Sunday, March 8, 2015

என்குறள்

தெய்வங்கள் உண்டு என்பார்
கடவுள் இல்லை என்பார்

பொய்யும் புரட்டும் உண்டு என்பார்
உண்மையும்  நியாமும் இல்லை என்பார்

வல்லுறவு உண்டு என்பார்
நல்லுறவு இல்லை என்பார்

கொலையும் களவும் உண்டு என்பார்
நல்லதோர் மனிதன் இல்லை என்பார்

உண்டு என்பார் பொருட்டு இவ்வுலகம்  இல்லை
இல்லை என்பாருக்கு அவ்வுலகம் இல்லை.