Monday, October 2, 2017

ராயல்டி இல்லா படைப்பு

நான் எல்லாவற்றையம்  இலவசமாக தான் தருகிறேன்
அதனால ராயல்டி கேட்கவேண்டிய அவசியமில்லை
அதேபோல் என் படைப்புகளுக்கு மதிப்பும் மரியாதையுமில்லை
என்கிறபோதும்  இது தொடரும் 


Wednesday, June 28, 2017

அன்புக்கு துறவறம் வேண்டாம்

சில நேரம் ஹாய்யுடன் முடிந்துவிடும்
சில நேரம் கைகுளுக்குதலோடு முடிந்துவிடும்
சில நேரம் கட்டிப்பிடித்தலோடு முடிந்துவிடும்
எல்லாம் சாதாரண அன்பின் பரிமாற்றம் தான்.
அதன் எல்லைகளை அன்பின் அளவுகோளால் நம் மனமே வகுக்கும் .
பிறரின் அன்பும் அதை புரிந்து உணரும்..
ஆனால் இங்கு சிலரின் பார்வை அதை வெறுக்கும்..
அவர்களின் வெறுப்புக்கு இணங்க நம் அன்பை ஏன் துறவறம் அனுப்ப வேண்டும்..

Thursday, June 22, 2017

விடிவெள்ளி

போர்களத்தை கடந்து வந்தேன்
பூக்களத்தை கடந்து வந்தவளை பார்க்க
என் மீதோ ரத்த வாடை
அவள் மீதோ பூக்களின் வாசம்

வாடையும் வாசமும் நெருங்கியபோது
காதல் மழை
இருவரும் காம தீயில் நனைந்து
கர்ப்பூர தீபம் ஆனோம்

அவள் வாசத்தை நான் சுமந்தேன்
அவள் என்னையே சுமந்தாள்
பிறந்தது விடிவெள்ளி

அவள் திகட்டுகிறாள்

 அவளை தவிற 
அந்த கவிஞருக்கு 
வேறு எவளையும் தெரியாது போல !
அவள் முந்தானையை
தொடர்ந்து
கவிதைகளால்
உருவிக்கொண்டே இருக்கிறார்

எங்களுக்கு திகட்டுகிறது
அவள் கவிதைகள்

Friday, May 5, 2017

மௌவுன ராகம்

நான் உறவாக வரவா
உள்நெஞ்சை தரவா
வா வா
அன்பென
தா தா
காதலை (நீ)

மோகம்
போடும் தாளம்
ஜதி சேர்ந்து
பூங்காற்றோடு வீசி
இந்த இளம்நெஞ்சை
இசையால் தொட்டுத் தாக்கும்
மௌவுன ராகமாக
-----------
 (அ)
மோகம்
போடும் தாளம்
பூங்காற்றோடு
ஜதி சேர்ந்து
இந்த இளம்நெஞ்சை
இசையால் தொட்டுத் தாக்கும்
மௌவுன ராகமாக


ஆசை கொண்ட மனம்

உடலில் குறையாக தென்படும் ஊனம்
மனதில் சிறிதளவும் இல்லை என்றாலும்
மனதில் தோன்றும் ஆசைகளுக்கு
ஊனம் பெரும் தடையாகவே அமையும்

இருந்தபோதும் நிறைகொண்ட
மனம் என்ற ஒன்று இந்த உலகில்
இருந்ததேது

முடிவில்லா ஆசைகள் தொடர்ந்துகொண்டே
தானே இருக்கிறது

மனமோ ஊனமாகத் தானே நிற்கிறது
அளவில்லாத ஆசைகள் முன்பு


Tuesday, April 18, 2017

முத்த குவியல்

ஏற்க்கனவே கொட்டிக்கிடக்கும் முத்தங்களை அள்ளவே எனக்கு நேரமில்லை
மேலும் என்னை சுற்றி பல முத்தங்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது
என்ன செய்ய
இந்த முத்தங்களை வைத்துக் கொண்டு  ?


Monday, April 17, 2017

வெப்ப அலை

பலரால் இந்த அனலை தகித்துகொள்ள இயலாமல்
இடத்தை உடனே காலி செய்வதுண்டு
வெகு சிலரே சகித்துக்கொண்டு
இங்கேயே நிரந்தரமாய் இருந்துவிட பழகிக்கொண்டுள்ளனர்.
அவர்கள் அனலா குளிரா என
ஏதும் எனக்கு தெரிவதில்லை
அவர்களின் நிழல்கள் கூட என்மீது விழுவதில்லை
ஆதவனாய் மலர்ந்த பின்னே


