Tuesday, December 30, 2014

இலவு இழவு

அவள் ஒரு இலவு காத்த கிளி
என்னை
இழவு எடுத்த கிளி



Translation
Ceiba petantra =  இலவ மரம்
Parrot = கிளி
Death = இழவு

Friday, December 26, 2014

உள்ளே அவள் ஒளி

உள்ளுக்குள்ளே இருக்கிறாள்
உடனே பயணிக்கிறாள்
பனி போர்வைக்குள்
பின்னி பினைகிறாள்

தழைக்கிறாள் வளர்கிறாள்
மலர்கிறாள்

வேர்கள் தொடுத்து
கிளைகள் படர்ந்து
என்னை தன்
பசுமைக்குள்
ஆட்கொள்ளுகிறாள்


Sunday, December 21, 2014

எங்கோ போகிறேன்

வீடு தாண்டி போகிறேன்
வீதி உலா போகிறேன்
எங்கோ போகிறேன்

Friday, December 19, 2014

நேசிக்கும் உயிர்கள்

என் அறையில்
உள்ள நுண்ணிய உயிர்கள்
கூட என்னை நேசிக்கும்
என் காதலியை தவிற

Thursday, December 18, 2014

வர்ணம்



தரம் கேட்டவன்
தகுதி யற்றவன்
தன்னிலை பாராதவன்
தற்போக்கன்
தாழ்த்தபட்டவன்

பசியற்றவன்
பஞ்சம்மில்லாதவன்
பஞ்சாங்கம் பார்ப்பவன்
பரலோகம் செல்பவன்
பார்ப்பனன்

இயல்பினால் வர்ணம் உண்டாகும்
பிறப்பினால் வர்ணம் பிரிவாகும்

பூஉலகில் வாழ்க்கை ஒன்றாகும்
ஒற்றுமை நன் நெஞ்சில் நின்றாடும்
வேற்றுமை உம் மரணம் கொண்டாடும்

புரிந்தால் மனிதம் காத்துவிடு
ஜாதியை துறந்துவிடு
சந்ததியை மனிதனாய் வளர்த்துவிடு



Krishna Kumar G

Tuesday, December 16, 2014

எழுத்தில் இளமை

எழுத்தில் கூட ஒருவகை இளமை தேவைபடுகிறது..........
கவர்ந்திழுக்க ..........!  


Monday, December 15, 2014

ஐ யாலே


(Art by Myself)

ஒரு பெண்ணாலே வீனானேன்
அவள் கண்ணாலே நோவானேன்

சிறு பொய்யாலே
(அவள்)
சிற்பம் செய்தேன்

என் கையாலே
(அவள்)
நுட்பம் கொய்தேன்

வண்ணம் ஏழு தீட்டிகொண்டேன்
வலை பின்னலுக்குள் மாட்டிக்கொண்டேன்

இவன் தன்னாலே தன்னில் தானா
தன்னிலை தின் தின் தானா
திம் துதில் நெஞ்சில் தானா

ஐ யாலே அவளும் நானா
ஒளிக்குள் ஒலி
வடிவம் தானா
நம்மில் அது படரும்தானா
எமக்குள் திம் திம் தானா
சொல்லலே சொல்லாமல் சொன்னாலே
அது காதல் தானா ......?

Tuesday, December 9, 2014

மைய புள்ளி



நான் ஒரு மைய புள்ளி
என்னை சுட்ரும் கிரகங்கள்
என் விசை கடப்பதில்லை (கடப்பதுமில்லை)
என் அருகில் வருவதுமில்லை

நான்
நெகிழ்வதுமில்லை
நோடிவதுமில்லை
மறைவதுமில்லை

ஒளிர்கிறேன்
இருளை அகற்ற
வளர்கிறேன்
இன்னுலகம் போற்ற

Wednesday, December 3, 2014

கேள்விகள்தானோ ?



மகரந்தம் மணக்கிறது மலர்தானோ ?
துளிகள் விழுகிறது மழைதானோ ?
மரபணு மாறுகிறது காமம்தானோ ?
==================================

வாழ்வியல் தத்துவம் காதல்தானோ ?
கேள்விக்கு விடை பதில்தானோ ?
இல்லையென்பது இங்கு ஏனோ ?

கொஞ்சம் என்னை கவுணி



கொஞ்சம் எட்டி எட்டி பாக்குறேன்
தப்பு தப்பா பேசுறேன்

to be continued..........

