Wednesday, December 18, 2013

பெண்ணே கண்ணே

ஒ பெண்ணே பெண்ணே
  சிறு துன்பம் தாளாது
உன்தன் கண்ணே கண்ணே

  காயங்கள் சொல்லும் நியாயங்கள்
காற்றிலே கலையும் கனவுகள்

  மனதிலே மௌனிக்கும் நினைவுகள்
மலரிலும் மெல்லிய இதழ் இவள்.


Saturday, December 14, 2013

காதல் போதும்



காதல் சொல்லும்
கண்கள் போதும்

கவிதை பொழியும்
இமைகள் போதும்

கூந்தலில் வீசும்
வாசம் போதும்

முத்தம் பேசும்
இதழ்கள் போதும்

தொட்டு செல்லும்
விரல்கள் போதும்

தெவிட்டாத உன்
அன்பு போதும்
( பிரிவிலும் உடன்வரும்
நினைவுகள் போதும் )

( நாணல் போதும் )
ஊடல் போதும்
கூடல் போதும்
காமம் போதும்

Friday, December 13, 2013

ஒருமாற்றம்

என்னுள் 
சிறு திசை மாற்றம்
பெரும் தடுமாற்றம்


என்னுள்
உருமாற்றம் ஒருமாற்றம்
பெருமாற்றம்




Tuesday, November 26, 2013

தேடி தேடி பார்க்கிறேன்

தேடி தேடி
பார்க்கிறேன்

தேய்பிறை போல்
தேய்கிறேன்

விழி ஓரம்
நீர் துளி
வழிந்தொடுதே......
வழிதேடுதே..........

இரு தோள்களில்
உறவாடுதே

உயிர் நோவுதே........


Saturday, November 23, 2013

என்னை மறந்து விட்டேன்



மறந்து விட்டேன்
என்று
நினைத்து விட்டாள்
என்னை

இதழ்களில் அவள் பெயர்
மொழிய வைத்தாள்

விழிகளில் நீர் துளி
பெருக வைத்தாள்

கடந்து செல்கிறாள்
கண்டும் காணாமல்

களவுக் காரி
கள் நெஞ்சு காரி

(ஊமை மாயம் செய்கிறாள் )

Tuesday, November 12, 2013

துறவி

அதிகாரம் கலைத்து விட்டேன்
ஆட்டத்தை முடித்துக்கொண்டேன்

அரியணை துறந்து
அடிமையாக மாறினேன்

தோல்விக்கு முன்
துறவறம் புகுந்துகொண்டேன்


Friday, November 8, 2013

அவளை இரசித்தேன்

அவள் பின்னிய கூந்தலில்
சிறு பூங்காடு

நெற்றியில் சரிந்து விழும்             
அந்த ஒற்றை முடி                            

சின்னச்சிறு பொட்டு
இமை மறைக்கும் அந்த ஓரப்பார்வை
மெல்லியப் புன்னகை

நகம் கடிக்கும் செவ்விய இதழ்
நாணிய தலை.
முனுகிய வார்த்தைகள்
மூடிய அங்கங்கள்

கோணி நின்று
கால்விரல் மடித்து
விழி நோக்குவாள்




Thursday, November 7, 2013

துணிவு

துணிந்தவனுக்கு துரும்பும் தோள்கொடுக்கும்
நலிந்தால் எறும்பும் காலால் மிதிக்கும்


Monday, October 28, 2013

சித்திரம் பொழிகிறாள்



சித்திரம் ஒன்று வரைகிறேன்
அவளுக்கு நிழல் முகம் தருகிறேன்

கனவில் வருகிறாள்
கவிதை மொழிகிறாள்

பேசும் பேச்சில்
இசை மழை பொழிகிறாள்

தொடுகிறாள் தோழியாய்
தேற்றுகிறாள் காதலியாய்

கண்விழிக்கும் பொழுது
கனவோடு காணாமல் போகிறாள்.

Friday, October 18, 2013

சொல்லில் அல்லா உணர்வு

முதன் முதலில்
உன் பார்வையும் என் பார்வையும் சேர்ந்த பொழுது
ஒரு உணர்வு
அது
சொல்லில் அல்லா உணர்வு

பெண்ணே
உன் பெயர் சொன்னால்  போதும்
 அது                                                            (என் நாவிற்கு இனிமை சேர்க்கும்)
என் வானத்தில் விண்மீன் தூறல் போல்
இதயத்தை வருடி செல்லும் .

