Thursday, March 30, 2017

கோப்பையில் தொடங்கிய கதை

நிறைந்து தழும்பிய காபி கோப்பையுடன்
திரும்பியபோது எதிர்பாராதவிதமாக
அவள் கோ பைகளுடன் மோதிவிட்டேன்
காபி அவள் மேலாடையில் சிந்தியது
பார்வை படிந்த கறைகள் காயும் முன்
இரு கண்களும் மோதியது
மனதுக்குள் ஒரு மின்னல் வெட்டு


Friday, March 24, 2017

கண்மணி கவிதைகள்

இரவல் வாங்கிய கவிதை புஸ்தகம் ஒன்றை வாசித்துகொண்டிருந்தாள் கண்மணி
அதில் ஒரு கவிதை
கண்மணி என்கிற தலைப்பில்

இரவல் வாங்கிய புஸ்தகத்தில் கண்மணி கவிதைகளை
இரவெல்லாம் வசித்தாள்
இரவோடு இரவல் காலம் முடிந்துவிடும் முன்னே
கண்மணி கவிதை புஸ்தகத்தில் உள்ள
கவிதைகளை வாசித்து முடித்தாள்.

வாசித்தாள்
கண்மணி
கவிதையை
நேசித்தாள்
கண்மணி
கவிதைகளை

தற்போது கனவில் கண்மணி கவிதைகளின் இரவல் காலத்தில்.



அவளிடம் அன்பே

அவளிடம் பிடித்தது பொய் தான்
கண்களில் தெரியும் காதலின் மயக்கம்
காதலை சொல்வதில் உதட்டினில் தயக்கம்
நொடி நொடியாய் நேரம் பெருக
(காதல்) கனவின் காட்சிகள் நீள
பதில் ஏதும் சொல்லாமல்
எனைவிட்டு சென்றாய் அன்பே


Tuesday, March 21, 2017

கவிதைகள் தினம்

கவிதைகள் தினத்தில்
புதியவர்களை அடையாளப்படுத்தாமல்
மூத்த கவிஞர்கள்
இன்னும் மண்டை ஓடுகளுடனே தான்
தங்கள் கவிதைகளை வாசித்து கொண்டு இருக்கிறார்கள்
அந்த மண்டையோடுகளின் பாராட்டே
அவர்களுக்கு போதும் போலும்


Friday, March 17, 2017

நிஜம் தெரியாது

நீ என்னை கேட்டவன் என்றால்
நான் கேட்டவன் தான்
நீ என்னை நல்லவன் என்றால்
நான் நல்லவன் தான்

நீ என்னை பார்க்கும் விதங்களில் தான் நான் இருப்பேன்( இருக்கிறேன்)
அதுவாகவே நான் உனக்கு பிரதிபலிப்பேன்  (பிரதிபலிக்கிறேன்)

ஆனால் என் நிஜம் உனக்கு தெரியாது
சொன்னாலும் புரியாது


காதலிக்க நேரமில்லை

அவள் என்னை காதலிப்பதை உறுதி
செய்யத்தான் விரும்பினேன்
ஆனால் அவளை காதலிக்க எனக்கு நேரமில்லை
இருந்தபோதும் என் காதலில் குறைவில்லை
அது அவளுக்கும் தெரியும்

எங்கள் இருமனங்களின் புரிதலை
இந்த உலகம் ஏற்றுக்கொள்ளவில்லை

ஆகவே அவளை உத்தமியாக்கி
வெளியேற வழி செய்து
வெளியேற்றி விட்டேன்

பிறகு எனக்கொரு நன்றி சொல்லக்கூட
அவளுக்கு நேரமில்லை

எனக்கோ மீண்டும் வேறு யாரையும்
காதலிக்க நேரமில்லை




Tuesday, March 14, 2017

பின்னாலே

அழகுக்கு பின்னால ஆபத்து இருக்கும்
அசிங்கத்துக்கு பின்னால புறக்கணிப்பு இருக்கும்
ஆத்திரத்துக்கு பின்னால வெறுப்பு இருக்கும்
அன்புக்கு பின்னால ஆதரவு இருக்கும்

இப்படி வாழ்க்கையும் அதை சார்ந்த செயல்பாடுகளும்
ஒன்றன்பின் ஒன்றாக பின் தொடர்ந்து கொண்டே இருக்கும்


ஊரும் சாதியும்

ஒரு ஊருக்குள்ளே
வடக்கு தெரு தெற்கு தெரு
மேல் (ஊர்) பாக்கம் கீழ் (ஊர்) பாக்கம்
பெரிய ஊர் சின்ன(சிறிய) ஊர்

கழனி உடையவன் மேல தெரு
காலணி இல்லாதவன் காலனி

(ஊர்) மதிப்பு செறிவுடையவன் சொந்தம் செல்வந்தன்
பொது இடத்தில் சேர்க்கை இல்லாதவன் சேரி

இரட்டை குவளை ஒழியலாம்
ஊரும் பெயரும் அதன் இரட்டை அடையாளமும் ஒழியுமா ?

சவம் கடக்க பாதை மறுப்பு என்கிற அநீதிகளை
இன்றைய சந்ததிகளுக்கு சொன்னால் புரியுமா ?
-----------------


சொல்பவனை பார்த்து
உன்னை நீ அடையாளப்படுத்துகிறாய் என்றால்
வேறு வழி ?

அரசு ஆவணமாக தட்டினோம் திறக்கவில்லை
அதிகார சாவியால் திறந்தோம்
ஈயம் பூசிய களிமண் சாவி தான் உடைந்தது
ஆத்திரத்தில் அனைவருக்கும் சமநிலை என்று எட்டி உதைக்க போகிறோம்
(அருகாலுடன்) கதவு நிலையுடன் பெயர்ந்து உடையப் போகிறது