Tuesday, November 18, 2014

பிச்சைகார மனம்

அவள் போடும் பிச்சைக்காக காத்திருக்கிறது
இந்த மனம்

(அவள்கள் போடும் பிச்சைக்காகவும் காத்திருக்கிறது
இந்த மனம்) (மானம் கேட்ட மனம்)

 அவள் போடும் பிச்சைக்காக ஏன் காத்திருக்கிறது
இந்த மனம்

பிச்சைகார மனம் காத்திருக்கிறது
அவளுக்காக.......!

(இச்சை மனம் பிட்சைக்காக காத்திருக்கிறது)

Monday, November 17, 2014

நிகழும் நிகழ்வுகள்



அருகில் நீ தோன்றும் தருணத்தில்
என்னுள் நிகழும் நிகழ்வுகள்

உன் பார்வையில் உடல் விசை இழக்கிறேன்
என் நாடித்துடிப்பில் பிடில் இசை இசைக்கிறேன்

பேசும்பொழுது ராகமாய் வாய் குளறுகிறேன்.
கண்களை நேர்நோக்காமல் தாளம் தப்புகிறேன் (தட்டுகிறேன்)

உன் முக பாவங்களில் நாவு வறண்டு போகிறேன்
என் செவிகளுக்குள் வண்டு மொழி கேட்கிறேன்

துரு துருவென துள்ளும் என் இதய துடிப்பில் துருவங்கள் தொடுகிறேன்
 உன்னழகில் வியக்கிறேன் என்னையே மறக்கிறேன்

          (கைகளால் கட்டி அரவணைக்க விரும்புகிறேன்
            இந்த உணர்வுகளை அணு அணுவாய் ரசிக்கிறேன்.)

என்னாருகில் நி நிரந்திரமாய் இருந்துவிட கூடாதா ?
இந்த நிகழ்வுகள் இப்படியே தொடராதா ?

Saturday, November 15, 2014

கோவமா

என்மேல என்ன அம்ம்புட்டு கோவமா
உன் கண்ணால கொஞ்சம் கருணைகட்டம்மா

தனன ந ந தன தனன ந நா

Friday, November 14, 2014

கவியழகி

கண்ணுக்கு கலைகள் இருக்கு
இதழுக்கு மலர்கள் இருக்கு
கழுத்துக்கு சங்குகள் இருக்கு
மார்புக்கு கனிகள் இருக்கு
இடைக்கு கொடிகள் இருக்கு
கால்களுக்கு வாழை தண்டுகள் இருக்கு

நினைத்து பார்க்க கனவுகள் இருக்கு
கற்பனையால் வடித்து பார்க்க கவிதைகள் இருக்கு

மொத்தத்தில் பெண் என்றால் அழகு இருக்கு


Thursday, November 6, 2014

கனவுகளில் வரும் தேவதை

என்னை கொள்ளும் தேவதை கனவுகளில் நீர்-வானமாகிறாள்.


முத்த அலை

நெருங்கி வரவில்லை முத்தம் மட்டும் கிடைத்தது
...........அலைகற்றையில்...... !


Friday, October 31, 2014

இன்றொரு பொழுது



இன்றொரு பொழுது ஓடிவிடாத
இன்றும் அதே எதிர்பார்ப்புடன்.
நிறை இல்லா வயிறுடன்
காலம் கடத்துகிறேன்
எதையோ எதிர்பார்க்கிறேன் .

எதிர்பார்ப்புகள்தான் வாழ்க்கையா ?

காதல் சொல்லவா

கால்கள் இடற
கைகள் பதற
காதலை சொன்னேன்

வல்லேன சிரித்துவிட்டாள்
வில்லம்பு புருவத்தில் எனை
சறுக்கி விழவைத்தாள்

கடந்து சென்றாள்
காலம்கடக்க
காத்திருந்தேன்
கவிதைகளாக.