Saturday, April 15, 2017

கனவு உரிமை

இந்த கனவினை
எட்டிப்பார்க்கும் உரிமை
அனைவருக்கும் உண்டு
ஆனால்
அதை சொந்தம் பாராட்டும் உரிமை
எனக்கு மட்டுமே உண்டு
நான் கனவுகள்


Friday, April 14, 2017

அன்புன்னா

அன்புன்னா கொடுக்குறது எடுக்குறது,
கொடுத்துட்டு எடுக்குறது,
எடுத்துட்டு கொடுக்குறது
கொடுத்துட்டு எடுக்கமாலும் போகலாம்
எடுத்துட்டு கொடுக்காமலும் போகலாம்
எடுக்கமாலும் கொடுக்காமலும் சுயநலமாகவும் இருக்கலாம்
எடுத்துட்டு கொடுத்துட்டு
கொடுத்துட்டு எடுத்துட்டுன்னு
சந்தோசமாகவும் இருக்கலாம்

ஒரு வெளிப்படையான பரிமாற்றம்
மனதின்
பாசத்தை நேசத்தை வெளிபடுத்த


Thursday, March 30, 2017

கோப்பையில் தொடங்கிய கதை

நிறைந்து தழும்பிய காபி கோப்பையுடன்
திரும்பியபோது எதிர்பாராதவிதமாக
அவள் கோ பைகளுடன் மோதிவிட்டேன்
காபி அவள் மேலாடையில் சிந்தியது
பார்வை படிந்த கறைகள் காயும் முன்
இரு கண்களும் மோதியது
மனதுக்குள் ஒரு மின்னல் வெட்டு


Friday, March 24, 2017

கண்மணி கவிதைகள்

இரவல் வாங்கிய கவிதை புஸ்தகம் ஒன்றை வாசித்துகொண்டிருந்தாள் கண்மணி
அதில் ஒரு கவிதை
கண்மணி என்கிற தலைப்பில்

இரவல் வாங்கிய புஸ்தகத்தில் கண்மணி கவிதைகளை
இரவெல்லாம் வசித்தாள்
இரவோடு இரவல் காலம் முடிந்துவிடும் முன்னே
கண்மணி கவிதை புஸ்தகத்தில் உள்ள
கவிதைகளை வாசித்து முடித்தாள்.

வாசித்தாள்
கண்மணி
கவிதையை
நேசித்தாள்
கண்மணி
கவிதைகளை

தற்போது கனவில் கண்மணி கவிதைகளின் இரவல் காலத்தில்.



அவளிடம் அன்பே

அவளிடம் பிடித்தது பொய் தான்
கண்களில் தெரியும் காதலின் மயக்கம்
காதலை சொல்வதில் உதட்டினில் தயக்கம்
நொடி நொடியாய் நேரம் பெருக
(காதல்) கனவின் காட்சிகள் நீள
பதில் ஏதும் சொல்லாமல்
எனைவிட்டு சென்றாய் அன்பே


Tuesday, March 21, 2017

கவிதைகள் தினம்

கவிதைகள் தினத்தில்
புதியவர்களை அடையாளப்படுத்தாமல்
மூத்த கவிஞர்கள்
இன்னும் மண்டை ஓடுகளுடனே தான்
தங்கள் கவிதைகளை வாசித்து கொண்டு இருக்கிறார்கள்
அந்த மண்டையோடுகளின் பாராட்டே
அவர்களுக்கு போதும் போலும்


Friday, March 17, 2017

நிஜம் தெரியாது

நீ என்னை கேட்டவன் என்றால்
நான் கேட்டவன் தான்
நீ என்னை நல்லவன் என்றால்
நான் நல்லவன் தான்

நீ என்னை பார்க்கும் விதங்களில் தான் நான் இருப்பேன்( இருக்கிறேன்)
அதுவாகவே நான் உனக்கு பிரதிபலிப்பேன்  (பிரதிபலிக்கிறேன்)

ஆனால் என் நிஜம் உனக்கு தெரியாது
சொன்னாலும் புரியாது


காதலிக்க நேரமில்லை

அவள் என்னை காதலிப்பதை உறுதி
செய்யத்தான் விரும்பினேன்
ஆனால் அவளை காதலிக்க எனக்கு நேரமில்லை
இருந்தபோதும் என் காதலில் குறைவில்லை
அது அவளுக்கும் தெரியும்

