Friday, November 27, 2015

விடைகொடு அன்பென

என்னை தீண்டிய சர்ப்பமே
சாய்கிறேன் உன்மேல்
தாங்கிகொள் என்னை

இதமாய் சுகமாய் நான் தூங்கிட
இடம் கொடு

மிதமாய் பதமாய் நான் தழுவிட
விடைகொடு

==============================================
(மாற்று)
என்னை தீண்டிய சர்ப்பமே
சாய்கிறேன் உன்மேல்
தாங்கிகொள் என்னை உன் மடிமேல்

இதமாய் சுகமாய் நான் தூங்கிட
இடம் கொடு இதயம்தனில்

மிதமாய் பதமாய் நான் தழுவிட
விடைகொடு அன்பென




காதல் உலகிலே

காதல் உலகிலே
கவிதை வடிவிலே
பெண்ணொருத்தி
வந்தாலே
என்னை
முன்னிறுத்தி சென்றாலே

ஏனோ துடிக்கிறேன்
நாணம் படிக்கிறேன்
தன்னாலே அவள் கண்ணாலே

காதல் கொண்டேனே
அவள்மேல்
காதல் கொண்டேனே

to be continued.............


நான் தேடிய பெண்

நான் தேடிய பெண் இவள்தானோ
என் எதிர்கால துணைக்கோள் இவள்தானோ

என் எண்ணத்தை கவிதையாய் தோல்லுரித்த
அழகு தேகம் அவள் மேனி தானோ

to be continued............

Tuesday, November 24, 2015

என்னை மன்னித்துவிடு

என்னவென்று சொல்வது
நீ இல்லாத நொடிகள்
வேதனையீன் இரணமாய் என்மேல் பாய்கிறது
உன்னை காணமல்
உள்நெஞ்சம் பாலைவனமாய் காய்கிறது

நீ எங்கோ இருக்கிறாய்
ஆனால்
இங்கே என்னை வாட்டிவதைக்கிறாய்

நீ இல்லாத பொழுதுகளை
சகித்துக்கொண்டு வாழவும் வழி தெரியவில்லை
வலியில் இருந்து மீளவும் வழி தெரியவில்லை

ஏனோ கோபங்கள் உன்மேல்
தண்டனை செலுத்திகொள்கிறேன் என்மேல்

மீண்டும் வந்துவிடு
தவறேதும் இருப்பின்
என்னை மன்னித்துவிடு

Sunday, November 22, 2015

முதல் காதல் முத்தம்

முதல் காதல்
முதல் முத்தம்
எல்லாம் அத்துடன்  இறுதியானது
ஏனோ என்னிடம் ஆசை காட்டி
என்னை மோசம் செய்தது

நிலவை கட்டி இழுக்காத வான்வெளி
மழை துளி சிதறாத புல்வெளி (கவி துளி)
மலரை வண்டு மொய்க்காத பூ கவிவொளி 

எல்லாம் தன்னாலே வந்து எனக்கு சொந்தம்மானது


Sunday, November 15, 2015

கனவுகளாய் களைகிறேன்

உன் நினைவு தனை கலைத்து
நான் கனவுகளாய் கலைகிறேன்


Saturday, November 7, 2015

காதல் விலை

காதல் என்ன விலை
சொல்லுங்கள்
தருகிறேன் 
என்னை

Thursday, November 5, 2015

காதல் மழை

காதல் மழை தொடர்கிறது
கவிதையாய்

காதல் காலம்

விடியும் முன்பு விழித்து கொள்கிறேன்
நாட்காட்டியையும் நாழிகையையும்
சோதித்து கொள்கிறேன்
உன் புகைப்படத்துடன் கண் பதித்து கொள்கிறேன்