Wednesday, October 29, 2014

சிறுபுள்ளி



பெரும்புள்ளிகள் மத்தியில்
சிறுபுள்ளி நான்
சீறும் புள்ளியும் நான்

Monday, October 27, 2014

நான் உன்னை காதலிக்கிறேன்

 

மீண்டும் குறுஞ்சி பூ பூத்துவிட்டது
நான் உன்னை காதலிக்கிறேன் என்பதற்குள்

Sunday, October 26, 2014

புது உணர்வு

தோள்களில் சிறகு முளைத்து
கனவுகள் பறக்கட்டுமே

விண்வெளி போய்சேர்ந்து
ஒளி ஆண்டுகள் கடகட்டுமே

எல்லை என்பதே இல்லை
தொலைவு என்பதே தூரம்மில்லை        (தொலைவோ தூரமில்லை)

to be continued

Tuesday, October 21, 2014

அப்போ இப்போ எப்போ

அப்போ இப்போ எப்போ
அப்போ இப்போ எப்போ
அப்போ இப்போ எப்போ (Rap)

to be continued.........

Saturday, October 18, 2014

நீ நிறையாகிறாய்



மேகம் நீ
மழையால் என்னை நனைக்கிறாய்

பூக்கள் நீ
தேனால் என் தாகம் தீர்க்கிறாய்

காதல் நீ
காமத்தால் என்னை ஆள்கிறாய்

மரணம் நீ
துயரத்தால் என்னை தவிக்க விட்டாய்

கடவுள் நீ
கருணையால் எனக்கு மோட்சம் தந்தாய்

நான் நீ
என்னுள் என்னை நிறைசெயகிறாய்

Wednesday, October 15, 2014

புதிய பாதையில்



நெடுங்காலம் காத்திருந்தோம்
சிறிய பயணம் முடிவுக்கு வந்தது

தொடக்க நிலையில் மீண்டும் நாம்
தொடருவோம் நம் பயணத்தை
புதிய பாதையில் ......!



Wednesday, October 1, 2014

வாடிய பூக்கள்








வாடிய பூக்களை
வண்டுகள் மொய்ப்பதில்லை

 மகரந்தசேர்க்கை இல்லாமல்
கணிகள் காய்ப்பதில்லை

பிள்ளை இன்றி பெண்
(பெண்மைப்) முழுமைப்பெருவதில்லை

Wednesday, September 10, 2014

காதல் மிட்சம்

 காதல் தொடங்கிய இடம் தெரியாது
அது போகும் பாதை புரியாது

 மாட்டிகொண்டால் தப்பிக்க வழி ஏது ?
மாட்டாமலும் இருக்க முடியாது

 ஒருதலை இருதலை யாகும் காதலில்
இருதலை ஒருதலை யாகும்  சாதலில்

 காதல் தொடரும் அதன் நினைவுகள் தொடரும்
 கடைசி முச்சு உள்ளவரை

ஏக்கம் கொடும்
சுகம் தேடும்
பிரிவே நிறைந்து ததும்பும்
இறுதியில் கண்ணீரே  மிட்சம் மாகும்
காதலில்


Wednesday, September 3, 2014

முதல் முறை பார்த்தபொழுது


முதல் முறை
உன் முகம் பார்த்தபொழுது

எங்கோ பார்த்த ஞபகம்
பல நாட்கள் பழகிய ஞபகம்


ஏன் என்று தெரியவில்லை
உனை இனி பிரிய மனமில்லை

Continues ...........

Friday, August 15, 2014

இளைப்பாறி மரம்



நான் மரம்  (நான் வெட்டுண்ட மரம்)
கிளைகள் இல்லை
இலைகள் இல்லை
கணிகள் இல்லை
அனால்
அவ்வபோது
யாராவது
என் மடியில்
இளைப்பாறி கொள்கிறார்கள்

Monday, August 4, 2014

மெய்யாகிய நான் பொய்யாகிறேன்



என் வீட்டு
வாசலை திறந்து வைத்திருக்கிறேன்
யாரும் வருவதில்லை
உங்கள் நினைவுகளை தவிர

உறவுகளிடம் அன்பை எதிர்பார்க்கிறேன்
வெறுப்பை பரிசாக பெறுகிறேன்

நான்
வாழ்கிறேனா
இல்லை
சாகிறேனா
என்றொரு சந்தேகம்
மரியாதையை இழக்கும் பொழுதுதெல்லாம்  ( நொடிகள் )

பணம் பதவி 
உறவுகளை
காலடியில்
கட்டிபோடும்

இழந்தால்
இழிவுபடுத்தும்

என்னை வெறுப்பால் துரத்தும்முன்
உங்களை துறக்கிறேன்
உறவை அறுக்கிறேன்

மெய்யாகிய நான்
பொய்யாகிறேன்

Wednesday, July 30, 2014

கவிதை தொகுப்பு

அவளுக்கு என்னை பிடித்திருந்தால்
குடும்பமலராக மாறி இருப்பேன்

பிடிக்காத காரணத்தால்
கவிதை தொகுப்பாக மாறியுள்ளேன்.

