Thursday, March 12, 2015

என் கனா

என் கனா வினா கொண்ட உலா
முழுமதி பிறைமதி என் கால்மிதி சுவடு

கொண்டாய் முடி திருத்தி
நகம்தனை நறுக்கி
பிண்டம் தின்று
பிணங்களை
பண்டம் மாற்றி கொள்வேன்

தேகம் தீண்டாமல் காமம் கொள்வேன்
தேவரடியாருடன் காதல் கொள்வேன்

உடல் தாவி உருமாருவேன்
உறக்கமற்று விழித்திருப்பேன்

----------------------------End---------------------------

காற்றோடு மிதப்பேன்
நீரோடு பராப்பேன்

யாக்கை திரித்து
நெருப்போடு கலப்பேன்
நெடுஒளியில் நடப்பேன்

நில்லாமல் இல்லாமல்
போவேன்
கனவாக