விடியும் முன்பு விழித்து கொள்கிறேன்
நாட்காட்டியையும் நாழிகையையும்
சோதித்து கொள்கிறேன்
உன் புகைப்படத்துடன் கண் பதித்து கொள்கிறேன்
சந்தித்ததை எண்ணி சிந்திக்கிறேன்
சிந்தித்ததை கொண்டு உன்னை சந்திக்கிறேன்
ஒரு சில நொடிகள்
முகம் பாராமல் விழி நோக்காமல்
எனக்குள் வெட்கி நாணுகிறேன்
நாம் சேர்ந்து செல்கையில்
என் விரல்களால் உன் விரலை வருடி கொள்ள முயல்கிறேன்
முடியாத பட்ச்சத்தில் கண்களால் காதல் பொழிகிறேன்
இரவெல்லாம் கண்விழித்து
என்னிலையை குறுந்தகவலாய் அனுப்புகிறேன்
அதை முத்தமிட்டு பெருந்தகவலாய்
நீ திருப்பி என்னிடமே அனுப்புகிறாய்
காலம் மறந்து காதல் செய்கிறோம்
காலங்கள் கடந்தும் காதல் வளர்க்கிறோம்
நாட்காட்டியையும் நாழிகையையும்
சோதித்து கொள்கிறேன்
உன் புகைப்படத்துடன் கண் பதித்து கொள்கிறேன்
சந்தித்ததை எண்ணி சிந்திக்கிறேன்
சிந்தித்ததை கொண்டு உன்னை சந்திக்கிறேன்
ஒரு சில நொடிகள்
முகம் பாராமல் விழி நோக்காமல்
எனக்குள் வெட்கி நாணுகிறேன்
நாம் சேர்ந்து செல்கையில்
என் விரல்களால் உன் விரலை வருடி கொள்ள முயல்கிறேன்
முடியாத பட்ச்சத்தில் கண்களால் காதல் பொழிகிறேன்
இரவெல்லாம் கண்விழித்து
என்னிலையை குறுந்தகவலாய் அனுப்புகிறேன்
அதை முத்தமிட்டு பெருந்தகவலாய்
நீ திருப்பி என்னிடமே அனுப்புகிறாய்
காலம் மறந்து காதல் செய்கிறோம்
காலங்கள் கடந்தும் காதல் வளர்க்கிறோம்