சந்தித்ததை எண்ணி சிந்திக்கிறேன்
சிந்தித்ததை கொண்டு உன்னை சந்திக்கிறேன்

ஒரு சில நொடிகள்
முகம் பாராமல் விழி நோக்காமல்
எனக்குள் வெட்கி நாணுகிறேன்

நாம் சேர்ந்து செல்கையில்
என் விரல்களால் உன் விரலை வருடி கொள்ள முயல்கிறேன்
முடியாத பட்ச்சத்தில் கண்களால் காதல் பொழிகிறேன்

இரவெல்லாம் கண்விழித்து
என்னிலையை குறுந்தகவலாய் அனுப்புகிறேன்

அதை முத்தமிட்டு பெருந்தகவலாய்
நீ திருப்பி என்னிடமே அனுப்புகிறாய்

காலம் மறந்து காதல் செய்கிறோம்
காலங்கள் கடந்தும் காதல் வளர்க்கிறோம்



விடமாட்டேன் உன்னை

உன்னை அணு அணுவாக
ஆராய்ந்து
என்னுள்  ஒரு நுட்பம் செய்துள்ளேன்
நீ சிணுங்கினாலும் சரி
இல்லை நீ மருகினாலும் சரி
உன் ஆழ்மனதை தொட்டு
நான் பாடம் படித்துவிடுவேன்
உன் தேடலை கண்டுகொண்டு
தேவைகள் நான்யென நானே
கொண்டுவந்து சேர்ப்பேன்
உன்முன் நான் காட்டிய நடை வேறு
உண்மையில் நான் உடுத்தும் உடை வேறு
எள் என எண்ணிவிட்டாய் என்னை
என்னை தாண்டி செல்ல விடமாட்டேன் உன்னை

காதல் எரிகிறது

அவன் காதல் அவன் புறம் இருக்க
என் காதல் என் புறமிருக்க
இடையில் எங்கள் காதல் பற்றி எரிகிறது
காலத்தால்
-------------------------------------------------------------
அவன் சொல்லாத காதல் அவன் புறம் இருக்க
என் காதல் என் புறமிருக்க
இடையில் எங்கள் காதல் பற்றி எரிகிறது
காலத்தால்
--------------------------------------------------------------


நல்லா இருக்கியா

பின்நாளில்
நல்லா இருக்கியா
என்ற வார்த்தைகளோடு
உறவு முடிந்து விடுகிறது


Wednesday, November 4, 2015

வெறும் கனவுதான்

நான் கனவுதான்
நீயும் கனவுதான்
என்னோடு சங்கமித்தால் கனவுதான்
இல்லையேல் வெறும் கனவுதான்

நான் கனவுதான்
நீயும் கனவுதான்
என்னோடு நீயும் சங்கமித்தால் இருவரும் கனவுதான்
இல்லையேல் இருவரும் வெறும் கனவுதான்

Tuesday, November 3, 2015

ஆசையாய்

கிடைக்காது என்று தெரிந்தும் ஆசைபடுகிறோம்
ஆசை பட்டதை தேடி அனுதினமும் அலைகிறோம் (ஓடுகிறோம்)
இறுதிவரை அது கிடைப்பதே இல்லை
கிடைத்ததை வைத்து கொள்ள மனம் இடம்கொடுப்பதுமில்லை
அசை நிராசையாய் தொடர்கிறது
ஆசையாய்


என்னையே பிடிக்கவில்லை

சில நேரம் செய்த தவறுக்காக வருந்துகிறேன்
மறு நேரம் என்ன தவறு செய்துவிட்டேன் என வினவுகிறேன்

நல்லதுதானே செய்கிறேன் 
உண்மையைத்தானே பேசுகிறேன்

உள்ளதை தருகிறேன்
உள்ளத்தை தருகிறேன்
உள்ளுணர்வை அன்பென பொழிகிறேன்

என்னை உணர்ந்துகொள்ள யாருமில்லை 
என்னை ஏனென்று கேட்டக நாதியும் இல்லை

ஏனோ கோபங்கள் என்மேல்
என்னையே எனக்கு பிடிக்கவில்லை உங்களால் !.