எங்கள் இருமனங்களின் புரிதலை
இந்த உலகம் ஏற்றுக்கொள்ளவில்லை

ஆகவே அவளை உத்தமியாக்கி
வெளியேற வழி செய்து
வெளியேற்றி விட்டேன்

பிறகு எனக்கொரு நன்றி சொல்லக்கூட
அவளுக்கு நேரமில்லை

எனக்கோ மீண்டும் வேறு யாரையும்
காதலிக்க நேரமில்லை




Tuesday, March 14, 2017

பின்னாலே

அழகுக்கு பின்னால ஆபத்து இருக்கும்
அசிங்கத்துக்கு பின்னால புறக்கணிப்பு இருக்கும்
ஆத்திரத்துக்கு பின்னால வெறுப்பு இருக்கும்
அன்புக்கு பின்னால ஆதரவு இருக்கும்

இப்படி வாழ்க்கையும் அதை சார்ந்த செயல்பாடுகளும்
ஒன்றன்பின் ஒன்றாக பின் தொடர்ந்து கொண்டே இருக்கும்


ஊரும் சாதியும்

ஒரு ஊருக்குள்ளே
வடக்கு தெரு தெற்கு தெரு
மேல் (ஊர்) பாக்கம் கீழ் (ஊர்) பாக்கம்
பெரிய ஊர் சின்ன(சிறிய) ஊர்

கழனி உடையவன் மேல தெரு
காலணி இல்லாதவன் காலனி

(ஊர்) மதிப்பு செறிவுடையவன் சொந்தம் செல்வந்தன்
பொது இடத்தில் சேர்க்கை இல்லாதவன் சேரி

இரட்டை குவளை ஒழியலாம்
ஊரும் பெயரும் அதன் இரட்டை அடையாளமும் ஒழியுமா ?

சவம் கடக்க பாதை மறுப்பு என்கிற அநீதிகளை
இன்றைய சந்ததிகளுக்கு சொன்னால் புரியுமா ?
-----------------


சொல்பவனை பார்த்து
உன்னை நீ அடையாளப்படுத்துகிறாய் என்றால்
வேறு வழி ?

அரசு ஆவணமாக தட்டினோம் திறக்கவில்லை
அதிகார சாவியால் திறந்தோம்
ஈயம் பூசிய களிமண் சாவி தான் உடைந்தது
ஆத்திரத்தில் அனைவருக்கும் சமநிலை என்று எட்டி உதைக்க போகிறோம்
(அருகாலுடன்) கதவு நிலையுடன் பெயர்ந்து உடையப் போகிறது



Tuesday, February 28, 2017

நிழற்ப்படம்

விழி அதன் வழி படரும்
ஒளி
பிளர் இடர் ஒளியில் பிளர்
நெருங்க நெருங்க விலகும் பிளர் சுருங்க
விலக விலக பெருகும் பிளர் பெருக

கவனமாய் உருபெருக்கி
சரியான நோடிதனில் சொடுக்கி
(பொத்தானை அழுத்த)
பளீர் தனில் ஒளிர் மிளிர
காட்சித் திரையில்
ஒளி வடிவம் பெற்றது நிழற்ப்படம்


Friday, February 17, 2017

மடக்கட்சி

கட்சிகள் என்பது ஒழுக்கம் போதிக்கும் மடமல்ல
மடம் என்பது சன்னியாசிகள் மட்டுமே உலாவும் இடமுமல்ல
சமரசம் உலாவும் சம்சாரிகளின் பீடம்
நித்தியானந்த.......ம்
ஆதித்தியானந்த......ம்


Saturday, February 11, 2017

கானல் கரை

ஆழ்கடலில்
படகின் துடுப்பை தொலைத்தேன்
கவலைகொள்ளாமல் சோர்ந்துபோகாமல்
கைகளால் முன் பின் தொடுத்து பார்த்தேன்
முன்னிருந்த கானல் மறைந்தது
கரை வந்து சேர்ந்தது



Saturday, January 28, 2017

மௌன மொழியானாள்

விழியோடு விழி வைத்து
இமைகள் மூடி
இதழோடு இதழ் பதித்துவிட்டாள்

வேட்கம் தாங்காமலே
தள்ளி நின்று கைகளால் கண் மூடி கொண்டாள்

கண்மூடிய கைகளை விலக்கி பார்த்தேன்
முகம் மலர்ந்து நின்றாள்

கேள்வி கேளாமலே புன்னகையில் பதில் தந்தாள்
சொல்லை மொழியாமலே மௌன மொழியானாள்

ஏனோ என்னை மீண்டும்  கட்டியணைத்தாள்
வாய்பேச வாய்ப்பு தாராமலே வாய்யோடு வாய் வைத்து விட்டாள்.

சொக்கிய கண்களை திறந்து பார்த்தப்போது
திரும்பி பாராமலே ஓடி விட்டாள்.