கடல் காதலர்கள்




கரை காவியங்கள்
கடல் காவியங்கலாகாது
 இதனுடன் ஒத்தும்போகாது

ஆகாயம் மேகம்
மட்டும் பொதுவாகும்
நீலம் நீராகும்

காற்று திசை காட்டும்
துடுப்பு படகோட்டும்

சூழ்நிலை மாறும்
சுழல் ஆளும்
பெரும்காற்று வீசும்
பேரிடர் செய்யும்
ஆழிபேரலை
ஆணவம் கொள்ளும்
அனைத்தையும் கொல்லும்


to be continued.........

Sunday, July 27, 2014

ஒருதலை காமம்



.
.
.
.
.
.
.
ஒரே நேர் கோட்டில் முடிகிறது
பக்க கோடில்லாமல்.
ஒருதலை காமம்.

                                                           நான் கனவுகள்

Friday, July 18, 2014

சொல் நில்

சொல் என்றால்
சொல்லாமல் போகிறாள்
நில் என்றால்
நில்லாமல் போகிறாள்


நீருக்கு நெருப்பாகிறாள்  
(நெருப்புக்கு நீராகிறாள்)
தென்றலுக்கு புயலாகிறாள் 
(புயலுக்கு தென்றலாகிறாள்)

மழைக்கு இடியாகிறாள் 
மலைக்கு மகுடமாகிறாள்

ஏட்டுக்கு எழுத்தாகிறாள்
என்
எண்ணமெல்லாம் அவளாகிறாள்


Wednesday, July 16, 2014

நில்லென்று சொல்லும்போதே

நில்லென்று சொல்லும்போதே
மழை சாரல் மோதுதே
விலகியபோதிலும் விரல் தொடும் ஞாபகம்

ஒருமுறை தரிசனம்
மறுமுறை கரிசனம்

நெஞ்சோடு சேர்த்த ஆசை வீணாக போகுதே.

கண்ணே உன் பார்வை போதும்
கன்மலையை தாங்குவேன் .

காலடி தேடினேன்
 காலத்தை இழக்கிறேன்

பூவே உன் நேசம் போதும்
நான் இங்கு வாழவே

நாட்களே நலிந்திடு
நாழிகையில் உறைந்திடு

நெஞ்சோடு சேர்த்த ஆசை வீணாக போகுதே.
ஒருமுறை தரிசனம்
மறுமுறை கரிசனம்

நில்லென்று சொல்லும்போதே
மழை சாரல் மோதுதே
விலகியபோதிலும் விரல் தொடும் ஞாபகம்

கண்ணே உன் கருணை போதும்
கல்லறையை தேடினேன்.





Monday, June 9, 2014

பேசாத மலர்

வேண்டுகிறேன் தெய்வத்திடம்
உரிய பதில் கிடைக்கிறது

உரியவளிடம் கேட்கிறேன்
உதாசீனம் செய்கிறாள்

உரிமை பகிறாமல்
உறவு மட்டும் கொள்கிறாள் ..

உள்ளத்தை ஊதி விட்டு
உளறல்களில் உறங்க வைக்கிறாள்


-----------------------------------------------------------
--------------------------------------------------------
(Extras)

காக்க வைக்கிறாள்
காலத்தில் கரைய வைக்கிறாள்

கண்களால் கவிமொழிகிறாள்
கரம் என்னை கவ்விக்கொள்ள .

காதல் தள்ளி போகட்டும்
காமம் கரையேரட்டும்

----------------------------------------------------

வாடுகிறது நெஞ்சம்
பதில்லில்லா பூவை பார்த்து...!



Friday, May 30, 2014

அவள் ஒரு போர்களம்

அவள் ஒரு போர்களம்
அதின் நடுவே சிக்கிகொண்ட சிறு பிள்ளை நான் .

Saturday, April 26, 2014

பனித்துளி



உயிரே உயிரே போகாதே
உள்ளம் இங்கு தாங்காதே
.
.
.
.
.

