Thursday, August 13, 2015

இவன் பொய் அவன் நிஜம்

கனவு ஒன்று இவன் காண்கிறான்
அதில் அவனுக்கு  புகழ் நிரப்பிக்கொள்கிறான்

தன்னையே நேர் நிறுத்தி
முன்னிறுத்தி கொள்கிறான்

அவன் எதையும் செய்கிறான்
இவன் எதிர்பாராதையும் அவன் செய்கிறான்

கண்விழிக்கும் பொழுது
நிஜம் அவன்   பொய் இவன்
என்று குழப்பிகொள்கிறான்

புரியாதவனாய் அறியதவனாய்
சித்தமிழந்து பித்தம்கொள்கிறான்

இவன் நித்தம் மதுவில் முழ்கி
முழுவதும் மெய்மறந்துவிடுகிறான்

இவன் மறைகிறான் புகழ் அற்று    (நிஜம்)
அவன் வாழ்கிறான் நிழல் அற்று   (கனவு)