Friday, March 27, 2015

ஏதோ ஏதோ ஆகுதே

(A Song into my Heart with Music)
 ஏதோ ஏதோ ஆகுதே
காதல்
என்னுள் எதோ செய்யுதே

நான்......... மழை பொழிந்திடும் மேகம்
நீ ................வெண்மலர் கொடி தேகம்
நாம்........... மன்மத லோக காமம்

நான்............காசி நாட்டு ஆகோரி
நீ...................உள்ளூர் பொய்காரி
நாம்.............சர்வதேச காதல் வியாபாரி

ஏதோ ஏதோ ஆகுதே
காதல்
என்னுள் எதோ செய்யுதே

மனசு தத்தி தாவுதே
இதயம் இங்கே நோகுதே

நானும் உன் பின்னே என்னை தேடி அலைகிறேன்
நீ ஒரு சுகம் தரும் பார்வையால் தந்தி அனுப்பினால் என்ன

என் அனுமானம் சரி என்று நம்புகிறேன்
உன் பெண்மனம் இல்லை என்று கரையூதே.

காகித காதல் மனுக்கள் அனுப்பவா
நீ போகுமிடமெல்லாம் உன்முன்னே வந்து தொலையவா
உனாக்காக கால்கடுக்க காலமெல்லாம் நிற்க்கவா
இது நமக்கு தேவையா ? இல்லை
எனக்கு வேறு வேலைகள் தான் இல்லையா ...?

அப்புறம்

ஏதோ ஏதோ ஆகுதே
காதல்
என்னுள் எதோ செய்யுதே

நான்..........முடி சூடா மன்னன்
நீ.................முத்திய பிள்ளை நங்கை
நாம்.......... ரிஷிகள் எழுதா வேதம்

நான் ........நெருப்பின் சுவடு
நீ................என்னுள் பதிக்கப்பட்ட மந்திர தகடு
நாம்..........அனல் மூட்ட உதவும் பயனில்லா பதரு

ஏதோ ஏதோ ஆகுதே
மனசு தத்தி தாவுதே

அப்புறம்

இ--------இஷ்டமில்லை  (உனக்கு)
கா-------கஷ்டமில்லை   (எனக்கு)
நா-------நஷ்டமில்லை    (நமக்கு)
                           { இஷ்டம் இல்லை என்றால் சொல்லிவிடு
                              (செலவு வைத்து கஷ்டம் தராதே)
                           நஷ்டம் என்பது நமக்கில்லை என்று சொல்லு }

ஏதோ ஏதோ ஆகுதே
இதயம் இங்கே நோகுதே
காதல்
எதோ செய்யுதே
காமம்
செய்ய சொல்லுதே

அப்புறம்

ஏதோ ஏதோ ஆகுதே
(என்னுள்-இல்லை- இல்லை- )
நம்முள்
ஏ...தே ...தோ ஆகுதே
மனசு தத்தி தாவுதே