நேரம்
 என்பது
உன் நினைவினால் கரைந்து ஓடும் .

உன்னை பார்த்தாலே
என் தலை மேகம் முட்டும்
உற்ச்சாகம் உயிரை தட்டும்

உன்னை காதலிக்க
காத்து காத்து
காற்றாய் திரிகிறேன் .



Monday, October 14, 2013

வலிகளின் விருட்ச்சம்



மனதின்
வலிகளை புதைத்துவிடதே
விருட்ச்சமாய் வளர்ந்து
வேர்ருன்றி நின்றுவிடும்.

(மாற்று)

மனதின்
வலிகளை புதைத்துவிடதே
வேர்ருன்றி நின்று
விருட்ச்சமாய் வளர்ந்து விடும்.

Tuesday, October 8, 2013

நினைவே போதும் நிஜமாகும்


கனவே மெய்
கனவே மெய்

நினைவுகளே நினைவுகளே
மெய் மெய்

நிஜம் நிஜம் என்பதே இல்லை

நினைத்தபடி நடக்காது
நிஜம் நிஜம்

நினைக்கும் மாத்திரத்தில்
நிழலாடும் நினைவுகள்
மாறாது மாறாது

நினைவே நிஜம்
கனவே நிஜம்


Saturday, October 5, 2013

பெண்ணே மனசு

பெண்ணே உன் மனசு
பூவை  போல் ஒரு தினுசு


பாவை

பாவை உன் பார்வை பட்டால்
என் கல் மனதும் கரையுதடி

நீ  தலை சாய்த்து வருடும் கூந்தலில் 
விண்மீனும்  சீக்குதடி
உன் வில்லம்பு புருவத்தில்
என் நாடி துடிப்பே அடங்குதடி 

நாவி கமலம் மணக்குதடி,அதில்
என் மனம் நாதி தெரியாமல் போகுதடி



Tuesday, October 1, 2013

வெட்கம் மீள்கிறேன்




குறு குறு கருமேகம் மழையால்
என் தேகம் தொட்டு செல்லும்

சில்லென்று வீசும் காற்று
என் பெண்மையை சீண்டி போகும்

காளையர் பார்வையில் சிக்கிக்கொள்ளும்
என் கருங்கூந்தலும்   கருவிழி மையும்
மாதம் தீண்டும் திங்களும் பௌர்ணமியும்
என் மனதை களவு கொள்ளும்

வெட்கம் முறிக்க நெட்டி பறிக்கிறேன்
ஊமை சொல்லால் காதல் மீள்கிறேன்.

(காதலன் நினைவுகள்)
மெல்ல செல்லும் மடிந்து செல்லும் ஒடிந்து செல்லும்
அவன் மட்டும் என்னை கண்டு செல்வதே இல்லை


Thursday, September 19, 2013

உயிர் பொய்

வீழியோடு வீழி கொத்து
வீதி ஊலா காண்கிறோம்

இதழோடு இதழ் சேர்த்து
இலக்கியம் இசைக்கிறோம்

உடலோடு உடல் பிணைந்து
உயிர் பரிமாறுகிறோம்


Thursday, August 29, 2013

சுமக்கிறேன்

காலையும் நீயே
மாலையும் நீயே
கனவிலும் நீயே
கவிதையும் நீயே

தேடி தேடி பார்கிறேன், தேய் பிறை போல் தேய்கிறேன்,
காதலே கவிதையாய் காகம் போல் கரைகிறேன்.

கனவிலும் நினைவிலும் உன்னை தானே சுமக்கிறேன்.


