Monday, August 31, 2015

காதல் களோபரம்

என்னிடம் அவளிடம் சொல்லபடாத
செய்திகளும்
அவளிடம் என்னிடம் சொல்லபடாத
செய்திகளும்
ஏராளம்
சொல்லிவிட எங்கள்
மனதில் இல்லை
தாராளம்
இருந்தபோதும்   எங்களுக்கு
இடையே
காதல் என்னும்
களோபரம்

Saturday, August 29, 2015

மனித ஜாதி

அண்டம் என்ன ஜாதி
அதிலுள்ள சூரிய குடும்பம்  என்ன ஜாதி
அதிலுள்ள பூமி என்ன ஜாதி
அதிலுள்ள  நிலமும் மலையும் கடலும் வானமும் என்ன ஜாதி
அதிலுள்ள விலங்கும் பறவையும் மீனும் என்ன ஜாதி
அவைகளை எல்லாம் கேளாமல் என்னை கேட்கிறாய் என்ன ஜாதி ?
நான் ஒரு மனித ஜாதி
அதுவே பொது நீதி

Wednesday, August 26, 2015

காதலை உணரவில்லை

அவள் பேசாத பொது
என்னுடன் பேசியதை எண்ணுகிறேன்

அவள் முகம் பாராத பொது
பார்வையற்று அலைகிறேன்

அவள் என்னை வெறுக்கும் பொது
வெறுமையை உணர்கிறேன்

அவள் இல்லாத பொது
தனிமையில் தவிக்கிறேன்

பேசுகிறாள் பேசாததைபோல்
பார்க்கிறாள் பார்க்காததைபோல்
வெறுக்கிறாள் வெறுக்காததைபோல்
இருக்கிறாள் இல்லாததைபோல்


என்னை தேட செய்கிறாள்
தேடிப்போக வாட செய்கிறாள்
அவளிடம் நான்  உணர்ந்த காதலை
அவள் என்னிடம்  இன்னும் ஏன் உணரவில்லை ?



Monday, August 24, 2015

வலி உழுதிட

நான்
விளைநிலம் உழுதிட 
கடன் பெற்றேன்
விதைகள் வாங்கிட 

விதை விளைந்தது 
வேர்வை துளிகளில்

வானம் பார்த்தேன்
கைகள் விரித்திட

மழை வேண்டி 
படையல் இட்டேன் 
பூமி நனைந்திட 

நாள்தோறும் கண்ணீருக்கு
மடகு கட்டினேன்
கண்கள் குளிர்ந்திட

கண்மணியென கண்காணித்தேன்
பயிர்கள் விளைந்திட

ஆட்கள் கிடைக்கவில்லை 
அறுவடை செய்திட

விலை போகவில்லை
அரசு கொள்முதல் செய்திட

நிலத்தை விற்றேன்
வாங்கிய கடனை அடைத்திட 

எனக்கு தெரியாது 
வேறு தொழில் செய்திட

வழி தேடுகிறேன்
வலி மறந்திட



Saturday, August 22, 2015

அவளுக்கு பிடிக்காது

அவளுக்கு என் நிறம் பிடிக்காது
அவளுக்கு என் முகம் பிடிக்காது
அவளுக்கு என் குணம் பிடிக்காது
அவளுக்கு என் மொழி பிடிக்காது
ஆனால்
அவளுக்கு என்னை மட்டும் பிடித்திருக்கிறது
என்ற சிந்தனை மட்டும் என்னை பிடித்திருக்கிறது


Wednesday, August 19, 2015

அவளகம்

அவள் என்னை அவளகம் வைத்து               [அவள்+அகம்(உட்புறம்)]
உடலோடு தைத்து கொள்கிறாள்

என் நாடி துடிப்போடு துடித்து
என் இதய துடிப்போடு கலந்துவிடுகிறாள்

நான் ஒருபோதும் அவளிடமிருந்து பிரிந்ததில்லை
என் சொல்லிலும்  செயலிலும்  சிந்தையிலும்
அவளை தவிர வேறொன்றுமில்லை



Thursday, August 13, 2015

கண்டவன்

கண்டவனை கண்டதும்
சூழ்நிலை மறந்து
அவன் சூழ்ச்சியில் விழுகிறேன்

என்னை ஒப்புவிக்கிறேன்
அடிமையென
அவனிடம் ஒத்துபோகிறேன்
துணையென


இவன் பொய் அவன் நிஜம்

கனவு ஒன்று இவன் காண்கிறான்
அதில் அவனுக்கு  புகழ் நிரப்பிக்கொள்கிறான்

தன்னையே நேர் நிறுத்தி
முன்னிறுத்தி கொள்கிறான்

அவன் எதையும் செய்கிறான்
இவன் எதிர்பாராதையும் அவன் செய்கிறான்

கண்விழிக்கும் பொழுது
நிஜம் அவன்   பொய் இவன்
என்று குழப்பிகொள்கிறான்

புரியாதவனாய் அறியதவனாய்
சித்தமிழந்து பித்தம்கொள்கிறான்

இவன் நித்தம் மதுவில் முழ்கி
முழுவதும் மெய்மறந்துவிடுகிறான்

இவன் மறைகிறான் புகழ் அற்று    (நிஜம்)
அவன் வாழ்கிறான் நிழல் அற்று   (கனவு)


