எழுந்து முன்னே வா
உண்மை உறங்காது
உடைந்திடும் உள்ளம்
எளிதில் உறங்காது
உன் மூச்சின் தீ
உன் எதிரியை பொசுக்கும்
நீ வீர நடை போடு
உன் சொல்லுக்கே
உலகம் கட்டுப்படும்
கயவர் கூட்டம்
உன் நிழலை கூட கண்டு அஞ்சும்
எழுந்து முன்னே வா
வாழ்க்கை வாழ்வதற்கே
நீ பலி ஆடு அல்ல
பயந்து ஒதுங்காதே..
வானம் வரை உனதே
விடியல் வரும் என்று காத்து நிற்காதே
வாள்கள் உறைக்கு சொந்தமில்லை
எழுந்து எடுத்து வீசு
உரைக்கும் வரை வீசு
உண்மை உறங்காது
உடைந்திடும் உள்ளம்
எளிதில் உறங்காது
உன் மூச்சின் தீ
உன் எதிரியை பொசுக்கும்
நீ வீர நடை போடு
உன் சொல்லுக்கே
உலகம் கட்டுப்படும்
கயவர் கூட்டம்
உன் நிழலை கூட கண்டு அஞ்சும்
எழுந்து முன்னே வா
வாழ்க்கை வாழ்வதற்கே
நீ பலி ஆடு அல்ல
பயந்து ஒதுங்காதே..
வானம் வரை உனதே
விடியல் வரும் என்று காத்து நிற்காதே
வாள்கள் உறைக்கு சொந்தமில்லை
எழுந்து எடுத்து வீசு
உரைக்கும் வரை வீசு