Saturday, July 20, 2013

மறுதலித்தாய்



காதல் ஈரமாய்
மனதின் ஓரமாய்

நினைவுகள் கனவாய்
அவள் பெயர் உணவாய்

இரவுகள் சுருக்கெழுத்தாய்
நீ மட்டும் குறுக்கெழுத்தாய்

இல்லை என்ற சொல்லில் 
ஏன் என்னை மறுதலித்தாய்

Saturday, June 22, 2013

தோழன் தோழி



தோள் கொடுப்பான் தோழன்
தொல்லைகள் கொடுப்பாள் தோழி 

Sunday, June 16, 2013

நம் சந்திப்புகள்

எதிர்பாராமல் பலமுறை நம் சந்திப்புகள்  நிகழ்ந்ததுண்டு
எதிர்பார்கிறேன் பலமுறை மீண்டும் நிகழ வேண்டும் நம் சந்திப்புகள்


Wednesday, May 29, 2013

உள்ளத்திலே ஒரு ஒளி விளக்கு

பாட்டுக்கு எதுக்கு மெட்டு
ராகம் தாளம்
பாதையே வேண்டாம் காற்று
வந்து சேரும்

உள்ளத்திலே ஒரு ஒளி  விளக்கு
ஓயாமலே ஒளி தரும் எனக்கு

எதிர்காலம் புகழ் என்னை சுமக்கும் நேரம்
வரும் வேலை தூரமில்லை

டு பெ continued .....


Tuesday, May 14, 2013

காதல் தீவு

                                                                   காதல் தீவு

காதல் என்னும் தீவில் தன்னந்தனியே
மாட்டிக் கொண்டேன்
தரைதட்டிய கப்பல் போல்
தள்ளாடி கவிழ்ந்து கிடக்கிறேன் (விட்டேன்)

மீட்பது யாரடி மீண்டும் ஊர் சேர வழி கூரடி

கொதிமணலில் மனம் வேகுதடி
உன் நினைவுகள்  நண்டு பிடி பிடிக்குதடி

திறந்த வெளியில் வாசல் கதவு தேடுகிறேன்
தீராத தாகத்தால் உன் பெயரை உமிழ் நீரில் மெல்லுகிறேன்

காத்திருப்பது போதுமடி கண்டும் காணாமல் செல்வாயடி (செல்லாதடி)

வாழ்வா சாவா என்ற இடைநிலையில், இந்த பிரிவின்
தவிப்பை தாங்கும்(மா)(மோ)  இந்த இதயம்(நெஞ்சம்)

தள்ளாட்டம் கொள்ள வைக்கும் தடைகளின் காயம்

இந்த காதலை கடக்க பாய்மரம் ஏறுகிறேன்
பாரம் தாங்காமல் மீண்டும் காதல் கரை முட்டுகிறேன்

வாழ்வின் அலை சுற்றி பொங்குதடி
ஊரே  ரீசப்த்தமாய் கைகொட்டி சிரிக்குதடி

போதுமடி போதுமடி
திசை தெரியாமல் நீந்தி வருகிறேன்.

உன் கலங்கரை கண்களால் எனக்கு வழிகாட்டடி .
என் வாழ்வில் ஒளி கூட்டடி .

Thursday, April 25, 2013

தனிமையுடன் ஒரு பயணம்



தனியே நடக்கிறேன்
தனியே சிரிக்கிறேன்
தனியே தவிக்கிறேன்

தனிமையுடன் படுக்கிறேன்
தனிமையுடன் விழிக்கிறேன்
தனிமையுடன் வாழ்கிறேன்

தனியே தன்னந்தனியே
ஒரு பயணம் தனிமையுடன் !

Thursday, April 18, 2013

கண்மூடி கவலைகள்



கண்மூடி திறந்தால் கவலைகள் போய்விடுவதில்லை 
மரணமேயல்லாமல் பயணங்கள் முடிவதில்லை 


Monday, April 8, 2013

போராளடா ..........



என்ன ? என்ன ? திக்கி திக்கி பேச ...........!
மனசு மவுனமா போச்சி

கண்கள் உன்ன காண
தாவிய தவிக்குது

காடு  மேடு எல்லாம்
இந்த கால்கள் தேடுது

வாசல் வழிய  பார்த்து
வயசு கரையுது

சொந்தம் பந்தம் எல்லாம் வேட்டி விடும்
சடங்கா  போச்சி

அருகில் உன்ன பாத்த
ஆயுள் கூடுது

இதழை  தொட்டு பார்க்க
இந்த பூவே வாடுது


என்ன தப்பு செஞ்சன்
என்ன தள்ளிவிட்டு போற

சொல்லாமல்
ஏங்கவிட்டு
தவிக்கவிட்டு
போராளடா ..........







