Friday, May 27, 2016

மீண்டும் காதலிக்கிறேன்

வெறுப்பால்  சுட்டேரித்தாள்
கண்ணீரால் நனைத்தாள்
என்று
அவளை  வெறுத்திட  ஆயிரம் கரணங்கள் இருந்தும்
  மீண்டும் மீண்டும் அவளையே காதலிக்கிறேன்




Sunday, May 15, 2016

காலம் கூலி

இத்தனை வருடங்கள்   (இத்தனை நாட்கள்)
வேறுவழியின்றி பாதுகாப்புக்காக
எதிரியிடமே தஞ்சம்  அடைந்திருந்தேன்
தற்போது  தப்பித்து வெளியேற 
காலம் என்னும் கூலியை  செலுத்தி உள்ளேன்.

மீண்டும்  வனாந்தரத்தில்


ஏன் நுழைந்தாய்

ஏன் நுழைந்தாய்
கண்ணே
கண்ணின்  வழியே
என்  நெஞ்சில்  நுழைய
----------(Line)----------------------
ஏன் பொய் உரைத்தாய்
உண்மையே
ஊமையேன பொய்யாக
ஊரெல்லாம்  நான்  உரைக்க      
(திரிகிறேன் திரிகிறேன் தீயால் தீரிகிறேன்)
----------(Line)----------------------

கோபம் கொள்ளாதே
தூரம் செல்லாதே
வலிகள் வலிகள்
வாழ்வின்
வழிகள்




Thursday, May 12, 2016

காணாமல் போகும் கோவம்

என்னிடம் இனி பேசாதே என்று சொல்லிவிட தோணும்
அவளை பார்த்த மாத்திரத்தில் சொல்லவந்ததே மறந்து போகும்......!


Tuesday, May 10, 2016

காதலித்து விட்டேன்

கோபுர  வாசலுக்குள்  நுழைய  எனக்கு  அனுமதியில்லை
இருந்தபோதும்  கற்பகிரகத்தில்  உள்ள பெண் தெய்வத்தை
மனசார காதலித்து விட்டேன்



Friday, May 6, 2016

காதலி தேவை

நான் கட்டுப்பாடுடன் செயல்பட
என் கண்ணியத்தை காக்க
என் காட்டுமிராண்டிதனத்தை கட்டுப்படுத்த
உடனடியாக ஒரு காதலி தேவை

-------------------------------------------------
உங்கள் எதிர்பார்ப்பு இதுவா ?:

என் கை கோர்த்து நடந்து செல்ல
அவள் என் தோள் சாய
நான் அவள் மடி சாய

இன்னலில் ஆறுதலாய்
இந்நிலையின் மாறுதலாய்

எனக்கொரு காதலி தேவை 

Sunday, May 1, 2016

வாசித்தவன்

அவள் ஒன்றும் புரியாத புதிர் அல்ல
என் முன்னே திறந்த புத்தகமாய் விரிந்து கிடக்கிறாள்
எத்தனையோ முறை வாசித்து விட்டேன்
சற்றும் சுவாரசியம் இல்லா
எழுத்துக்கள் உடையவள்

மீண்டும் வாசி என தொந்தரவு செய்கிறாள்
போதும்
அவளை வாசித்து வாசித்து அலுத்து விட்டேன்