Wednesday, August 26, 2015

காதலை உணரவில்லை

அவள் பேசாத பொது
என்னுடன் பேசியதை எண்ணுகிறேன்

அவள் முகம் பாராத பொது
பார்வையற்று அலைகிறேன்

அவள் என்னை வெறுக்கும் பொது
வெறுமையை உணர்கிறேன்

அவள் இல்லாத பொது
தனிமையில் தவிக்கிறேன்

பேசுகிறாள் பேசாததைபோல்
பார்க்கிறாள் பார்க்காததைபோல்
வெறுக்கிறாள் வெறுக்காததைபோல்
இருக்கிறாள் இல்லாததைபோல்


என்னை தேட செய்கிறாள்
தேடிப்போக வாட செய்கிறாள்
அவளிடம் நான்  உணர்ந்த காதலை
அவள் என்னிடம்  இன்னும் ஏன் உணரவில்லை ?