Saturday, October 31, 2015

என்னை கடந்துவிட்டேன்

என்னுள் நுழைந்து
எனக்குள் என்னை
நான் கடந்துவிட்டேன்


எதிர்கால திட்டம்

எதிர்கால திட்டம் என்று எதுவும் கிடையாது
நிகழ்கால திட்டங்களை சரியாக வகுத்தால்
எதிர்காலம் சிறப்பாக அமையும்


நாம் இல்லை

நாம் உறவாடிய தடங்கள் மட்டும் காத்துக்கிடக்கிறது
நாம் மட்டும்  இல்லை உறவாடிகொள்ள



Wednesday, October 28, 2015

எல்லாம் கவிதைகளே

என்னுள் உள்ள
கோபதாபம்
காதல் காமம்
ஆசை நிராசை
ஆணவம் ஆகங்காரம்
சாந்தம்
சம்பந்தம்
சம்மதம்
சமாதானம்
எல்லாம்
கவிதைகளே

அறிக்கை அரசியல்

தான் அறிந்துள்ளேன் என்பதும்
பிறர் அறிய வேண்டும் என்பதும்
அறிந்தோர் செயல் பட வேண்டும் என்பதும்
செயல்பாடுகளால் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதும்
அரசியல் அறிக்கையாக வெளிவர வேண்டும்

மாறாக

பிறர் மீது வீண்பழி சுமத்தி
அதன் பொருட்டு தாம் விளம்பரம் தேடிக்கொள்வதும்
அனைத்து விசியங்களிலும் தலையிட்டு அறிக்கை வெளியிடுவதும்
அனைத்து ஊடகங்களிலும்  தினம் அறிக்கை நிமித்தம்  தலைகாட்டுவதும்

இவ்வாறாக மக்களை அன்றாடம் அறிக்கை வாயிலாக சந்திப்பதே
அறிக்கை அரசியல்

ஹைக்கூ :

செயல்பாடுகள் இன்றி வெறும் சொற்காளால் நிறைந்தது
அறிக்கை அரசியல்


Tuesday, October 27, 2015

ஒரு கவிதை

உனக்கு ஒரு கவிதை
எனக்கு ஒரு கவிதை
நமக்கு ஒரு கவிதை
போதும்
ஊருக்கு ஒரு கவிதை
உலகுக்கு ஒரு கவிதை
எல்லாம் நமக்கு எதற்கு
================================================
அது கவிதையின் பாடு
பாடட்டும் ஒரு கவிதை


Monday, October 26, 2015

கண்ட நாய் கவிதை

எனது கவிதையை
ஒரு ஆசிரியரின் பார்வைக்கு கொண்டு சென்றேன்
எதையும் கண்டுகாதவன் போல் கவிதையை படித்தான்
படித்து முடித்துவிட்டு
கண்ட நாய் எல்லாம் கவிதை எழுதுது என்றான்
பாராட்டுக்காக காத்திருந்த
எனக்கு தூக்கிவாரி போட்டது
இதயம் துடிதுடித்து போனது

நான் கண்ட நாயானேன்
கண்டவன் பார்வைக்கு

Sunday, October 25, 2015

எதுக்காகவோ இருக்கிறேன்

எல்லாம் என்னை விட்டு பொய்விட்டது
இன்னும் என்னவெல்லாம் போகபோகிறதோ ?

தோல்விகள் மட்டுமே தொடர் கதையாக இருக்கிறது
உறவும் நட்பும் தொல்லைகளாக இருக்கிறது

ஏன் இன்னும் நான் இருக்கிறேன்
என்ற கவலை
என்னை கொஞ்சம் கொஞ்சமாக கொல்கிறது

இன்னும் எதுக்காகவோ நான் தேவைபடுகிறேன்
அது எதுக்காகவோ என்பது மட்டும் எனக்கு தெரியவில்லை


Wednesday, October 21, 2015

பட்டுநூல்காரி

கிருஷ்ண லீலாவின் முடிவு அவள்
சோம்நாத் கோவிலின் ஆரத்தி தீபம் அவள்

ஆர்யா வம்சம் அவள்
நாடோடி கூட்டம் அவள்

முஹமத் கஜினியீன் அடிமை அவள்
மராத்தியர்களிடம் தஞ்சம் அடைந்தவள் அவள்
விஜயநகர தேசத்தின் அழைப்பிதழ்  அவள்
ராணி மங்கமாவின்  குறிப்பு அவள்

புனித நூல் நெய்பவள் அவள்
பட்டுநூல் தைப்பவள் அவள்
பட்டுநூல்காரி அவள்

(Image Created by Myself "Kathala Va da")

(Unknown Language)

Monday, October 19, 2015

கனவு கவலை

அவள் கனவில் நானில்லை
ஏனில்லை என்ற கவலை
என் மனதை துளைத்து
புடைத்து வறுத்தெடுக்கிறது

இன்று அவள் என் கனவில்
என் கனவில் நீ
உன் கனவில் நானில்லை
என்ற கவலை
என்று ஏங்கினாள்
என்னை தாக்கினான் (தாங்கினாள்)
அவள் கனவில்

கனவை கலைத்து
விழித்தெழுந்தேன்


Friday, October 16, 2015

இன் பக்கம்

உன் முன்பக்க கதை எனக்கு எதற்கு
அதை 
உன் பின்பக்கம் வீசிவிட்டு வா என்னோடு 
இன் பக்க கதை எழுத........இன்பத்தின் சுவை ததும்ப.

