Monday, March 16, 2015

ஜிங் ச்சாங் ஜிங்லீ

தென்னங் குட்சி நுனியில் இருந்து
விசுரபட்ட இளவம் பிஞ்சியை போல்

கால்கள் தரையில் படாமல்
மரம்விட்டு மரம் தாண்டிய குரங்கை போல்

வேப்பம்பழம் அரை கோட்டை ஓட்டை விரல்கள் முட்டியில்
அடித்து உடைத்து வந்த ரத்தம்போல்.

நீண்ட வால்கொண்ட பட்டத்தை உயர பறக்க விட்டு
அதற்க்கு நூல் வழியே தந்தி அனுப்பியதை போல்

கொட்டாம்குட்ச்சியில் அவளுடன் சமைத்து
ஒரு பகல் குடும்பம் நடத்தியதை போல்


பள்ளியில் வீட்டு பாடம் எழுதாமல்
வாகுப்பறையீன் முன் முழங்கால் இட்டது போல்


ஆண்டு இறுதி நாளில் அடுத்தவன் வெண்ணிற சட்டையில்
அடித்தனுப்பிய பேனா மையை போல்


நான் வளர்த்த கோழியை போல்
நான் வளர்த்த கிளியை போல்
நான் வளர்த்த புறாவை போல்
நான் வளர்த்த முயலை போல்
நான் வளர்த்த நாயை போல்

நானும் இன்று நகரத்தில் வளர்க்க படுகிறேன்


எண்ணற்ற செயல்களை தொலைத்துவிட்டு
எண்ணற்ற எண்ணங்களை சுமந்து வாழ்கிறேன்.