Friday, April 5, 2013

விடு விடு


எனக்காக என்னை ஒரு முறை
காதலித்து விடு
பிறகு உனக்காக என்னை பலமுறை
வெறுத்து  விடு 

காதல் வரலாறானோம் !



நம் நினைவுகளை எல்லாம் திரட்டி
என் கனவுகளில்
கவிதை தொகுப்பு ஒன்று செய்துள்ளேன் .

நீயும் நானும்
வானத்தின் மேல
பூக்களின் வனத்தின் நடுவே
விண்மீன் சமைத்து

பவழ மாளிகை பந்தலில்
பந்தி போட்டு
உண்டோர் இளைப்பாற
நம் காதல் கதை காவியம்
மெல்வோம்

கண்கள் ஓரம்
வழிந்த நதியில்
நான் நீந்தி
இதழில் கரை சேர்ந்த
காமம் சொல்வோம் .

சாதி என்னும்
சாத்தானை
சங்கறுத்த
சங்கதியை
சங்கொலிப்போம்

வீடும் நாடும்
விட்டோடி
வீதி வீளகினடியில்
வீழித்திருந்த
வீனாக்களை
வீனாவுவோம்

வாலிபம் தொலைத்தோம்
வனாந்தரத்தில்
வந்துதோம்
வாழ்ந்தோம் செத்தோம்
வந்தோருக்கும்  வருபவருக்கும்
வரலாறானோம் !



Thursday, March 28, 2013

உயிர் தடம்




( சாலை ஓரம்
சோலை பூக்கள்
தேன் வண்டு தேடுது
செவி ஓரம் ரிங்காரம் பாடுது )

கானல் நிறாய்
கனவுகளில்
நீ வாராய்

தொடு வானம் வரை
என்னை கூட்டிகொண்டு
நீ போறாய் !


மலை தொடர் பள்ளதாக்கில்
என்னை தள்ளிவிட்டு
தாலாட்டு பாடுகிறாய்

வழிபோக்கனாய் உறவாடி
வேகமாய் கடந்துவிடுகிறாய் (கடந்துபோகிறாய்)

நீர் தடம்
நெஞ்சில் பதித்து
உயிர் தடம்
அழித்து விடுகிறாய் (விட்டாய்)


Friday, March 22, 2013

நிழலாய்

நிழலாய் தொடர்கிறேன்
நிஜத்தின் கால்களில் மிதிபட்டு


Thursday, February 28, 2013

மனசு மாட்டிகிச்சி

ஆதவன் எட்டி பார்க்கிறான்
உன் முந்தானையில் குடை பிடிப்போம் .

வங்க கடல் வலை விரிக்கிறாள்
கரையோரம் பாதம்  பதிப்போம்

மணல் வீடு கட்டி
வாசல் முன் குடி இருப்போம்

அலை நுரை அள்ளி
முகம் துடைப்போம்

மேகத்தின் நிழலில்
மென்முத்தம் பதிப்போம்

மாலை பொழுதில்
காதல் வேதம் படிப்போம்

காம கடலில் மூழ்கி
கரை ஏறுவோம்

-------------------------------------------------------------------------------

காதல் கடல் கரை
ஆதவன் எட்டி பார்க்கிறான்
உன் முந்தானையில் குடை பிடிப்போம் .

வங்க கடல் வலை விரிக்கிறாள்
கரையோரம் பாதம்  பதிப்போம்

மணல் வீடு கட்டி
 வாசல் முன் பள்ளிகொள்வோம்

நிலவு ஒளியில் சங்கமித்து
ஓர் உடலாய் புரிந்து (இசைந்து) கொள்வோம்





பாரு பாரு

புன்னகையை தொடுத்து பாரு
மனதை கொடுத்து பாரு

காதல் வரவில்லை என்றால்
விட்டுவிட்டு வேலைய பாரு



கண்மணியே பொன்மணியே




கண்மணியே பொன்மணியே வெண்ணிலவாய் நீ சிரிப்பாய்
  அமுதே மணி முத்தே நட்சத்திரமாய்  நீ ஜொலிப்பாய்

தேனே தென் தென்றலே கரும்பாய் நீ இனிப்பாய்
கோவிலே குலவிளக்கே தெய்வமகனாய் நீ இருப்பாய்

to be continued..........

