவில்

கவிதை
என்ற பெயரில்

ஏதேதோ
உளறுகின்றேன்
உன் நினைவில்



Friday, September 11, 2015

நீல வானே

நீல வானே அருகினில் அருகினில்
வந்தது ஏனோ

அவள் என் கனவினில் வந்த காரணம் தானோ

குளிர்  காற்றே மிதமாய் என்மேல்
வீசுவது ஏனோ

அவள் என்னை  கடந்து செல்வதினாலோ


.................... to be continued

வண்ணங்களை துளிர் கொண்டு கவி தீட்டவா



Thursday, September 10, 2015

உன்னை சேரவே

உன்னை சேரவே
தினம் உன்னை காண்கிறேன்

உன் கண்ணை கானவே
கலர் கனவாய் யாகிறேன்

(பாடல்) to be contined.................

இசை நான் மொழி நான்  கவியும் நான்


மலரும் நான் தேனும் நான் மொய்க்கும் வண்டும் நான்




Monday, September 7, 2015

காத்துகிடக்கிறேன் கண் அசைவுக்காக

என் தேடல் முடிவற்று செல்கிறது
அது தெரிந்தும் உன் மௌவுனம் தெளிவற்று தொடர்கிறது

ஏனோ தயக்கம் உன்னிடம்
அதை அறிய சிறு நெருடல் என்னிடம்

உன் சோதனைகளை எல்லாம் கடந்துவிட்டேன்
உன்னிடம் நெருங்கி வர துடிக்கிறேன்
கால்கடுக்க காத்துகிடக்கிறேன்
உன் கண் அசைவுக்காக .

நெருங்கிவிட்டோம்
மனதளவில்
இனைய மறுக்கிறோம்
உடலளவில்

மாற்று

என் தேடல் முடிவற்று செல்கிறது
அது தெரிந்தும் உன் மௌவுனம் தெளிவற்று தொடர்கிறது

நெருங்கிவிட்டோம்
மனதளவில்
இனைய மறுக்கிறோம்
உடலளவில்

ஏனோ தயக்கம் உன்னிடம்
அதை அறிய சிறு நெருடல் என்னிடம்

உன் சோதனைகளை எல்லாம் கடந்துவிட்டேன்
உன்னிடம் நெருங்கி வர துடிக்கிறேன்
கால்கடுக்க காத்துகிடக்கிறேன்
உன் கண் அசைவுக்காக .



மாற்று

ஏனோ தயக்கம் உன்னிடம்
அதை அறிய சிறு நெருடல் என்னிடம்

என் தேடல் முடிவற்று செல்கிறது 
அது தெரிந்தும் உன் மௌவுனம் தெளிவற்று தொடர்கிறது 

நெருங்கிவிட்டோம் 
மனதளவில் 
இனைய மறுக்கிறோம் 
உடலளவில் 

ஏன் என்ற குழப்பம் 
என்னை நிரப்புகிறது 

உன் சோதனைகளை எல்லாம் கடந்துவிட்டேன்
உன்னிடம் நெருங்கி வர துடிக்கிறேன்
கால்கடுக்க காத்துகிடக்கிறேன்

உன் கண் அசைவுக்காக

Saturday, September 5, 2015

நினைவலைகள்

ஓர் குரலாய்
இதயம் ஒலிக்கும் ஒருதலை காதல்கள்

பிரியா முகமாய்
என் மேல் நனையும் மழை துளிகள்

பாதம் தாங்கி
என்னை கடக்கும்  புல் துளிர்க்கும் பாதைகள்

நிற்கிறேன் ஓர் புறமாய்
நிரந்தரமாய் என்னுள் நீ நீங்கா நினைவலைகள்