Saturday, June 28, 2025

அலைக்கற்றை காதல்

 அடங்காத 

அலைக்கற்றை காதல்


அடங்கிய

ஆத்மார்த்தமான காதல்


காலம் போக்க 

காதல் செய்கிறார்கள்


கண்ணியமான காதல்

காணாமல் போகிறது


காசு உள்ளவரை

காதல் தொடர்கிறது


காம காதல்

கள்ளக்காதலில்

நிலையாகிறது

Wednesday, June 4, 2025

மகா தர்மம்

 புழு முதல் மிருகம் வரை

செடி கொடி மரம் வரை

உள்ள தர்மம் 

மனிதரிடம் இல்லை

கற்றோ இயல்பிலோ 

இருந்தாலே மாமனிதன் 


தன்னால் கொல்ல முடிந்ததை கொல்லாமல் விடுவதும்

தன்னால் ஏமாற்ற முடிந்ததை ஏமாற்றாமல் இருப்பதும்

மகா தர்மம்





Friday, March 7, 2025

அறமே ஆயுதம்

  திமிர்வாதம் கொள்ளும்

துரோகம் துளிரும்

பேராசையில் மனம் பிறழும் 

பெரும் தவறு செய்ய தூண்டும் 

உதவாத எண்ணம் கொடுக்கும்

கொடுஞ்செயலை ஆதரிக்கும்

அந்த ஆணவத்தை அழிக்கும்

ஆயுதமே அறம் 

அற செயலே ஆயுதம்


Sunday, January 12, 2025

அழுத்தத்துக்கு உள்ளாக்கபட்டோர்

 தலை நிமிராதே 

நேரெதிரில் தலை காட்டாதே

வீதிகளில் காலணி அணியாதே 

குவளையில் நீர் அறுந்தாதே 


கோவில் உள்ளே வராதே

பொது நிகழ்ச்சிகளில் கலக்காதே 

மேடை ஏறாதே மேல் சட்டை அணியாதே

ஓங்கி பேசாதே

வேதம் ஓதாதே 

மீசை வைக்காதே

மீறும் வரை உண்ணாதே


கல்வி கற்க்காதே 

காதல் கொள்ளாதே

காசை எண்ணாதே

கால்மேல் கால் போடாதே


இப்பேர் பட்டோர் 

அழுத்தத்துக்கு உள்ளாக்கபட்டோர் 

அழுத்தம் அதிகமாகிவிட்டது

வெடிக்க போகிறது

அதிகாரம் (அணிகலனாக) அடையாளமாக போகிறது




Sunday, January 5, 2025

சமத்துவமே பண்பாடு

 முற்கால விதிகள் பேசி 

கனகாம்பரம் சூடாமல் போன கைம் தலைகள் கோடி.


கருவறை எட்டாமல் எட்டி நின்று பார்த்து காணிக்கை மட்டும் செலுத்தி தூபம் கண்ணில் ஒத்தி ஒய்யாரமாய் ஒதுங்கியவர்கள் கோடி


செய்யும் தொழில் தெய்வம் என்பார்

செய்த தொழிலை தனக்கான சாதியாக்கி அதனை இனம் போல கருதி இனங்காமல் முரண்பட்ட முட்டாள்கள் கோடி 


முட்டி மேல் கால்சட்டை போட்ட பின் மடிசார்கால கதைகள் பேசும் பெண்கள் கோடி 


இவர்கள் பிற்போக்கு தனத்தின் உச்சம்.

பிறப்பால் பாகுபாட்டை வகுத்து கொண்டவர்கள் 

பண்பால் பகை கலைய பாடம் எடுக்கிறேன்..

பண்பட்டுவிடுங்கள்