காதல் வலி கொடுத்தேன்

உன் மனதை வண்ணங்களாய்  நான் நிறைத்தேன்
என் எண்ணங்களை நான் பதித்தேன்

கண்கள் வழி காதல் தொடுத்தேன்
காதல் வலி கொடுத்தேன்


Wednesday, February 13, 2013

அடிமை செய்கிறான்



யாரோ இவன்

கடந்து போகையில்

என் நாடி துடிப்பை களவு செய்கிறான்.


மீண்டும் எனை

அவன் பிடியிலிருந்து 

மீளாதவாறு

கனவுகளால் கட்டி இழுக்கிறான்


தூரம் செல்கிறான்

துறத்தி வருகிறான்

துங்க விடாமல்

என்னை தூக்கிலிடுகிறான்.


வருவானோ அடைக்கலம் தருவானோ

என்று அனுதினமும் ஏங்க வைக்கிறான்

பார்வையால்

மந்திரம் செய்கிறான்

ஆசையால்

என்னை தந்திரம்

செய்ய செய்கிறான்

என் மனதை தைக்கிறான்

பூவாய் கொய்கிறான் .

கருணை பாராமல்

காதலால் என்னை

அடிமை செய்கிறான் .



Monday, January 28, 2013

மௌன மொழியானாள்



விழியோடு விழி வைத்து 
இமைகள் மூடி
இதழோடு இதழ் பதித்துவிட்டாள் 

வேட்கம் தாங்காமலே 
தள்ளி நின்று கைகளால் கண் மூடி கொண்டாள் 

கண்மூடிய கைகளை விலக்கி பார்த்தேன் 
முகம் மலர்ந்து நின்றாள் 

கேள்வி கேளாமலே புன்னகையில் பதில் தந்தாள் 
சொல்லை மொழியாமலே மௌன மொழியானாள் 

ஏனோ என்னை மீண்டும்  கட்டியணைத்தாள்
வாய்பேச வாய்ப்பு தாராமலே வாய்யோடு வாய் வைத்து விட்டாள்.

சொக்கிய கண்களை திறந்து பார்த்தப்போது 
திரும்பி பாராமலே ஓடி விட்டாள்.

Sunday, January 27, 2013

சுமை தாங்கி





கவிதையின் சுமை காதல் 
காதலின் சுமை பிரிவு 


பிரிவின் சுமை கண்ணிர் 
கண்ணீரின் சுமை
ஆறுதல் 

ஆறுதலின் சுமை உறவு 
உறவின் சுமை  பொய்

பொய்யின் சுமை உண்மை 
உண்மையின் சுமை மௌனம்

மௌனத்தின் சுமை சப்த்தம்


நிழல்
நிழலின் சுமை நான் .

Saturday, January 26, 2013

காதலி காது கடிக்கும் வார்த்தை



காதலி காது கடிக்கும் வார்த்தையை
கேட்டதில்லை இந்த கன்னி மனம் ....
காற்று போன போக்கிலே போகுது இந்த பாவி குணம் 


காலம் கரைய கரைய கரையுமோ 
யான் கொண்ட காதலின் வீரியம் 

தருணம் வரும் வரும் என்றால் வருமோ 
தடைகளை உடைதால்ளல்லவோ தரிசனம் .


ஆணி ஆடல், ஆடி மாதம் தேடல், மார்கழி கூடல்,
மஞ்சத்தில் மணிமாடத்தில்  (ல) ஊடல்.

தன்னுள் எனை கொள்வாள்
சூசகம் (காதில்) மெல்ல  மென் மொழிவாள்  
என் காது கடிப்பாள் வெட்கத்(தால்)தில்  சூளுரைப்பாள் 




Saturday, January 12, 2013

வினைவி (மனைவி)




பசியோடு வந்தால்  தலை சாய்க்க மடி தருவாள் 
விடை தேடி வந்தால் முத்தத்தால் பதில் தருவாள் 


தோள் கொடுப்பாள் 
தேன் கொடுப்பாள் 
திமிர்கொண்டு தினறடிப்பாள்

நெருக்கத்தில் இருக்கத்தில் 
சுவாச காற்றின் சூட்டில் 
தலை முடி உலர வைப்பாள்.

