மேகத்தை பிரிந்து பொழியும் மழை நான்
காற்றில் சாரல்லாகிறேன்
அணைதாண்டி வெள்ளமாகிறேன்
ஆற்றோடு உறவாகிறேன்
கடலோடு கலவையாகிறேன்
கரைகளில் ஈரமாகிறேன்
அனல்தனில் காய்ந்து போகிறேன்
நீராவியாகி மீண்டும் மழையாகிறேன்
செல்லும் இடம் அறியேன்
நான் போகும் சாலை முடிவதில்லை