Thursday, October 20, 2016

உன்னை காண வருகிறேன்

மலரே சிறு மலரே
உன்னை காண வருகிறேன்

புருவங்கள் மத்தியில்
வட்டமிடும் காய்ந்த நிலவுகளுக்கு துணையாக
நெற்றிச் சுட்டி செய்து வருகிறேன்

வெறும் கழுத்துக்கு
கொத்து கொடி தாலிக்கொடியால்
மாலைகள் செய்து வருகிறேன்

கந்தல் உடை மறைத்த கைகளுக்கு
கொந்திக்காய் பூ காப்பு
மோதிரம் செய்து வருகிறேன்

உளை ஊனிய கால்களுக்கு
அத்திக்காய்க் ஆலங்காய்க் கொலுசும்
 தாழ் மெட்டியும் செய்து வருகிறேன்
 

வந்து
என்  அரைஞாண் கயிட்றை
உன் கரம் இழுத்து பிடிக்க செய்து
உன் வெட்கிய முகம் பார்த்து
என் காதலை சொல்ல போகிறேன்