Friday, February 27, 2015

தயக்கம்

காதல் சொல்வதில்
காமம் கொள்வதில்
எனக்கும் அவளுக்கும் தயக்கம்
ஆகையால்
இல்லை இருவருக்கும் உறக்கம்

Thursday, February 26, 2015

கொடுமைக்காரி

கொடுங்கோல் பார்வை உடையவள்
அவள் முன்பாக நாவடங்கி போகிறேன்
செயலாற்ற பிணம்போல் கிடக்கிறேன்
அவள் காலடியில் அனுதினமும் நானே
எனக்கு இறுதி சடங்கு செய்கிறேன்.
என் மனைவி ஒரு கொடுமைக்காரி


எண்ணங்கள் என்னுள்

அவனுக்காகவே
வெகு காலம் காத்துகிடந்தேன்
என் எண்ணமெல்லாம்
 அவனையே எண்ணிகொண்டிருந்தேன்
அவனை கண்டதும்
என் சிறகுகளை விரித்து
 அவனை என்னுள் ஏந்திகொண்டேன்


Monday, February 23, 2015

என் கனவு

கனவுகளுக்கு இடையே நல்ல தூக்கம் வந்து
என் கனவுகளை கெடுத்து விட்டது



துங்கியபின் வந்த கனவு
என் கனவுகளை நினைவாக்கியது
தூங்கிய கனவு
தூங்கா கனவு
துயிலுரித்த கனவு

Tuesday, February 17, 2015

என்னோடு நீ இருந்தால்

காதலை சொல்லிவிட மனம்
துடிக்கிறது
அதை ஏனோ உதடு சொல்ல
மறுக்கிறது
=======================
என் அருகில் நீ நிற்கும்போது
என் அட்ரினல் என்னையும் தாண்டி எகிறி குதிக்கிறது .
=======================


Saturday, February 14, 2015

காதலிக்கிறோம்



அவளுக்கும் எனக்கும்
ஒத்து போகாது என தெரிந்தும்
மீண்டும் மீண்டும்
அவளிடமே ஒத்துபோகிறது
மனம்

----------------

அவனுக்காக நான் காத்து
நிற்கிறேன்
அவன் எனக்காக
காத்திராத போதும்

--------------

இருவரும் காதலிக்கிறோம்
இருவரில் ஒருவர்
அறியாதபோதும்.

--------------

Thursday, February 12, 2015

முதல் சந்திப்பு



நம்
முதல் சந்திப்பிலே
காதல் வயபட்டுவிட்டேன்
அதை விவரிக்க தெரியாமல்
சிலந்தி வலைக்குள் சிக்கலானேன்


............to be continued..


இறுமாப்பு காதல்



அவள் திமிரும்
என் திமிரும்
முற்றிகொண்டது

மோதலால்
வெறுமை
பற்றிக்கொண்டது

இறுமாப்பு
இதயங்கள்
இணைய மறுத்துகொண்டது

விட்டு கொடுக்க
மனமில்லாமல்
அன்பு
முரண் பட்டுகொண்டது

காதல்
சாதலாகவில்லை
மோதலானாது
பிரிதலில்
உறவை
முறித்துகொண்டது

உடலால்கள்
பிரிந்தாலும்
மனம் அகலவில்லை
நினைவில் அவள்


Monday, February 9, 2015

என்னை தெரிந்துகொள்



கடிகார முள் நகர
வேண்டியதில்லை
நான் நாழிகையில்
நாட்கள் கடத்த  (கடக்க)

பையில் பணம் இருக்க
வேண்டியதில்லை
என் தேவைகளுக்காக
செலவுகள் செய்ய

சண்டையிட்டு கொள்ள
தேவையுமில்லை
என் உரிமைகளை
விட்டுவிடாமல் இருக்க

கடவுள் அருள் புரிய
அவசியமுமில்லை
என் கனவுகள்
என்முன் நிகழ

இதயம் என்னுள்
இருந்ததே இல்லை
இவுலக இன்பங்களுக்கு
இசைந்து செல்ல

----------------------------------------------
[ உரை ] [நிறையக பொருந்தாது]

நேரம் பார்த்து செயல் படுபவன் இல்லை

நல்லது செய்ய கடவுள் அருளுக்காக காத்து இருக்க அவசியமில்லை


Sunday, February 8, 2015

உரசல்

 பேருந்தில் உரசல்களை
சமாளிக்க முடியவில்லை
சகித்துகொள்கிறேன்..!
---------------------------------


Saturday, February 7, 2015

சங்கமம்



நானும் காத்து நிற்கிறேன்
அவளும் காத்து நிற்கிறாள்
காலமும் காத்து நிற்கிறது
 நானும் அவளும் காலமும் சங்கமிக்க....!

Thursday, February 5, 2015

மழலை அழகே



செந்தமிழ் சுடரே
செங்காந்தாள்  மலரே (பூவே)

நதியில் படர்ந்த
முழு நிலவே

உன் விழி அழகே
உன் சிரிப்பழகே
உன் மழலை மொழி அழகே

 உன் எண்ணமெல்லாம அழகே
என் அழகே நீ அழகே

Wednesday, February 4, 2015

கடைசிவரை



                                                 த̶ா̶ழ̶̶்த̶̶்த̶ப̶ட̶̶்ட̶வ̶ன̶ா̶ய̶̶் ̶ ̶ ̶ ̶ ̶ ̶ ̶ ̶ ̶ ̶   (அடிமைபோல்)
நிந்திக்கபடுகிறேன்
துன்புறுத்தபடுகிறேன்
ஒடுக்கபடுகிறேன்
முடக்கபடுகிறேன்
புறக்கனிக்கபடுகிறேன்
கைவிடபடுகிறேன்
கடைசிவரை

Tuesday, February 3, 2015

என் நிழலே

என் நிழலே
இன் நிகழ்லே
எனை பிரியாதே
என் உயிரே.

புது நிலவே
துரிகையே
வின்மலரே

உனை
தீண்டாத
வினை



.....

To be continued

Monday, February 2, 2015

வெல்வது எளிது

என்னை வெல்வது எளிது என எண்ணாதே

நான்
ஆழ்கடலை தூர்வாரியவன்
அடிவானம் வரை அளந்து பார்த்தவன்

போர் முன் பின் முதுகிடாதவன்
தேர் போல்  உயர்ந்து நிற்ப்பவன்

எழில் உள்ளவன்
எளியோருக்கு இறக்கம் கொள்பவன்

எதிரிகளை
எல்லென எண்ணாதவன் 
ஏளனம் செய்போரை
எளிதில் வெல்பவன்

எளிமையில்
வாழ்பவன்

(Not Satisfied )

தனிமையில் ஒரு பயணம்

யாருமில்லா உலகில்
தனிமையில் ஒரு பயணம்
மிக எளிது

யாவருமிருக்கும் உலகில்
தனிமையில் ஒரு பயணம்
மிக கொடியது


மாயை



உலகின் மாயைகள்
என்னை மதிமயக்குகிறது
அதில் என்னையே மறந்து
மாயை யாகிறேன்

Sunday, February 1, 2015

காதல் என்னும் கொடியவன்

வாலிபம் கடந்துவிட்டேன்
வயதை தொலைத்துவிட்டேன்
இன்னும் உன் கடைக்கண்
பார்வை கூட என் மேல் படவில்லை
காலமெல்லாம் காத்திருக்க செய்கிறாய்
காதல் என்னும் கொடிய பெயரில்
காதலே உன் மனதில் ஈரமில்லையா