Tuesday, March 31, 2015

கண்டுகொள்

நம்மை தேடி வரும் நபர்களை நாம் கண்டுகொள்வதே இல்லை
நாம் கண்டுகொள்ளும் நபர்கள் நம்மை தேடிவருவதே இல்லை

Friday, March 27, 2015

ஏதோ ஏதோ ஆகுதே

(A Song into my Heart with Music)
 ஏதோ ஏதோ ஆகுதே
காதல்
என்னுள் எதோ செய்யுதே

நான்......... மழை பொழிந்திடும் மேகம்
நீ ................வெண்மலர் கொடி தேகம்
நாம்........... மன்மத லோக காமம்

நான்............காசி நாட்டு ஆகோரி
நீ...................உள்ளூர் பொய்காரி
நாம்.............சர்வதேச காதல் வியாபாரி

ஏதோ ஏதோ ஆகுதே
காதல்
என்னுள் எதோ செய்யுதே

மனசு தத்தி தாவுதே
இதயம் இங்கே நோகுதே

நானும் உன் பின்னே என்னை தேடி அலைகிறேன்
நீ ஒரு சுகம் தரும் பார்வையால் தந்தி அனுப்பினால் என்ன

என் அனுமானம் சரி என்று நம்புகிறேன்
உன் பெண்மனம் இல்லை என்று கரையூதே.

காகித காதல் மனுக்கள் அனுப்பவா
நீ போகுமிடமெல்லாம் உன்முன்னே வந்து தொலையவா
உனாக்காக கால்கடுக்க காலமெல்லாம் நிற்க்கவா
இது நமக்கு தேவையா ? இல்லை
எனக்கு வேறு வேலைகள் தான் இல்லையா ...?

அப்புறம்

ஏதோ ஏதோ ஆகுதே
காதல்
என்னுள் எதோ செய்யுதே

நான்..........முடி சூடா மன்னன்
நீ.................முத்திய பிள்ளை நங்கை
நாம்.......... ரிஷிகள் எழுதா வேதம்

நான் ........நெருப்பின் சுவடு
நீ................என்னுள் பதிக்கப்பட்ட மந்திர தகடு
நாம்..........அனல் மூட்ட உதவும் பயனில்லா பதரு

ஏதோ ஏதோ ஆகுதே
மனசு தத்தி தாவுதே

அப்புறம்

இ--------இஷ்டமில்லை  (உனக்கு)
கா-------கஷ்டமில்லை   (எனக்கு)
நா-------நஷ்டமில்லை    (நமக்கு)
                           { இஷ்டம் இல்லை என்றால் சொல்லிவிடு
                              (செலவு வைத்து கஷ்டம் தராதே)
                           நஷ்டம் என்பது நமக்கில்லை என்று சொல்லு }

ஏதோ ஏதோ ஆகுதே
இதயம் இங்கே நோகுதே
காதல்
எதோ செய்யுதே
காமம்
செய்ய சொல்லுதே

அப்புறம்

ஏதோ ஏதோ ஆகுதே
(என்னுள்-இல்லை- இல்லை- )
நம்முள்
ஏ...தே ...தோ ஆகுதே
மனசு தத்தி தாவுதே



Monday, March 23, 2015

காம நினைவு

உதடும் உதடும் ஒட்டிக்கொண்ட நினைவு
உள்நெஞ்சை உருட்டி விட்டு
உறக்கத்தை பறித்து விட்டது

ரோமங்கள் வருடிய கைகள்
மஞ்சத்தின் மேலாடையை
கசக்கி பிழிகிறது

எஞ்சிய அங்கங்கள்
பாவம் செய்ய
பாகபிரிவினை கோருகிறது

தொட்டுவிட விட்டுவிட
பட்டதெல்லாம்
தொட்டதெல்லாம்
காமம்


Friday, March 20, 2015

செருப்பு திருடன்

செருப்பு வாங்க வக்கில்லாதவனுக்கு
கோவில் வாசல் ஒரு இலவச செருப்பு கடை


Monday, March 16, 2015

ஜிங் ச்சாங் ஜிங்லீ

தென்னங் குட்சி நுனியில் இருந்து
விசுரபட்ட இளவம் பிஞ்சியை போல்

கால்கள் தரையில் படாமல்
மரம்விட்டு மரம் தாண்டிய குரங்கை போல்

வேப்பம்பழம் அரை கோட்டை ஓட்டை விரல்கள் முட்டியில்
அடித்து உடைத்து வந்த ரத்தம்போல்.