================================================

வாடி...... வஞ்சி கிளி தேடி....... வந்தேனடி 
காதல் கதை வானம் தொட்டு சொல்ல .
நேரம்....... வந்ததடி மாலை.... தந்தேனடி 
தேடல் இனி நம்மை  விட்டு செல்ல.....



Monday, October 12, 2015

இன்பமான வலி

பூக்களின் மகரந்த வேலிக்குள் நீ இருக்க
முற்களின் வேலிக்குள் நான் சிக்கி கிடக்க
மலர்ந்தது இன்பமான வலி



Thursday, October 8, 2015

சோளக்காட்டு பொம்மை

கண்விழித்து பாராமல்

தலை சாய்த்து ஓயாமல்

கை கால் சற்றும் அசராமல்

கூலி மிகுதி கேட்டகாமல்
கூனி குறுகி கும்பிடு போடாமல்

வெயிலால் சுட்டு
மழையால் நனைந்து
காற்றால் துடைத்து

யாருக்காகவோ எதுக்காகவோ
காத்து நிற்கிறேன்
யாருமில்லாத  இடத்தை
யாருக்காகவோ காவல்காக்கிறேன்

சோளக்காட்டு பொம்மையாக





சிதைக்கப்படுகிறேன்

சிறையில் இருக்கிறேன்
சிறகொடிந்து கிடக்கிறேன்
சிகிச்சைக்காக காத்துகிடக்கிறேன்

சினம்கொண்ட சிறுமலரால்
சிறுக சிறுக சிதைக்கப்படுகிறேன்

====================================

                (காதல்)
சிறையில் இருக்கிறேன்
               (காயத்தால்)
சிறகொடிந்து கிடக்கிறேன்
               (அன்பின்)
சிகிச்சைக்காக காத்துகிடக்கிறேன்
                (பதிலுக்கு)
சினம்கொண்ட சிறுமலரால்
                 (மேலும்)
சிறுக சிறுக சிதைக்கப்படுகிறேன்

=======================================



Tuesday, October 6, 2015

மன கோவில்

மன கோவிலில் தெய்வங்கள் (விக்கிரகங்கள்) கிடையாது
சத்தியமே ஆராதனை
மன்னிப்பே பரிகாரம்
நேர்மையே வேதம்
ஞானமே அருள் வாக்கு
அன்பே ஆசிர்வாதம்


Monday, October 5, 2015

நோடிகிறேன்

ஏன் உந்தன் பிடியில்
நானே தானே வந்து மாட்டிக்கொண்டேன்

என்னையே உந்தன் கால் அடியில்
அடிமையென ஒப்பு கொடுத்துவிட்டேன்

என் வாழ்வுக்கு வழி சொல்
என காதலின் வலியை கூட்டிகொண்டேன்

உன் பிரிவின் தவிப்பில்
நாளுக்கு நாள் நோடிந்துகொண்டே போகிறேன்
=============================================

ஏன் உந்தன் பிடியில்
நானே தானே வந்து மாட்டிக்கொண்டேன்

என்னையே உந்தன் கால் அடியில்
அடிமையென ஒப்பு கொடுத்துவிட்டேன்

உன் பிரிவின் தவிப்பில்
என காதலின் வலியை கூட்டிகொண்டேன்

என் வாழ்வுக்கு வழி சொல்
என நாளுக்கு நாள் நோடிந்துகொண்டே போகிறேன்

====================================================

ஏன் உந்தன் பிடியில்
நானே தானே வந்து மாட்டிக்கொண்டேன்

என்னையே உந்தன் கால் அடியில்
அடிமையென ஒப்பு கொடுத்துவிட்டேன்

உன் பிரிவின் தவிப்பில்
என் காதலின் வலியை கூட்டிகொண்டேன்
நாளுக்கு நாள் நோடிந்துகொண்டே போகிறேன்



Saturday, October 3, 2015

சிதைத்துகொள்கிறேன்

இருளில்லிருந்தேன்
நீ  தீபம் ஏற்றினாய்
ஒளிர்கிறேன்
மெழுகென உருகுகிறேன்
என்னையே சிறுக சிறுக சிதைத்துகொள்கிறேன்
எனக்கே நான் எதிரியாகிறேன்