Wednesday, June 22, 2016

கெட்டுப் போனவர்கள்

அவளால நான் கெட்டேன் 
என்னால அவ கெட்டா
இறுதியில் காரியம் கெட்டு
இருவரும் கவலை பட்டு
வறுத்த பட்டு
நொடிந்து கொண்டிருக்கிறோம்


பாவ மன்னிப்பு

பாவங்கள் நாடாத என்னிடத்தில்
துரோகம் செய்து பாவம் செய்கிறாய்
உன் பாவங்களுக்கு பரிகாரம் தேடாதே
நான் உன்னை மன்னிக்கிறேன்.
.........................................................................

ஒரு பாவமும் அறியாத என்னிடத்தில்
துரோகம் செய்கிறாய்
உன் பாவங்களுக்கு பரிகாரமாக
என்னுடன் இணை சேர்(வாய்)

...........................................................................


Tuesday, June 21, 2016

எல்லாம் கவிதைதான்

குழந்தையின்  மழலையும் கவிதைதான்
தாயின்  தாலாட்டும் கவிதைதான்

நிலவை  காட்டி நிலா சோறு ஊட்டிய கைகளும் கவிதைதான்
ஓடியதும் விளையாடியதும் அடியாதும் பாடியதும்  கவிதைதான்

காதல் தேடியதும்
காதல் கூடியதும்
காமம் நாடியது கவிதைதான்

ஏக்கமும்
தாக்கமும்
ஊக்கமும் கவிதைதான்

எய்தலும்
கொய்தாலும்
பொய்களும் கவிதைதான்

ஆக்கலும்
தாக்கலும்
அழித்தலும் கவிதைதான்

காகம் கரைத்தலும்
நாய் குறைத்தலும்
ஓநாய் ஊளையும் கவிதைதான்

அண்டம் பண்டம் திண்டம்
சர்வலோகமும் சர்வகாரணீயும்
  கவிதைதான்


Monday, June 20, 2016

காத்து நிற்கிறோம்

காத்து நிற்கிறோம் ..
காத்தாக ......பூவாக கொடியாக செடியாக மரமாக வேறாக கிளையாக
அதில் கனிந்த கனியாக......காத்து நிற்கிறோம்....,




கவிஞன்னின் தகுதி

கவிஞன் ஆவதற்க்கு எந்த தகுதியும் தேவை இல்லை

தகுதி மிகுதி இருந்தால் அவன் கவிஞன்னே இல்லை



Saturday, June 18, 2016

அவளை நாடாதே

மனமே அவளின்றி
இவ்வுலகம்
இல்லையென்று எண்ணாதே

அவளின்றி நீ நொடிதல் கூடாதே

அவள் நினைவை தீண்டாதே
மனமே
மீண்டும் அவளை
நாடாதே ..நாடாதே...!


தேவதையாக

ஒரு தேவதையிடம்
என் மனதை கொடுத்தேன்
அதை எடுத்து கொண்டு
வேற் ஒருவனுடன்
பறந்துவிட்டாள்

தேவுடியாள் என்றும்
திருட்டு முண்டம் என்றும்
அவளை திட்டி தீர்த்தேன்

என்னிடமிருந்து இட்டு சென்றவன்
அவள் சிறகினை உடைத்து
நடு வீதியில்
விட்டு சென்றான்

அதை  கேள்விப்பட்டு
துடி துடித்து போனேன்

ஐயோ பவம்
என்று பரிதவித்து போனேன்

இரக்கத்தை
அள்ளி விசினேன்
அன்போடு அரவணைத்தேன்

என் நிழல் கூட
அவள்மேல் விழாமல்
உடைந்த சிறகினை தைத்து
நம்பிக்கை யூட்டி
பறக்க செய்தேன்
மீண்டும்
தேவதையாக



என் ஆளு

ஆள்ளாளுக்கு ஆளு
என் ஆளுக்கு
என்னை தவிற
இல்ல
வேற
ஆளு


Friday, June 17, 2016

பிழை எழுத்து

இலையும் மரமும்
அசையும் காற்றும்
அலையும் கடலும்

நீரும் நெருப்பும்
வானும் மண்ணும்
இரவும் பகலும்

மொழியும் தமிழும்
அவளும் நானும்
எழுத்தும் பிழையும்


அவளால் நிறைந்தேன்

காணலாய் தேடலில்
பாடலில்  வரைந்தேனே
அவளை பருகி 
நிறைந்து  பறக்கிறேன்
விறு விறு வேகமாய்

--------------------------------------------------

காணலாய் தேடலில்
பாடலில்  வரைந்தேனே
அவளை !
அமுதென பருகி 
நிறைந்து  பறக்கிறேன்
விறு விறு வேகமாய்


Tuesday, June 14, 2016

என்னை பிடிக்காது

என்னை கண்டால் பார்க்க பிடிக்காது
என்னை கண்டவர்களுக்கு
என்னை பிரிய பிடிக்காது


செமையா மாட்டிகிட்டேன்

என் திமிரும் காணவில்லை
என் இரக்கமும் காணவில்லை
ஏதோ ஒரு நிலையில்
செமையாக (நன்றாக) மாட்டிக்கொண்டேன்
அவள்மேல் உள்ள காதலால்

--------------------------------------------------------------------

அவள்மேல் உள்ள காதலால்
என் திமிரும் காணவில்லை
என் இரக்கமும் காணவில்லை
ஏதோ ஒரு நிலையில்
செமையாக (நன்றாக) மாட்டிக்கொண்டேன்

------------------------------------------------------------------------


உன் மையை பூசிக்கொண்டேன்

முன்பே
என்னிடம் ஒன்றுமில்லை என்று
புரிந்துகொண்டு பழகி இருந்தால்
தெரிந்திருக்கும்
என்னிடம்
உண்மையை(உன்+மையை)  தவிற
வேர்றோன்றும் இல்லையென்று


வினை தீர்க்க இணை

உன்னால் மதி கெட்டு
விதி கெட்டு போனேன்
உன் வினை தீர்க்க
என்னுடன்
இணை சேர்வாயா ?


Thursday, June 9, 2016

காயும் மீனு

தூண்டில்  முள்ளுக்கு மாட்டாத மீனு
வலையில சிக்கிக்கும்

வலைக்கு தப்பிச்ச மீனு
சுறா வாய்ல ஆப்ட்டுக்கும்

எதுலையும் மாட்டி சிக்காத மீனு
கரையில கருவாடாய் காயும் .


அகலா நினைவுகள்

என் நினைவில் இருந்து அகலாத
உன் நினைவுகள்
என்னை சிறிது சிறிதாக சிதைப்பதை
என்னால் உணரவே முடியவில்லை


Thursday, June 2, 2016

புதிர்

சொல்லி  புரிவதில்லை
சொன்னாலும் புரிவதில்லை
புரியாத புதிராகவே  இருந்துவிட்டு
ஒன்றும் புரியாமலே  போகிறேன் (போகிறாய்)
புதிராக


உயிரே மிட்ச்சம்

வருகிற எல்லாவற்றையும் ஏற்றுகொள்ளும் நிலை வரும்போது
நம் கைகளில் உயிர் மட்டுமே மிட்ச்சமிருக்கும்.