Friday, January 13, 2017

புது பாதை

எதுவுமே வாய்க்கவில்லை என்றால்
கவலை இல்லை
அதுவும் நல்லதுதான்
நமக்கு இனி
எந்த எதுகை மோனையும் தேவையில்லை
நமக்கான தடத்தை நாமே பதித்து                  (பதிப்போம்- எதிர்காலம் )
நாம் போகும் பாதை எல்லாமே
புது பாதை தான் .


Wednesday, January 11, 2017

கவிதை கலை

கண்டேன் கலையை
கவிதையின் வடிவில்
கண்ட கவிதை என்னவெனில்
வார்த்தைகள் வரிசை வடிவில்
ஓவியமாய் அழகாய்
மனபாட்டை இசைக்கிறது
மனதினுள் ஊடுருவி
மாற்றங்களை நிகழ்த்துகிறது
மாயையாய்
காலத்தை கடக்கிறது
ஜீவன் கொண்டு
கவிதையாய் வாழ்கிறது


காரிய சொற்கள்

சொப்பனத்தில் தோன்றும் மாயாஜாலம்
விழிப்பில் விழிகளுக்கு புலப்படுவதில்லை
அகலும் ஆகாயங்களுக்கு நிரந்திர வடிவமில்லை
அனுசரணை கொள்ளும் அன்புக்கு
ஆழ்கடலும் ஆழமில்லை


Sunday, January 8, 2017

புரியாத உணர்வுகள்

 என் உணர்வுகள் அவளுக்கு புரிகிறது
இருந்தாலும் அதை அவள் உள்வாங்கிக்கொள்வதில்லை
அவளை அது நெருங்கும்போதே
மேலோட்டமாக அதை புறம் தள்ளி விடுவாள்
அதுவே அவளுக்கு நல்லது என கருதுகிறாள்

அவள் உள்வாங்காத உணர்வுகளை
மீண்டும் நானே கவலையாக சுமக்க நெருடுகிறது
புறம்தள்ளப்பட்ட அந்த உணர்வுகள்
என் உள்ளே இருந்து என்னை கொல்லுகிறது
என்பதனை எப்பொழுது அவள்
உள்வாங்கிக்கொள்வாள்


நிழல் படைப்பாளி

என் புருவங்களை கூட தரித்துக்கொண்டாள்
என் அசைவுகள் அனைத்தையும் பிரதி எடுத்துகொண்டாள்
இப்பொழுது என்னைப்போலவே சில நிஜ சித்திரங்களை வரைகிறாள்
அதற்க்கு உயிர் தந்து என் பெயர் சூட்டி அதனுடனே வாழ்ந்து வருகிறாள்
இருந்தாலும் என்னை அவள் படைப்புகள் சமன் செய்வதில்லை
அதை அவள் உணர்ந்தும் இருக்கிறாள்


என்னை சுற்றும் பறவை

நான் எப்போதோ அந்த பறவையை
என் கூட்டிலிருந்து சுதந்திரமாக வெளியேற்றி விட்டேன்
அனால் அது இன்னும்
என்னை சுற்றியே வருகிறது
என் கட்டளைகளுக்கெல்லாம் கீழ்படிகிறது
இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை
அதற்க்கு உண்மையான அன்பு காட்ட
இந்த உலகில் என்னை தவிர
வேறு யாருமில்லை


Friday, January 6, 2017

வாழ்கிறேன் பார்

கடந்து வந்த வாழ்க்கையில் திரும்ப பின்னுக்கு சென்று
தவறுகளை எல்லாம் திருத்த முடியாத நிலையில்
உன்முன் மன்னிப்பு பிச்சை கேட்டு நிற்கிறேன்
பாராய் முகமாய் என்னைவிட்டு
விலகி சென்றது ஏனோ.

இனி எனக்கு கைகொடுப்பார் யாரோ
தனியே தவியாய் தவித்தேன்

ஆண்டுகள் கடந்தும்
உன்னிடம் எனக்கு
கரிசனம் கிடைக்காததால்
நான் தொற்றுபோகவில்லை
மாறாக தட்டி தவழ்ந்து
பிழைத்து விட்டேன்

இனி வாழ்வேன்
சிறப்பாக மகிழ்வாக
வாழ்ந்து காட்டுவேன்

நீ பார்த்து வியக்கும்படி



Sunday, January 1, 2017

தொடர்பில் இரு

விழி மீது நின்று கொண்டு
என் வழி மறைக்கிறாய்

சற்று ஒதுங்கினால்
நான் காணாத பாதைகள் புலப்படும்

ஆனாலும் ஒருபோதும் என்னைவிட்டு
அகலாதே அன்பே
நான் உதிர்ந்தாலும்
என் காதல் உன்னைவிட்டு
தள்ளிபோவதில்லை உயிரே.

முடிந்தவரை என்னுடன்
தொடர்பில் இரு இறுதிவரை