Thursday, January 29, 2015

சுயநலம்



பிறர் நம்மேல்
வைத்திருக்கும் நம்பிக்கையை
இழக்க செய்யும் நம்
 சுயநலம்

காதல் ரணம்



தொண்டையில் மீன் முள்ளாய்
சிக்கி கொண்டாள்
கையால் எடுத்து போடவும் முடியவில்லை
உள்ளுக்குள் விழுங்கவும் முடியவில்லை

ரணம் மட்டும் பெருகிக்கொண்டே செல்கிறது



Tuesday, January 27, 2015

மனமாற்றம்

எதுவுமே கஷ்டமில்லையே
சூழ்நிலையை அமைத்து கொண்டாலே

வலி கூட ஈஷ்டமாகிடும்
மனம் துணிந்து விட்டாலே


காதலன்


வராத நிலவை  வா வா
என்பான்
(கவிஞன்)
கரையாத கதிரவனை
கரைய சொல்லி கேட்பான்
(காதலன்)

கதை கதை
கதைகள்
சொல்வான்
நேரம் தப்பி வந்து நிர்ப்பான்

 கெஞ்சி பார்ப்பான்
கொஞ்சி பார்ப்பான்
கொஞ்ச விட்டால்
மிஞ்சி பார்ப்பான்

கல கலவென
சிரிக்க வைப்பான்
கவலைகளை
மறக்க வைப்பான்

பொய்யாலே போதனை செய்வான்
பாவம் போல் முகத்தை வைப்பான்
பொறுமை இழந்தால் பொருத்தனை செய்வான்
பேதையாய் என் முந்தியில் குடை பிடிப்பான்

சில பல
நிலை
காதலுக்காக கடப்பான்       (கடந்து நிர்ப்பான்)
சிலைபோல்
காலடியில் காத்துகிடப்பான்

மனம் கோணாமல் நடப்பான்
மாலையிடுவான்
மாங்கள்யம் சூட்டுவான்
மதி மயங்க செய்வான்.

காதலன்

Saturday, January 17, 2015

கடினமில்லை


என்னிடம் வாழ்த்துக்கள் பெறுவது
கடினமில்லை
என்னுடன் வாழ்வதும்
கடினமில்லை
என்னை ஏமாற்றுவதும்
கடினமில்லை
என்னை நிந்திப்பதும்
கடினமில்லை

ஆனால்

என்னை பிரிவது கடினம்
என்னை மறப்பது கடினம்

Wednesday, January 14, 2015

நான் நானாக நடிக்கிறேன்



நான் இன்றி நான் இல்லை
நான் இன்றி நான் இல்லை என்னை மட்டுமே
நம்பி நான் இல்லை

நான் இரசிக்க அரிதாரம்
பூசுகிறேன்
நான் சிரிக்க நகைசுவை
செய்கிறேன்
நான் வெறுக்க நயவஞ்சகம்
செய்கிறேன்
நான் சிறக்க பாடல்
படிக்கிறேன்


நாணுகிறேன் நாணலை போல்
ஞானம் பெறுகிறேன் துறவியை போல்
அருள் புரிகிறேன் கடவுளை போல்

மெய்யான போலியை மெய்மறந்து இரசிக்க
நான் என்னை முழுவதும் தாரை வார்க்கிறேன்

நாடகம் அரங்கேற்றுகிறேன்
அனுதினமும் அதில்
நான் நானாக நடிக்கிறேன்.

Monday, January 12, 2015

யார் அவள் ?


யார் அவள் ?

என்னோடு வருகிறாள்
என்னுடன் இருக்கிறாள்
என்னுடனே புசிக்கிறாள்

என்னை அனுதினமும் ரசிக்கிறாள்.
 என்னை மெழுகேற்றுகிறாள்

முகமலர செய்கிறாள்
மதிமயங்க செய்கிறாள்

வழி காட்டுகிறாள் , வழி நடத்துகிறாள்.
வசை வீசுகிறாள் , வாழ்க்கை தருகிறாள்

ஆருடம் சொல்கிறாள்
என்னை ஆளுமை செய்கிறாள்.

காதலை வளர்க்கிறேன்

காதல் வெட்ட வெட்ட
துளிர்த்து கொண்டே இருக்கிறது

வேரோடு பிடுங்கி எறிய முயல்கிறேன்
என்னை உயிரோடு அழிக்க முயல்கிறது .

காதலை வளர்க்கிறேன்
கடைசி வரை என்னை காயபடுத்துகிறது
 (காயபடுத்திகொண்டே இருக்கிறது) .


Saturday, January 10, 2015

கல்யாண கனவு




கல்யாணம் என்ற நிகழ்வு
தள்ளி போகுது
காசு இல்லாமல் கன்னி காத்துகிடக்குது
கண்கள் கண்ணீரில் மூழ்குது.
பாவம் என்ற சொல் காதேறுகிறது



பேருந்து அகராதி


ஏறு ஏறு
உள்ள போ உள்ள போ
சில்லறைய எடுத்து கைல வை

சீட்டு என்றால் டிக்கெட்
டிக்கெட் என்றால் பயணச்சீட்டு

ஸ்டாபிங் என்றால் பேருந்து நிறுத்தம்
பஸ் ஸ்டாண்ட் என்றால் பேருந்து நிலையம்

விசில்........விசில்........!
ரைட் ரைட்

 டிக்கெட் டிக்கெட்

விசில்.
ஓல்டேன்.

காவலர் அகராதி







போலீஸ் என்றால் காவலர்

ஸ்டேஷன் என்றால் காவல் நிலையம்
மாமுல் என்றால் லஞ்சம்.

கேஸ் என்றால் சம்பவம்
அக்குஸ்ட் என்றால் குற்றவாளி
எவிடேன்ஸ் என்றால் சாட்சி
வியப்பன் என்றால் ஆயுதம்
எப் ஐ ஆர் என்றால் முதல் தகவல் அறிக்கை .

கோர்ட் என்றால் நீதிமன்றம்
பைன் என்றால் அபராதம்
ஜாமீன் என்றால் பிணை
 நான்பெயில் என்றால் வினை
ஜெயில் என்றால் சிறை
ஜட்ஜ்மென்ட் என்றால் தீர்ப்பு


ஆசிரியர் ஆசிரியை அகராதி



சார் என்றால் ஆம்பளை
டீச்சர் என்றால் பொம்பளை
இன்ஸ்பெக்ஷன் என்றால் சோதனை.
அர்ரியர்ஸ்,போனஸ் என்றால் சாதனை.


Saturday, January 3, 2015

இறைவனை மன்னிக்கிறேன்

இறைவன் என் கால் அடியில்
கை ஏந்தி நிற்கிறான்
கருணைக்காக காத்துகிடக்கிறான்

அவனை மன்னிப்பதா
வேண்டாமா ?
என்று
என்னை தனிமையில்
சிந்திக்க விட்டுவிட்டான்

Friday, January 2, 2015

நம்மை நம்பி

நான் அவளை நம்பி இல்லை
அவளும் என்னை நம்பி இல்லை
ஆனால்
எதையோ நம்பி இருவரும் ஒன்றாக இருக்கிறோம்
வீணாக பொழுதை கழிக்கிறோம்.
இது எதுவரை
நம்மை நம்பி ஒரு ஜீவன் வரும் வரை



சுமைகளை சுமக்கிறேன்


என்னால் முடிந்தும்
பிறருக்கு நான் செய்யாத உதவி
 செய்யத்தவறிய என் கடமைகள்
என்று அன்று
நான் தூக்காத சுமைகளை இன்று
 என் தொப்பையில் சுமக்கிறேன் .