Wednesday, August 12, 2015

இதழ்கள்

முத்தத்தால் யூத்தம்  செய்யாத இதழ்கள்
ஒருபுறமாய் துடிக்கிறது
மறுபுறம்  அமைதிகாக்கிறது
இடையில் இடைவேளை  நீழ்கிறது


Sunday, August 9, 2015

ஒவ்வொரு முறையும்

ஒவ்வொரு முறையும் ஆசை காட்டி
என்னை வரவழைத்து
என் முதுகில் குத்துகிறாய்

அதை அறிந்தும் நான் என்னையே
உன்னிடம் ஒவ்வொரு முறையும்
ஒப்புவிக்கிறேன்

இன்னும் என் அன்பை
நீ புரிந்து கொள்வதாய் இல்லை

ஒவ்வொரு முறையும்
நான் என் நெஞ்சையல்லவா
உன்னிடம் காட்டிகொண்டிருக்கிறேன்
அதை பாராமல்
நீ ஏன் என் முதுகில் குத்திகொண்டிருக்கிறாய் ?


அன்பே நிரந்தரம்

அழகு காலத்தால் சிதைந்து போகும்
அன்பு அப்படியல்ல
என்றும் மாறாதது
இதுவே உண்மை
அழகை எண்ணி அன்பை இழந்து விடாதே
அழகு அபத்தம்
அன்பே நிரந்தரம்
Love is Eternal





Saturday, August 8, 2015

கவிதை ஒன்று எழுதுகிறேன்

கவிதை ஒன்று எழுதுகிறேன்
அதன் எழுத்தின் வடிவிலே
நான் உன்னை  வரைய முயல்கிறேன்

என் எண்ணத்தில் எண்ணியதை கறைகிறேன்

கால் வயதின் கண்ணி நீ
காய்ச்சாத பால் வெளி நான்

அகல கலால் உன்னை அளக்கிறேன்
ஆராய்ச்சிகளால் அழ்மனதை துளைக்கிறேன்

நெற்றி பொட்டை தாண்டி
புருவத்தில் வழக்கி உன் கண்களில் சிக்கி கொள்கிறேன்

காம நெடியிதனில் கண்ணீராய் வழிந்து
கண்ணத்தை கடந்து இதழ்களில் உப்பென கரைகிறேன்

தொண்டை குழிதனில் திமில் நழுவி கொள்ளவே
மார்தனில் மோதி மிதமென மிதக்கிறேன்

இடைதனில் கரை சேர்ந்து வனம்தனை கடந்து
சுமைகளை இறக்கி சுனைதனில் மூழ்கி சுடேற்றிகொண்டேன்

தளிர் தனை கிள்ளி  தேன் தனை சுவைத்து
தெம்பேற்றி ,தென்னை குருத்தோலையில் பால் இறக்கி
தண்டில் நார் உரித்து ,முழங்கால் பணிந்து
முகம்தனை பாதம் பதித்து கொண்டேன்

என்ன வடிவம் என வியக்கிறேன்
உயிர் தந்த சிர்ப்பிதனை நினைக்கிறேன்

உன்னை வரையவே
வண்ணங்களில் என்னையும்
கலந்து கொண்டேன்

யாரடி நீ யாரடி
 என் முன்னே வந்து கூரடி

உன் காதல் இன்னாதென்று
உள்நெஞ்சை தொட்டு நீ கூரிடவே
கவிதை முழுமையடைகிறது


Wednesday, August 5, 2015

மழை நான்

மேகத்தை பிரிந்து பொழியும் மழை நான்
காற்றில் சாரல்லாகிறேன்
அணைதாண்டி வெள்ளமாகிறேன்
ஆற்றோடு உறவாகிறேன்
கடலோடு கலவையாகிறேன்
கரைகளில் ஈரமாகிறேன்
அனல்தனில் காய்ந்து போகிறேன்
நீராவியாகி மீண்டும் மழையாகிறேன்

செல்லும் இடம் அறியேன்
நான் போகும் சாலை முடிவதில்லை


Sunday, August 2, 2015

ஊடலும் கூடலும்

அவளால் உண்டான காதல் நோவால்
நான் நோடிவதுதான் அவளுக்கு மிகவும் பிடிக்கும்

இந்த ஊடலின் சுகம்
மன வேதனையை கூட்டும்

கூடலின் எண்ணத்தை (இன்பத்தை)
தேகம் முழுவதும் கொண்டு சேர்க்கும்




Saturday, August 1, 2015

முதுமையில் ஞானம்

முதுமையில் 
சோர்ந்து சாய்ந்து
கால்கள் விழுந்து
கைகள் மடிந்து 
வாய்குளறி 
வழுக்கி வருகிற 
உளறல் வார்த்தைகள் 
தெய்வ ஞானத்துக்கு ஒப்பானது 


பூங் சிறகுகள்

பூங் சிறகுகள் விரிந்ததே விரிந்ததே
வான் நிலவிலே வெள்ளி ஒளிர்ந்ததே ஒளிர்ந்ததே

(காற்றில் காதல்  கொஞ்சம் மிதந்து  வந்ததே வந்ததே) (Background)

ல ல லலலல லா ல லல லலல லா

என்ன ஆச்சோ தெரியலையே ஹே
என்ன ஆச்சோ புரியலையே ஹே

ல ல லலலல லா ல லல லலலலா