பூஞ்ச்சிறகை விரிக்கிறேன்
வானம் எட்டி பிடிக்கிறேன்


Tuesday, April 22, 2014

பட்டாம்புச்சி



கண்ணே உன்னை காணும்முன்
காதல் வேண்டாமேன்றிருந்தேன்

விழியும் விழியும்
விளம்பிய பின்பு
வழி மறந்துபோனேன்
என்னை மறந்து போனேன்
தன்னிலை யற்று போனேன்
தறுதலையாய்  போனேன்
பாதை தொலைத்து
பாதசாரியாய் (பரதேசியாய்) போனேன்


வழியில் ஒரு இலையில்லா
மரம் கண்டேன்
அதன் காலடியில்
இளைப்பாரிக்கொண்டேன்

இளமை என்னும் இளைஞன்
என்னை விட்டு போகக்கண்டேன்

வறுமை கண்டேன்
 வனாந்திரம் கண்டேன்

வாடிய மலரை கண்டேன்
 வண்ணமிழக்க கண்டேன்
   வயதை கொண்டேன்

மரிக்கிறேன்
பறக்கிறேன்
பட்டாம்புச்சியாக



Sunday, April 20, 2014

உண்மை பொய்யாய்

கனவுகள் பிழையாய்
கற்பனைகள் நிஜமாய்
உண்மை பொய்யாய்
மாறிவிட




Sunday, April 13, 2014

நெருப்பு குதிரை




கடிவாளம் எனக்கில்லை
கடின மனமும் எனக்கில்லை

கைகள் ஏந்தவும் மாட்டேன்
கால்களை வாரவும் மாட்டேன்

ஓய்வில்லாமல் ஓடுகிறேன்
ஒளிவிளக்காய் எரிகிறேன்

சிரம் தாழ்த்துகிறேன்
சிகரம் தொடுகிறேன்

நான் நீந்த தெரிந்த
நெருப்பு குதிரை

Tuesday, April 8, 2014

சட்டென மாறிய வானிலை

சட்டென மாறிய வானிலை
கோடையில் பட்டென   (பட்டென கோடையில்)
மழையால் என்னை தொட்டு சென்றது

பாதியில் விட்டு பரிதவிக்க விட்டு சென்றது

Sunday, February 23, 2014

சுழற் சூழ்ச்சி

அவள் விழிகளில் ஒரு துளி கண்ணீராய் சிந்துவேன்
அவள் நினைவுகளில் என் நிழல் கடக்கும் பொழுது .

உன்னை தொலைத்ததுவிட்டேன்,
நான் களவாகிவிட்டேன்
என்று எண்ணுவாள்
என்னை அவள் காணும் பொழுது .

அகவே என்னை மறைத்து கொள்கிறேன்
அவள் மறந்து போக .......

இல்லையேல் மரித்து கொள்கிறேன்
நிரந்தரமாக மறைந்து போக

அவள் வாழட்டும் நிம்மதியாக



வீதி ஊலா


மலைகளை தாண்டி ஒரு நதி
அதில் ஒரு ஓடம்

.......to be continued

Sunday, February 2, 2014

உறங்கிடும் விண்மீன்

உறங்கிடும் விண்மீன் தெறித்து வெடிக்குது
உறுமி சப்த்தம் ஊரை எழுப்புது

நாளை விடியல் பிறக்கும்
நாட்டினில் நன்மைகள் நடக்கும்

to be continued..............



Tuesday, January 14, 2014

வெண்மேகதுக்கு என் தாலாட்டு

வெண்மேகமே ஏன் துங்க மறுக்கிறாய்
உன் அழகிலே என் உயிரை பறிக்கிறாய்

இதழ்களோ சிரிப்பிலே
இமைகளோ விழிப்பிலே

வா வா, என் அன்பே.. வா

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

உன்னை என் கண்போல் 
காப்பேன் வா .....                          (2)
வா வா, என் அன்பே.. வா
.............................Continued




பொய் மெய்

பொய் மெய்யாகாது
மெய் பொய்யாகாது


Sunday, January 5, 2014

தூதுவிடுகிறான்



துரத்தி துரத்தி வருகிறான்
தூரம் நின்று தூதுவிடுகிறான் .

தூக்கத்தில் வருகிறான்
தூங்க விடாமல் துன்புறுத்துகிறான்.



       to be continued............