Friday, July 31, 2015

தனிமையில்

அன்பிலே பன்பிலே
உன் கைகள் எனை தீட்ட
வண்ணமிழந்து வன்மம் கொண்டு
சூழ்ச்சியின் நாயகனாகிறேன்

உரசலும் புரசலும்
உள்நெஞ்சை உருக்குவதில்லை
ஆழ்மனதின் காயங்கள் என்னை மீள விடுவதில்லை
மீண்டுவர நானும் விரும்புவதில்லை

ஏன் என்ற  எண்ணம் என்னுள்
ஏழ்மையிலும் தாழ்மையிலும்
வாய்ப்பு வந்தாலும் வருடாமல்
வழி நோக்கி விழி வைத்தவன்
ஏங்கி நிற்கிறேன் தனிமையில்



Monday, July 27, 2015

இராணுவ வீரன்

உறைந்து கிடக்கும் பனிகளை
விரைந்து விரைந்து கடக்கிறோம்

வானம் முட்டும் மலைகளை
 கால்களால் அளக்கிறோம்

நேரம் கூட பார்பதற்கு நேரமில்லையே
கண் விழித்து  தேசத்தை காவல் காக்கிறோம்

உடல்களால் வேலி செய்து
உயிர்களால் வேள்வி செய்கிறோம்

கண்ணிமைக்கும் நேரத்தில் காலமாகிறோம்
(நினைவு தூண்களில் கல்வெட்டாகிறோம் )
வங்கி கணக்குகளில் காசோலையாகிறோம்


Sunday, July 26, 2015

உல்லாச மதனா

புஷ்ப வாக மதனா மோக காதல் லீலா புரினா
உல்லாசம் உள்ளிறங்கும் தருணா
உள்நெஞ்சம் உருகி போகும் உடனா

ராணி மதன மோக சுந்தரி
மேனி பவள முல்லை கொடி நீ
விண்தேரில் தேவலோக பவனி

அஜல குஜல பவ்வலா
தேஜா மதன மிதன பதனா

to be continued............

coming  soon

ஊடி கூடி சினமேது வரின்
.......................
கால்கள் மேலே பறக்கும் விமானா


Saturday, July 25, 2015

சாதி ஒழிப்பு

இந்த நாட்டில்.
இருண்டு கிடக்கும் சமுதாய மேம்பாட்டில்
மது ஒழிப்புக்கு முன்
சாதி ஒழிப்புதான் உடனடியாக தேவை
அதற்க்கு அடிப்படையாக தேவை
 கலப்பு திருமணங்கள் 



முதல் இரவு (ஹைக்கு)

நானும் அவளும் விழுந்து விழுந்து சிரிக்கின்றோம்
எங்கள் அறியாமையை எண்ணி
சிறு சிறு கண்ணிர் துளிகளுடன்


Wednesday, July 22, 2015

அவள் என்பவள் யார்

ஒருவேளை இவளாக இருப்பாளா
இல்லை
ஒருவேளை அவளாக இருப்பாளா
என்கிற தேடல் 
தொடர்கிறது
இன்னும் அவளை கண்டுபிடிக்கவில்லை
அது ஏனோ என்று எனக்கு விளங்கவில்லை
அவள் என்பவள் யார் ?
எங்கே இருக்கிறாள் ?
இப்போது என்ன செய்து கொண்டு இருக்கிறாள்.
தெரியவில்லை
தெரியவில்லை
எனக்கேதும்
தெரியவில்லை
.................to be continued


Monday, July 20, 2015

அவள் அழகை

மயிர் இழை இடைவெளியில்
என்னருகில் அவள் அமர்ந்தாள்

அவள் அசைவுகளில்
நெருப்பென பற்றிக்கொண்டது மனம்

அவள் விடும் பெரும் மூச்சு காற்று
என் கன்னத்தில் அறைந்தது

என்னை கட்டுபடுத்திக்கொண்டேன்
அவள் முகம் பாராமல் தவிர்த்தேன்

காற்றில் அவள் வேர்வையீன் ஈரத்தை நுகர்ந்தேன்
 அதில் நான் முழுகி கரைந்தேன்

முடியவில்லை முடியவில்லை
திரும்பி ஒருமுறை பார்த்துவிட்டேன்
அவள் அழகை.






தங்கமுகம்

திருக்கோவில் காரிருள் கருவறைக்குள்
மாவிளக்கு தீபத்தில் தங்கமுகம் கண்டேன்
தீப ஒளி கடந்து அவள் என்னை பார்த்த விழி  அழகு

என்ன அழகு அவள்
ஏந்தி நிற்கும் மார்பழகு
தாங்கி நிற்கும் இடை அழகு
கொடி அழகு அவள்
நடை அழகு
உடை அழகு

அவளுடன் நீ பழகு
என்றது மனம்

அவள் அப்படி ஒரு அழகு





Saturday, July 18, 2015

கற்பனைக்குள் நான்

கேள்வி : கற்பனைக்கு எட்டாத கற்பனைக்குள்
                   கற்பனையாய் எப்படி சென்றாய்
பதில் : தொடங்கிய இடத்திலேயே நிற்கிறேன் நான்.