நீண்ட வால்கொண்ட பட்டத்தை உயர பறக்க விட்டு
அதற்க்கு நூல் வழியே தந்தி அனுப்பியதை போல்

கொட்டாம்குட்ச்சியில் அவளுடன் சமைத்து
ஒரு பகல் குடும்பம் நடத்தியதை போல்


பள்ளியில் வீட்டு பாடம் எழுதாமல்
வாகுப்பறையீன் முன் முழங்கால் இட்டது போல்


ஆண்டு இறுதி நாளில் அடுத்தவன் வெண்ணிற சட்டையில்
அடித்தனுப்பிய பேனா மையை போல்


நான் வளர்த்த கோழியை போல்
நான் வளர்த்த கிளியை போல்
நான் வளர்த்த புறாவை போல்
நான் வளர்த்த முயலை போல்
நான் வளர்த்த நாயை போல்

நானும் இன்று நகரத்தில் வளர்க்க படுகிறேன்


எண்ணற்ற செயல்களை தொலைத்துவிட்டு
எண்ணற்ற எண்ணங்களை சுமந்து வாழ்கிறேன்.
 

Thursday, March 12, 2015

என் கனா

என் கனா வினா கொண்ட உலா
முழுமதி பிறைமதி என் கால்மிதி சுவடு

கொண்டாய் முடி திருத்தி
நகம்தனை நறுக்கி
பிண்டம் தின்று
பிணங்களை
பண்டம் மாற்றி கொள்வேன்

தேகம் தீண்டாமல் காமம் கொள்வேன்
தேவரடியாருடன் காதல் கொள்வேன்

உடல் தாவி உருமாருவேன்
உறக்கமற்று விழித்திருப்பேன்

----------------------------End---------------------------

காற்றோடு மிதப்பேன்
நீரோடு பராப்பேன்

யாக்கை திரித்து
நெருப்போடு கலப்பேன்
நெடுஒளியில் நடப்பேன்

நில்லாமல் இல்லாமல்
போவேன்
கனவாக



ஏதோ காமம்


நான் மறையேன்
இன் நிகழே

நான் மறவேன்
இன் நினைவே

தோள் தொட்ட கரங்கள் வாழட்டும்
இதழ் தொட்ட இதழ்கள் உறையட்டும்

மார்பின்மீது தலை சாய்த்து 
இதயத்துடிப்பை உணரட்டும்
மதிமயக்கத்தில் கண்கள் உறங்கட்டும்

தொடுத்த நாணல் பூ பின்னட்டும்
தொட்டவிழ்த்த துளி அண்டமடையட்டும்
மொட்டவிழ்த்த பாளை குருத்தாகட்டும்

----------------------------------End-------------------------------
காய்யாகட்டும்
கனியாகட்டும்
விதையாகட்டும்
தளிர்றாகட்டும்
மரமாகட்டும்

--------------------------------------------------------------------


Wednesday, March 11, 2015

முயலுகிறேன் ❤️‍

இல்லாத ஒன்றை உருவாக்க முயலுகிறேன்
இருக்கின்ற ஒன்றை இழந்துவிட்டு
 --------------------- Extra-----------------------------
இறுதிவரை தொடங்கிய இடத்திலேயே நிற்கின்றேன்.
முயலுகிறேன் முடியும் வரை
முயலுகிறேன் முடியாதபோதும்

Tuesday, March 10, 2015

நான் கனவு

யாரும் தீண்டாத மலர் நான்
வாய்ப்பை ஏற்காத சுகம் நான்

முடிவுரை இல்லாத கதை நான்
முடிவில்லாத தொடர் கனவு நான்


நம்நங்கை திருநங்கை

ஆண்மையில் பெண்மையும்
பெண்மையில் ஆண்மையும்
வெறுமையில் ஒருமையில்
உரிமை கொண்டாடுகிறேன்

வீதி உலா செல்கிறேன்
வசை சொல்லை அள்ளுகிறேன்
இசைதாளம் போடுகிறேன்
இச்சைக்கு இசங்காமல் வாழ்கிறேன்.

