நான்
விளைநிலம் உழுதிட
கடன் பெற்றேன்
விதைகள் வாங்கிட
விதை விளைந்தது
வேர்வை துளிகளில்
வானம் பார்த்தேன்
கைகள் விரித்திட
மழை வேண்டி
படையல் இட்டேன்
பூமி நனைந்திட
நாள்தோறும் கண்ணீருக்கு
மடகு கட்டினேன்
கண்கள் குளிர்ந்திட
கண்மணியென கண்காணித்தேன்
பயிர்கள் விளைந்திட
ஆட்கள் கிடைக்கவில்லை
அறுவடை செய்திட
விலை போகவில்லை
அரசு கொள்முதல் செய்திட
நிலத்தை விற்றேன்
வாங்கிய கடனை அடைத்திட
எனக்கு தெரியாது
வேறு தொழில் செய்திட
வழி தேடுகிறேன்
வலி மறந்திட