பெரும் நிலையா ? தரும் நிலையா ?
இல்லை இடை நிலையா ?
சந்தேக மடை திறப்பாள் 


ஆசை தவிர்ப்பாள் 
ஆணவம் அழிப்பாள்
-----------------------------------------------------END----------------------------------------------------------------
அடங்கிட மறுப்பாள் 

வெறுப்பாள் துடிப்பாள் நடிப்பாள்  
வினை புறிவாள் உயிர் எடுப்பாள் 
உடன் கட்டை ஏறுவாள்        
லீலையின் விலை பகிர்ந்தளிப்பாள் . 




Friday, January 11, 2013

அடியே அடியே !



எத்தனை முறை எத்தனை ஆண்டுகளாய் 
என் காதலை சொல்வது 
அடியே இன்னுமா உனக்கு என் மென்மொழிகள் புரியவில்லை 
உன்னை புத்திசாலி என்றெண்ணி நான் முட்டாளாகிறேன்.


.................to be continued.

Wednesday, January 9, 2013

குழைந்த சோறு [உவமை]



பழைய வீட்டில் பழைய சோறு பாரம்பரியம் 
பழைய வீட்டில் புதிய  சோறு எகத்தாளம் 

புதிய வீட்டில் பழைய சோறு கலாச்சாரம் 
புதிய வீட்டில் புதிய சோறு விடியல்    

Tuesday, January 8, 2013

காதல் பாதாளம்

உன் கண்கள் போல் 
இதுவரை நான் விழுந்த படுகுழி ஏதுமில்லை
காதல் எனும் அகால பாதாளத்துக்குள் சிக்கி தவிக்கிறேன் 
உன் நினைவில் வருடங்கள் போவதே தெரியவில்லை 


Monday, January 7, 2013

கடலம்மா




கடலம்மா கடலம்மா 
கரையோரம் நுரையம்மா 
வங்ககரையொரம் விடியலம்மா 
வலையெல்லாம் இறையம்மா 
வழிகாட்டும் கலங்கரை விளக்கம்மா 
எங்கம்மா கடலம்மா 



உப்பு பவளம் முத்து 
கடல் சுமக்கும்  சொத்து 
பிரித்தெடுப்பதோ மனிதனின் சித்து           [எலே அம்மா கடலம்மா ]

இவ் வளத்தின் ஆசையில் பிடிக்கும் பித்து 
அசந்துவிட்டால் வீடு திரும்புவாய் செத்து 


வீதியுமில்லை எல்லையுமில்லை 
அச்சாணி காற்று 
அசைவதே அலைகளின்  கூற்று                 [எலே அம்மா கடலம்மா ]

துடுப்பின் நெருடல் 
அலைகளின் வருடல் 
படகு முன்  நழுவுதல் 
பின் நீர் விலகுதல்                                          

கடலம்மா கடலம்மா 
கரை வருவாய் துணையம்மா                     [எலே அம்மா கடலம்மா ]

பயணம் எது வரை 
பேரலை பெரும்காற்று விழுங்கும் வரை 


................................to be continued

Sunday, January 6, 2013

பொய் சொல்லி கொன்னவளே




பொய் சொல்லி கொன்னவளே
 நெத்தி பொட்டில் சாய்த்தவளே

உச்சி தல சுத்துதே
உள்ளங்காலு பறக்குதே


உள்முச்சி வாங்குதே இரத்தம் சுடேருதே
நி இல்லாமல் மனம் தாளாமல் உருகுதே

நி வரும் வாசல் வழி பார்கிறேன்
வாடிய மலராய் காய்கிறேன்



...........................................to be continued

Friday, January 4, 2013

கவிவதை



நீ  நான் நீ   நான் நீ நான் 
வா நீ  வா  நீ வா நீ 

விட்டு போ விட்டு போ                      [ (விட்டு விட்டு போ மொட்டு மொட்டு பூ)]
மொட்டு பூ மொட்டு பூ

ஊற்று தேன்  ஊற்று தேன்                [(தேன் தேன்  ஊற்று தெவிட்டாத பாட்டு)]
காற்று வாடை வாடை காற்று

கள் விழிகள் மொழிகள் கள்              [(விழிகள் கள் கள்  மொழிகள்)]
ஊடல் கள் காதல் கள்

இன்ப வதை பேரின்ப வதை 
தை கவிதை வதை கவிதை          [(வதை தை கவிவதை கவிதை )]