Thursday, July 16, 2015

புது உலகை காட்டுகிறேன்

அன்பை கூட அபத்தம் என எண்ணுகிறாய்
இறங்கி வந்தாலும் விட்டுகொடுக்க மறுக்கிறாய்

நல்லுறவாய் பார்த்தாலும் 
வல்லுரவாய் தீண்டுகிறேன் என விலகி செல்கிறாய்

ஏன் இந்த கொடுமைகளுக்குள் நீ புகுந்துகொண்டு
என்னையும் கொடுமை படுத்துகிறாய்

அவைகளை விட்டுவா 
என்னுடன் வா

புது உலகை காட்டுகிறேன்


Wednesday, July 15, 2015

அழுகிறாய் மௌனத்தில்

நி வருவ ,நி வருவன்னு எனக்கு தெரியும் .
அதுனாலதான் பத்தாண்டா பித்துபிடித்து காத்துகிடந்தேன்
                                  (இத்தனை ஆண்டுகளாக)

என் பொறுமையை இனி நி சோதிக்க முடியாது
என் துணிச்சலை இனி நி கட்டுபடுத்த முடியாது

எல்லைகள் கடந்து வந்துவிட்டேன்
உன்னை காண
உன் கண்ணை காண

நிற்கிறேன் உன் அருகில்
பதில் ஏதும் இல்லாமல்
அழுகிறாய் மௌனத்தில்



அன்பாய் படர்கிறேன்

அன்பை என்னை சுற்றி படர செய்கிறேன்
அதை கவனிக்க கூட உங்களுக்கு நேரமில்லை
பின்பு
அதை அள்ளி பருகவும்
நின்று ரசிக்கவும்
உங்களால் எப்படி முடியும்......?

காதல் கொடி

அவளுக்கு  என்னை பிடிக்கவில்லை என்றாலும்
அவளுடைய சோகம் என்னை தாக்குது

இது ஏன் என்று புரியவில்லை,புரிந்துகொள்ள
மனமும் விரும்பவில்லை........

காதல் என்னும் விதையை நான் விதைக்கவில்லை
ஆனாலும்
கொடியாய் வளர்ந்து என்னை சுற்றி கொண்டுவிட்டது.



Monday, July 13, 2015

அச்சாணி இல்லாமல்

நான் தோற்றுபோக வேண்டும் என்று பலர் பலமுனை தாக்குதல் தொடுத்தாலும்
நான் தோற்று போவதில்லை
நானே நானாக தோற்று போக நினைத்தாலும்
நான் தோற்று போவதில்லை
நானே என்னை காத்துகொள்ளுவதுமில்லை காத்துகொள்ளவிடுவதுமில்லை
நானே எனக்கு அச்சாரமாகிறேன் அச்சாணி இல்லாமல்


அன்பிற்காக காத்துகிடக்கிறேன்

நீ அக்கறையுடனும் அன்புடனும் விசாரிப்பதாக எண்ணினேன்
என் எண்ணமெல்லாம் கொட்டி தீர்த்துக்கொண்டேன்

என்னுள் புதைந்த புதிர்கள் அவிழ்ந்தவுடன்
என்னை கைகழுவி விட்டு சென்றால் எப்படி

உள்ளம் ததும்புகிறது வேதனையில்  குமுறுகிறது
ஓ என்று அழுதுவிட தோன்றுகிறது

ஒவ் ஒரு முறையும் அன்பு என்னை ஏமாற்றுகிறது
மீண்டும் அன்பிற்க்கவே  காத்துகிடக்க வைக்கிறது


Sunday, July 5, 2015

பொழியாது

மழையிடமிருந்து எனை பிரிக்கும் குடை நனைகிறது

தூற்றலும் போற்றலும் வார்த்தையாய் காற்றில்லமல் பொழியாது

மோகங்கள் மேகமாய் கூடாமல் காமத்தில்  மின்னல் மின்னாது



சுரங்களாய்

வேங்குழலில் வண்டென நான் வசிக்க
உன்னிதழால் சட்டென நீ இசைக்க
சுரங்களாய் பட்டென பறந்து போனேன்


Thursday, July 2, 2015

எழுப்பிவிட்டுவிட்டாள்

என்னை தூக்கி எறிந்துவிட்டு சென்றாள்
அசதியில் தூங்கிவிட்டேன்
மீண்டும் வந்து என்னை எழுப்பிவிட்டுவிட்டாள்...!