இலக்கண பிழை இல்லை
தன்நம்பிக்கையில்
தவறேதும் இல்லை
என் செய்கையில்

சொந்தமில்லை
பந்தமில்லை
ஒளியுமில்லை
இருளுமில்லை

தவிக்கிறேன்
துடிக்கிறேன்
வெறுக்கிறேன்
நகைக்கிறேன் 
ரசிக்கிறேன்

( துணை இல்லாத எனக்கு
காதல் எதற்கு
வானம் தொட்ட எனக்கு
வைகறை எதற்கு )

வலைப்பூ

வருங்கால களஞ்சியம்
தற்கால கல்வெட்டு
வலைப்பூ

Sunday, March 8, 2015

யாசகனாய்

யாதும் ஊராகி
யாவரும் நட்பாகி
நட்போடு உறவாகி
உறவோடு பகையாகி

                                          ( உண்ண உணவும்மின்றி
                                                  உடுக்க உடையுமின்றி )

நடுத்தெருவில் நிற்கின்றேன்
நிதானமற்றவனாய்
நிர்கதியாய்
யாசகனாய்


என்குறள்

தெய்வங்கள் உண்டு என்பார்
கடவுள் இல்லை என்பார்

பொய்யும் புரட்டும் உண்டு என்பார்
உண்மையும்  நியாமும் இல்லை என்பார்

வல்லுறவு உண்டு என்பார்
நல்லுறவு இல்லை என்பார்

கொலையும் களவும் உண்டு என்பார்
நல்லதோர் மனிதன் இல்லை என்பார்

உண்டு என்பார் பொருட்டு இவ்வுலகம்  இல்லை
இல்லை என்பாருக்கு அவ்வுலகம் இல்லை.




Thursday, March 5, 2015

கனவுக்குள் கனவாக

அவள் ஒரு கனவு காண்கிறாள்
நான் ஒரு கனவு காண்கிறேன்
இருவரது கனவுகளும் சங்கமித்து
ஒரு கனவாக உருவெடுத்து
கைகளில் தவழுகிறது

இன்று
நான் காணும் கனவுகளை அவளும் காண்கிறாள்
இருவரும் ஒரு கனவில் குடி ஏறுகிறோம்
கனவுக்குள் கனவாக குடித்தனம் செய்கிறோம்.



Your Choice Title will be published here

அதிகாலை குயில்கள்
பைப் அடியில்
பிளாஸ்டிக் குடங்களுடன்
கூவி கொண்டிருந்தன

அதை ஒரு காகமாக
வெறுக்க பார்த்துகொண்டிருந்தேன்.

(You itself Give Title as you Like)

முணுமுணுக்கிறேன்

அதிகாலை காற்றினிலே பரவும் இன் படலை செவியோரம் உள்வாங்கி நாள்முழுவதும் முணுமுணுப்பதை போலே
நெஞ்சோரம் தங்கிக்கொண்ட அவள் எண்ணங்களை என்னுள்  நாள் முழுவதும் முணுமுணுக்கிறேன்


Monday, March 2, 2015

காதல் சொல்லு

காதல் சொல்லு
கவிதை சொல்லு

உன் விழியில்
என் வழியை
கோர்த்து செல்லு

to be continued............

நான் நிர்க்கதியாய்

இவள்
காதல் கொண்டாள்
என்மீது
காமம் கொண்டாள்

அவளும் நானும்
இணைந்திருந்தோம்
பினைந்திருந்தோம்
இவ்வுலகை
மறந்திருந்தோம்

தீராது இது தீராது
 இந்த பந்தம் என்றும் மாறாது

உயில்லில்லாமல் உறுதிகொண்டோம்
உயிருக்கு உயிராய் வாழ்ந்து வந்தோம்

நாழிகையில் நன்நாழிகையில்

துரோகம் செய்தாள்
என்னை
வன்மம் செய்தாள்
என்னுடனே
வாதம் செய்தாள்

நொடிபொழுதில்
நொடிபொழுதில்..........

எனை துறந்தாள்
எனை பிரிந்தாள்

எனை மறந்தாள்
எனை மறந்தாள்


நிர்க்கதியாய்
இக்கதியாய்
திக்கதியாய்

நிற்கின்றேன்
நிற்கின்றேன்

காதல் செய்தாள்
காமம் செய்தாள்
காயம் செய்தாள்




Sunday, March 1, 2015

உருவகமே காதலாகாது

ஒரு பெண்ணையாவது
உருவகம் செய்யாமல்
வெற்றிடத்தை எண்ணி
காதல் செய்யலாகாது

என்றெண்ணம் கொண்டேன்
விழியற்றவன் எண்ணங்களை
எண்ணுமுன்

                    Picture : https://www.facebook.com/IrinaShayk