Sunday, August 9, 2015

ஒவ்வொரு முறையும்

ஒவ்வொரு முறையும் ஆசை காட்டி
என்னை வரவழைத்து
என் முதுகில் குத்துகிறாய்

அதை அறிந்தும் நான் என்னையே
உன்னிடம் ஒவ்வொரு முறையும்
ஒப்புவிக்கிறேன்

இன்னும் என் அன்பை
நீ புரிந்து கொள்வதாய் இல்லை

ஒவ்வொரு முறையும்
நான் என் நெஞ்சையல்லவா
உன்னிடம் காட்டிகொண்டிருக்கிறேன்
அதை பாராமல்
நீ ஏன் என் முதுகில் குத்திகொண்டிருக்கிறாய் ?